டிப்ஸ்...டிப்ஸ்...* பாகற்காயின் கசப்பை நீக்குவதற்காக காயை வேகவைத்து நீரை வடித்தால் காயின் கசப்போடு சத்துகளும் போய்விடும் . எனவே பாகற்காயை நறுக்கி உப்பு , மஞ்சள் பொடி , வெல்லத்தூள் , எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கி அரைமணி வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும்


 * பெரிய அளவில் காபி தயாரிக்கும் போது டிகாஷன் சீக்கிரம் இறங்க வேண்டுமா ? காய்கறி வடிகட்டும் வடிதட்டை, ஒரு அகலமான பாத்திரத்தின் மேல் வைத்து, தட்டின்மீது ஒரு சுத்தமான, மெல்லிய வெள்ளைத் துணியைப் போடுங்கள் . கால் கிலோ காப்பிப் பொடி போட்டு லேசாக அழுத்தி, கொதிக்கும் வெந்நீரைக் கரண்டியால் ஊற்றுங்கள் . ஒத்தாற்போல ஸ்டிராங்கான டிகாஷன் விரைவில் தயார் 


* மாறுதலாக தயிர் பச்சடி செய்ய வேண்டுமா ? ஜவ்வரிசியை சிறிது நெய்யில் வறுத்து ஆறியதும் தயிர், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, கீறிய மிளகாய் சேர்த்துக் கடுகு தாளியுங்கள் .ஜவ்வரிசி சற்று ஊறிய பின் சூப்பர் பச்சடி தயார் .
* என்ன ' ஃபிரிட்ஜ்' ஜில் வைத்த சப்பாத்தி மாவு கறுத்து விட்டதா ? அடுத்தமுறை சப்பாத்தி மாவை பிசந்து எவர்சிவர் பாத்திரத்தில் வைப்பதற்குப் பதிலாக பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துப் பாருங்களேன் . நேற்று வைத்தாற்போல மாவு வெளுப்பாக இருக்கும் !

* கொசுவை விரட்ட உபயோகிக்கும் மேட் தீர்ந்து விட்டதா ? முதல் நாள் உபயோகித்த மேட்டின் மேல் சில துளிகள் வேப்பெண்ணெயை விட்டு, மறுபடி மிஷினில் வைத்து விடுங்கள் .கொசு வராது .
* மண் தொட்டிகளில் செடி வளர்ப்பதானால் இரண்டு வாரங்களுக்கு முன் தொட்டியில் காய்கறி, பழத் தோல்களை போட்டுக் கொண்டே வாருங்கள் . பாதி தொட்டி நிரம்பியதும் தேவையான அளவு மண், பிடி ஆம்பல் கலந்து விட்டு செடி நட்டால் தள தளவென வளரும் . தோல்களின் மேல் மண்ணைப் போட்டு மூடவும் . இல்லையென்றால் ' நாற்றம் ' எனக் கத்துவார்கள், வீட்டிலுள்ளோர் !
* வீடு பெருக்கும் துடைப்பம் கட்டையாகிப் போனால், நாம் உடனே தூர எறிந்து விடுவோம் . அப்படிச் செய்யாமல் அவற்றை ஒரே அளவு சீராக வெட்டி ( ஹேர் -- கட் செய்வது போல ) வைத்துக் கொண்டால், வீட்டு ஜன்னல், அலமாரி போன்ற இடங்களைச் சுத்தம் செய்ய உபயோகமாக இருக்கும்


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends-- மங்கையர் மலர் / நவம்பர் 2000