வாழ்க்கை மனை நீத்தவரும் , வாளரியும் , மாதங்க
வேட்கை மறந்திகழும் வேங்கடமே , தோள் கை வீழ
மாகவந்தனைக்கழித்தார் வாழ் இலங்கைப் பாதகரை
லோகவந்தனைக்கழித்தார் ஊர்
மாதங்க வேட்கை மறந்திகழும் - மாது + அங்க + வேட்கை + மறந்து + இகழும்
மாதங்க வேட்கை மறந்திகழும் - மாதங்க + வேட்கை + மறம் + திகழும்
மாகவந்தனைக்கழித்தார் - மா + கவந்தனை + கழித்தார்
லோகவந்தனைக்கழித்தார் - லோக + வந்தனைக்கு + அழித்தார்
மனை வாழ்க்கை நீத்தவரும் இல்லற வாழ்வைத் துறந்த முனிவர்கள்
மாது அங்க வேட்கை பெண்களின் உடம்பின் மீது காதலை
மறந்து இகழும் ஒழித்து அதனை இகழும் இடமும் ,
வாளரியும் கொடிய சிங்கங்கள்
மாதங்க வேட்கை மறம் திகழும் யானையை கொல்ல விரும்பும் வீரத்தோடு இருக்கும்
வேங்கடமே இடமுமான திரு வேங்கட மலையே
மா கவந்தனை பெரிய கபந்தனுடைய
தோள் கை வீழ தோள்களையும் , கைகளையும்
ழித்தார் வெட்டி வீழ்த்தியவரும் ,
வாழ் இலங்கைப் பாதகரை இலங்கையில் இருந்த அரக்கர்களை
லோக வந்தனைக்கு உலகத்தார் வழிபட்டதற்காக
அழித்தார் அழித்தவருமான திருமாலின்
ஊர் திருப்பதி ஆகும்


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
V.Sridhar