Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 094/104 : வேங்கடமே மா கவந்தனைக்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 094/104 : வேங்கடமே மா கவந்தனைக்

    வாழ்க்கை மனை நீத்தவரும் , வாளரியும் , மாதங்க
    வேட்கை மறந்திகழும் வேங்கடமே , தோள் கை வீழ
    மாகவந்தனைக்கழித்தார் வாழ் இலங்கைப் பாதகரை
    லோகவந்தனைக்கழித்தார் ஊர்

    மாதங்க வேட்கை மறந்திகழும் - மாது + அங்க + வேட்கை + மறந்து + இகழும்
    மாதங்க வேட்கை மறந்திகழும் - மாதங்க + வேட்கை + மறம் + திகழும்
    மாகவந்தனைக்கழித்தார் - மா + கவந்தனை + கழித்தார்
    லோகவந்தனைக்கழித்தார் - லோக + வந்தனைக்கு + அழித்தார்

    மனை வாழ்க்கை நீத்தவரும் இல்லற வாழ்வைத் துறந்த முனிவர்கள்
    மாது அங்க வேட்கை பெண்களின் உடம்பின் மீது காதலை
    மறந்து இகழும் ஒழித்து அதனை இகழும் இடமும் ,
    வாளரியும் கொடிய சிங்கங்கள்
    மாதங்க வேட்கை மறம் திகழும் யானையை கொல்ல விரும்பும் வீரத்தோடு இருக்கும்
    வேங்கடமே இடமுமான திரு வேங்கட மலையே
    மா கவந்தனை பெரிய கபந்தனுடைய
    தோள் கை வீழ தோள்களையும் , கைகளையும்
    ழித்தார் வெட்டி வீழ்த்தியவரும் ,
    வாழ் இலங்கைப் பாதகரை இலங்கையில் இருந்த அரக்கர்களை
    லோக வந்தனைக்கு உலகத்தார் வழிபட்டதற்காக
    அழித்தார் அழித்தவருமான திருமாலின்
    ஊர் திருப்பதி ஆகும்

    V.Sridhar

  • #2
    Re: 6. திரு வேங்கட மாலை 094/104 : வேங்கடமே மா கவந்தனைக&#3

    64 வருடங்களாக தமிழிலேயே பேசி தமிழிலேயே படித்து தமிழரிடையே பழகியும் கூட செய்யுள் தமிழ்
    ”வாழ்க்கை மனை நீத்தவரும் , வாளரியும் , மாதங்க
    வேட்கை மறந்திகழும் வேங்கடமே , தோள் கை வீழ
    மாகவந்தனைக்கழித்தார் வாழ் இலங்கைப் பாதகரை
    லோகவந்தனைக்கழித்தார் ஊர்”
    பதவுரை உதவியின்றி அர்த்தம் புரிந்து கொள்ள இயலாத நிலையில், ஸம்ஸ்க்ருதம்தான் மிகவும் கடினம் என்று இந்நாள் வரை நினைத்திருந்த எனது அறியாமை இன்று விளங்கியது.

    Comment

    • #3

      Working...
      X