கோவை இன்ஜினிய்ர் சாதனை .
குடிபோதையில் இருந்தால் பைக் , கார் ஸ்டார்ட் ஆகாது


information

Information

கோவை கல்வீரம்பாளையம் நால்வர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் ( 27 ) பி. இ எலக்ட்ரிக் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர் . பல கருவிகளை இவர் கண்டுபிடித்துள்ளார் . தற்போது , ' டிரங்கன் டிரைவ் கன்ட்ரோல் சிஸ்டம் ' என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார் . இக்கருவியை பைக் , கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களில் பொருத்தலாம் . கருவி சீல் வைக்கப்பட்டிருக்கும்

notice

Notice

டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடன் , கருவியிலுள்ள ஆல்கஹால் சென்சார் தானாக செயல்படும் . டிரைவர் குடித்திருந்தால் ' மன்னிச்சிடுங்க பாஸ் ... நீங்க குடிச்சிருக்கீங்க... உங்களால வண்டி ஓட்டமுடியாது ' என்று எச்சரிக்கை வரும் . மது குடிக்காவிட்டால் , டிஸ்பிளேவில் 3 இலக்க எண் தோன்றி மறையும் . அந்த எண்ணை நம்பர் பட்டனில் அழுத்த வேண்டும் . அத்துடன் ஓட்டுபவரிடம் உள்ள ரகசிய எண்ணை சேர்த்து அழுத்தினால் வண்டி ஸ்டார்ட் ஆகிவிடும் . வண்டியை ஸ்டார்ட் செய்த பிறகு மது குடித்தாலும் , 30 வினாடியில் கண்டுபிடித்து வண்டி நின்றுவிடும்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇதற்கு முன் இவர் 2004ம் ஆண்டில் , ' ஆட்டோமேட்டிக் ரூம் கன்ட்ரோலர் ' என்ற கருவியை உருவாக்கினார் . வீட்டு பூட்டை உடைத்து திருடர்கள் உள்ளே வந்தால் , இந்த கருவி சத்தமிடுவதுடன் அனைத்து விளக்குகளையும் எரிய வைக்கும் . இதற்கு போபாலிலுள்ள தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர் என்ற அமைப்பு தங்கப்பதக்கம் வழங்கியது


--- தினமலர் .27 . ஆகஸ்ட் 2010 .