Announcement

Collapse
No announcement yet.

கறியமுது பொடி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கறியமுது பொடி

    பலசுவைகளில், பல முறைகளில் இதை தயாரிக்கலாம் நாம் சிலது பார்க்கலாம்.


    தேவையானவை:


    குண்டு மிளகாய் வற்றல் 10 -12
    தனியா 2 -3 ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
    கச கசா – 2 டீ ஸ்பூன்
    மிளகு 1 ஸ்பூன்
    தேங்காய் – துருவியது 1/2 கப் ( வரட்டு வாணலி இல் சிவக்க வறுக்கவும் )


    செய்முறை:


    எல்லாவற்றையும் அப்படியே பச்சையாக போட்டு அரைத்து வைக்கவும்.
    குருமா அல்லது கறி செய்யும் போது உபயோகப்படுத்தலாம்.


    குறிப்பு: தேங்காய் சேர்ப்பதால் ஃபிரிஜ் ல வைக்கவும்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    கறியமுது பொடி -2

    கறியமுதுக்கான பொடி - 2

    உளுத்தம் பருப்பு
    மிளகு
    மிளகாய் வற்றல்

    இந்த முன்றையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வறுத்து ஆறினதும் மிக்சி இல் அல்லது கலுரலில் பொடித்து வைத்துக்கொள்ளவும். இதை சேப்பங்கிழங்கு கறியமுது அல்லது வாழைக்காய் கறியமுது செய்யும் போது தூவலாம்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      கறியமுது பொடி - 3

      ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம்.

      முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.

      தேவையானவை:

      500gm தனியா
      500gm கடலை பருப்பு
      250gm குண்டு மிளகாய்
      பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு
      கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )

      செய்முறை :

      பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.
      தனி எ எடுத்துவைக்கவும்
      அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.
      நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
      உங்கள் APP தயார்.

      குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி
      கூட்டு, அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      Working...
      X