Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 101/104 : வேங்கடமே பஞ்சவடி காட்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 101/104 : வேங்கடமே பஞ்சவடி காட்




    வாழ் அரியும் , சந்தனம் தோய் மாருதமும் , தாக்குதலால்
    வேழ மருப்புகுதும் வேங்கடமே - நீழல் அமர்
    பஞ்சவடி காட்டினான் , பாரளப்பான் போல் எவர்க்கும்
    கஞ்சவடி காட்டினான் காப்பு




    வேழ மருப்புகுதும் - வேழம் + மருப்பு + உகுதும்
    வேழ மருப்புகுதும் - வேழம் + மரு + புகுதும்
    பஞ்சவடி காட்டினான் - பஞ்சவடி + காட்டினான்
    கஞ்சவடி காட்டினான் - கஞ்ச + அடி + காட்டினான்


    வாழ் அரியும் காட்டில் வாழும் சிங்கம்
    தாக்குதலால் மோதி அடித்தலால்
    வேழம் மருப்பு உகுதும் யானைகள் தந்தம் உடையும் இடமும் ,
    சந்தனம் தோய் மாருதமும் சந்தன மரத்தில் பட்ட காற்று
    தாக்குதலால்மேலே படுதலால்
    வேழம் மரு புகுதும் மூங்கில் மணம் வீசும் இடமும் ஆன
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    நீழல் அமர் நிழல் உள்ள
    பஞ்சவடி காட்டினான் பஞ்சவடியில் வசித்தவனும் ,
    பார் அளப்பான் போல் உலகை அளப்பது போல்
    எவர்க்கும் எல்லோர்க்கும்
    கஞ்சவடி தாமரைத் திருவடிகளை
    காட்டினான் காண்பித்தவனுமான திருமால்
    காப்பு பாதுகாக்கும் இடம் ஆகும்


    V.Sridhar


Working...
X