Announcement

Collapse
No announcement yet.

ப்ரத்யாஹாரம் என்றால் என்ன?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ப்ரத்யாஹாரம் என்றால் என்ன?

    பாணினி இறைவன் நடராஜனாக ஆடிய தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில் உண்டான 14 சப்தங்களையும் கொண்டு, அவற்றை பதினான்கு ஸூத்திரங்களாக வியாகரணத்துக்கு மூலமாக வைத்துக் கொண்டு, “அஷ்டாத்யாயி”யை எழுதினார் என்பது மரபு. சம்ஸ்க்ருத வியாகரண மூலநூல் இதுவே. எட்டு அத்தியாயம் கொண்டதாதலால் “அஷ்டாத்யாயி” எனப்படுகிறது. மஹேச்வரனின் டமருவிலிருந்து உண்டானதால், அவை மாஹேச்வர ஸூத்ரம் எனப்படுகிறது




    1.அ இ உண்:
    2.ருலுக்:
    3. ஏ ஒங்:
    4. ஐ ஒளச்:
    5. ஹயவரட்;
    6. லண்;
    7. ஞம ஙண நம்;
    8. ஜ2 ப4ஞ்;
    9. க ட த ஷ்
    10. ஜ ப க ட த ஸ்2;
    11. க ப ச ட த சடதவ்;
    12. கபய்;
    13. சஷஸர்;
    14. ஹல் – இதிமாஹேச்வராணி ஸூத்ராணி.


    இந்த எழுத்துக்களைப் பாணினி எப்படி உபயோகப் படுத்திக் கொண்டார் என்றால் எழுத்துக்களைச் சேர்த்துச் சொல்ல ஒரு சுருக்கமான ஸம்ஜ்ஞையை (சமிக்ஞையை) இந்த ஸூத்ரங்களிலிருந்து பாணினி ஏற்படுத்திக் கொண்டார். 14 ஸூத்ரங்களில் ஒன்றின் முதலெழுத்தையும் மற்றொன்றின் கடைசி எழுத்தையும் சேர்த்துச் சொன்னால், நடுவில் இருக்கிற எல்லா எழுத்தையும் அது குறிக்கும் என்று பண்ணிவிட்டார். உதாரணமாக,’ஹயவரட்’ என்பதில் முதல் எழுத்தான ஹ-வையும், ‘ஹல்’ என்பதில் முடிவான ‘ல்’லையும் சேர்த்தால் ‘ஹல்’ என்றாகிறது. அது இடையிலுள்ள மெய்யெழுத்துக்கள் எல்லாவற்றையும் குறிக்கும். இப்படியே ‘அ இ உண்’ஆரம்பமான ‘அ’-வை ‘ஒளச்’முடிவான ‘ச்’- உடன் சேர்ந்த ‘அச்’என்பது உயிரெழுத்துக்களைக் குறிக்கும்.
    பதினாலு கோவைகளுக்கும் முதலெழுத்தாகிய ‘அ-வையும், கடைசி எழுத்தாகிய ‘ல்’ லையும் சேர்த்து, ‘அல்’என்றால் அது அத்தனை எழுத்தையுமே சேர்த்துக் குறிக்கும். அலோந்த்யஸ்ய என்பது அஷ்டாத்யாயியில் ஒரு ஸூத்திரம். ‘அல்’ என்றாலே எழுத்து என்று அர்த்தம் வந்துவிட்டது. இவ்வாறு அச், அல், ஹல் போன்றவை ப்ரத்யாஹாரம் என்று அழைக்கப் படுகின்றன.
Working...
X