முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இணையம் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது சிறிய கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.
அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இணையத்தில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.

1. 168 மில்லியன் மின்னஞ்சல்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படுகிறது.
2. 1500+ புதிய பதிவுகள் வெளியிடப்படுகின்றன. மற்றும் 60+ புதிய பிளாக்குகள் துவக்கப்படுகின்றன.
3. 694,445 தேடல்கள் கூகுள் தேடியந்திரத்தில் நிகழ்கிறது.
4. 70+ புதிய டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.
5. 695,000+ புதிய அப்டேட்கள் பேஸ்புக்கில் பகிரப்படுகிறது மற்றும் 510,040 புதிய கமெண்ட்டுகள் பேஸ்புக்கில் போடப்படுகிறது.
6. 98,000 புதிய Tweets ட்விட்டரில் பகிரப்படுகிறது மற்றும் 320+ புதிய அக்கௌன்ட்டுகள் ட்விட்டரில் பதிவு செய்யப்படுகிறது.
7. யூடியூபில் 600+ புதிய வீடியோக்கள் பகிரப்படுகிறது மற்றும் 25+ மணி நேரம் வாசகர்களால் செலவழிக்கப்படுகிறது.
8. 1700+ பயர்பொக்ஸ் உலவி தரவிறக்கம் செய்யப்படுகிறது.
9. ஸ்கைப்பில் 370,000 நிமிடங்கள் பேசப்படுகிறது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends