Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 100/104 : வேங்கடமே கோவத்தனக்கு&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 100/104 : வேங்கடமே கோவத்தனக்கு&




    தண் தாமரைச் சுனையில் சாதகமும் வேடுவரும் ,
    விண்டாரை நாடும் வேங்கடமே - தொண்டு ஆக்கி
    ஏவத்தனக்குடையார் என்னை , முன் நாள் எடுத்த
    கோவத்தனக்குடையார் குன்று




    விண்டாரை - விண் + தாரை
    ஏவத்தனக்குடையார் - ஏவ + தனக்கு + உடையார்
    கோவத்தனக்குடையார் - கோவத்தன + குடையார்




    தண் தாமரைச் சுனையில் குளிர்ந்த தாமரை உடைய சுனையில் வாழும்
    சாதகமும் சாதகப் பறவை
    விண் தாரை நாடும்மேகத்தின் மழைத் தாரையை விரும்பும் இடமும் ,
    வேடுவரும் வேடர்கள்
    விண்டாரை நாடும் திமிரினால் போர் செய்ய பகைவரைத் தேடும்
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    தனக்கு தொண்டு ஆக்கி தனக்கு அடியவன் ஆக்கி
    ஏவ என்னை உடையார் பணி செய்ய என்னை கொண்டவரும் ,
    முன் நாள் எடுத்த முன் நாளில் எடுத்துப் பிடித்த
    கோவத்தன கோவர்த்தன மலையை
    குடையார் குடையாக கொண்டவருமான
    குன்று திருமலை ஆகும்





    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 04-04-14, 22:38.
Working...
X