பல வருடங்களாக எங்க வீட்டில் உபயோகப்படுத்தும் பொடி. இங்கு சொன்ன அளவுக்கு 2 ஹர்லிக்க்ஸ் பாட்டில் அளவு வரும். வருஷத்துக்கு வைத்துக்கொள்ளலாம். எங்க கிருஷ்ணா இந்த பொடியை உருளைகிழங்கு காய் செய்யவும் உபயோகப்படுத்துவான். ரொம்ப நல்லா இருக்கும்.

தேவையானவை :

250 Gms. தனியா
500 Gms. கடலை பருப்பு
250 Gms. குண்டு மிளகாய்
100 Gms. கச காசா
25 Gms. மராட்டி மொக்கு
25 Gms. அன்னாசிப்பூ
25 Gms. பட்டை
25 Gms. வெந்தயம்

செய்முறை :

முதலில் வெந்தயத்தை வறட்டு வாணலில் நன்கு வறுக்கவும்.
பிறகு துளி எண்ணெய் விட்டு வாணலி யை துடைக்கவும்.
(Just grease the pan )
பிறகு மற்ற பொருட்களை தனி தனியாக வறுத்து எடுக்கவும்.
கருகாமல் வறுக்கணும் .
பிறகு மிக்சியில் பொடிக்கணும்.
அவ்வளவு தான்.
பிசிபேளா பாத் பவுடர் ரெடி.
பாட்டில் லில் போட்டு வைக்கவும்.
சுமார் 2 வருஷத்துக்கும் மேலாக நன்றாக இருக்கும்.

குறிப்பு: பிசிபேளாபாத் செய்யவேண்டும் எனில், குக்கரில் காய், துவரம் பருப்பு, அரிசி ஒன்றாக வைத்து விட்டு, வெளியே எடுத்ததும், இந்த பொடி போட்டு, புளி பேஸ்ட் போட்டு ஒரு கொதி விடலாம். அல்லது, சாதாரணமாக சாம்பார் செய்வது போல் இந்த பொடி போட்டு சாம்பார் செய்து விட்டு பிறகு சாதம் போட்டு கலக்கலாம். எப்படி பண்ணாலும் ‘அமிர்தமாக’ இருக்கும்.

கண்ண்டிப்பாக பக்கத்தாத்து மாமி கேட்பா “என்ன சமைக்கிற?” என்று
சமைத்து பார்த்து சொல்லுங்கள் யாரானும். அபப தான் மற்றவர்கள் ஆர்வம் வந்து முயலுவார்கள் .


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends