ரகசியம் அம்பலமாகி விட்டதே என்று ஒரு நாடே ஆதங்கத்தில் இருக்கிறது . ராணுவ ரகசியமோ , அதிபரின் குடும்ப ரகசியமோ கிடையாது . நாடகத்தின் கடைசி சீன் !


அகதா கிறிஸ்டி தெரியாதவர்கள் குறைவு . கிரைம் நாவல்களின் தாய் . ஆங்கிலத்தில் 80 நாவல்கள் , 27 நாடகங்கள் , ஏகப்பட்ட சிறுகதைகள் எழுதி குவித்து ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இடத்தை வகிப்பவர் . அவர் படைப்புகள் 103 மொழிகளில் 400 கோடி பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன . அதைவிட அதிகம் விற்றது பைபிள் மட்டுமே . ' மவுஸ்டிராப் ' -- எலிப்பொறி -- இவருடைய பிரபல நாடகம் . ஒரு விடுதியில் கொலை நடக்கிறது . கொலையாளி யார் என்பது கடைசி காட்சியில் தெரியும் . ' இந்த முடிவை யாரிடமும் சொல்லாதீர்கள் ' என்ற வேண்டுகோளுடன் திரை இறங்கும்


சென் மார்ட்டின்ஸ் தியேட்டரில் நாட்கம் 63 ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது . லண்டனுக்கு செல்பவர்கள் தவிர்க்க முடியாத அனுபவம் . இதுவரை 24 ஆயிரம் ஷோ ; ஒரு கோடி பேருக்குமேல் பார்த்திருக்கிறார்கள் . எவரும் முடிவை வெளியே சொல்லவில்லை . அப்படி காப்பாற்றப்பட்ட ரகசியத்தை இன்டர்நெட் கலைக்களஞ்சியம் ' விக்கிபீடியா ' உடைத்துவிட்டது . இதனால் இங்கிலாந்து ,மக்கள் மனம் உடைந்து அரற்றுகிறார்கள் . நாடகத்தின் உரிமையை பிறந்தநாள் பரிசாக பெற்ற அகதாவின் பேரன் கொதிக்கிறார் . கூட்டம் குறையும் என்ற பயத்தால் அல்ல . 2011 மே 14 வரை ஹவுஸ்ஃபுல் , டிக்கெட் கிடையாது




--- தினகரன் தலையங்கம் , செப்டம்பர் 5 , 2010 ஞாயிற்றுக்கிழமை



Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends