அஜகள ஸ்தந நியாயம் :-
ஆட்டின் கழுத்தில் முலை வடிவமாகத் தொங்கும் ஊன் பிண்டம் பயனற்றதாக இருப்பது போல உலோபி கையிலிருக்கும் பொருள் பயனற்றதாக இருக்கிறது.

அஸிதார விரத நியாயம்:-
இளைஞன் ஒருவன் , இளமையுள்ள பெண்னொருத்தியுடன் ஒரே படுக்கையில் இருப்பினும் அவள் பால் சிந்தை செல்லாதவனாய் புலனை அடக்கியிருத்தல்.இதுவே 'அஸிதார விரதம்.' பரதன் 14 ஆண்டுகள் கோசல நாட்டுக்கு வெளியில் (அயோத்திக்கு வெளியில் ) இருந்து ஆட்சி செய்து வந்ததையும், பின்பு இராமனிடம் ஒப்புவித்ததையும் இதுசேரும்.
1)அசுணம் இபம் விட்டில் மீன் வண்டு நியாயம் :-( 5 - ம் புலன் நுகர்ச்சியால் அழிகின்றவை ).

அசுணத்தைக் கொல்ல விரும்புவோர், முதலில் இனிய யாழை ஒலிப்பர். அவ்வொலி கேட்டு அது இன்புற்றிருக்கையில் திடீரெனப் பறையை அடிக்கவே , வெறுக்கத்தக்க பறையோசைக் கேட்டு அது மாய்ந்து விடுமாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends2 )யானை, ஊறு ஆகிய புலனால் அழிவது.(ஸ்பரிசத்தால் அழிவது ).
குளிர்ந்த ஸ்பரிசம் வேண்டிச் சேற்றில் இறங்கிக் கால் பதிந்து மீளமுடியாமல் மாளும்.

3) விட்டில் பூச்சி ஒளியால் அழிவது.
விளக்கின் ஒளியில் மயங்கி அதில் விழுந்து எரிந்து அழியும்.

4) மீன் சுவையால் அழிவது.


5) வண்டு கந்தத்தால் (வாசனை) அழிவது.

வாசவை மிகுதியால் தனக்குப் பகையாகிய சண்பகம், வேங்கை முதலிய மலர்களில் மொய்த்து உயிரிழக்கும். இவை எல்லாவற்றிற்குமே ஒவ்வொரு புலன் களே அழிவுக்குக் காரணம்.ஆயின் மக்களோ வெனில் ஐம்புல நுகர்ச்சிக்கும் ஒருங்கே இடமாகிய பெண்ணின்பால் ஆசை வைத்து அழிகின்றனர்