Announcement

Collapse
No announcement yet.

ஆகாசவாணியில் சம்ஸ்க்ருத வார்த்தைகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆகாசவாணியில் சம்ஸ்க்ருத வார்த்தைகள்



    ஆகாசவாணி என்று இந்தியா முழுவதும் ஒலிக்கும் ஆல் இந்தியா ரேடியோ வானொலியில் சம்ஸ்க்ருதத்தில் தினமும் செய்திகள் ஒலிபரப்பாகின்றன என்று பலருக்கு தெரிந்திராது. “இயம் ஆகாசவாணி! ஸாம்ப்ரதி தின வார்த்தா: ஸ்ரூயந்தாம்!” என்று முழங்கும் சம்ஸ்க்ருத செய்திகள் தினம் இருமுறை ஒலிபரப்பாகின்றன

    information

    Information

    சம்ஸ்க்ருதம் பேச்சு மொழியாக பேசுகிறவர்கள் என்று பார்த்தால் இந்தியாவில் 2001 சென்சஸ் கணக்குப் படி சுமார் பதினான்காயிரம் பேர்கள் உள்ளனர். (இது தவிர சம்ஸ்க்ருத மொழி அறிந்தவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்). இருந்தாலும் மற்ற டோக்ரி, போடோ போன்ற மொழி பேசுகிறவர்களை விட சம்ஸ்க்ருதத்தில் பேசக் கூடியவர்கள் குறைவுதான்.
    ஆல் இந்தியா ரேடியோவின் தில்லி ஸ்டூடியோவிலிருந்து தான் இந்த சம்ஸ்க்ருத செய்திகள் ஒலிபரப்பாகின்றன. இந்தியாவிலேயே சம்ஸ்க்ருதத்தில் நிகழ்ச்சி ஒலி பரப்பாவது ஆல் இந்தியா ரேடியோவில் மட்டும் தான் என்கிறார் ஆல் இந்தியா ரேடியோவில் சம்ஸ்க்ருத செய்திகள் வாசிக்கிற திவ்யானந்த ஜா அவர்கள்.





    notice

    Notice

    “பஹுஜன ஹிதாய, பஹுஜன ஸுகாய!” – பலரது நன்மைக்கும், பலரது சுகத்துக்காகவும் என்பதே ஆல் இந்தியா ரேடியோவின் எழுச்சி வாசகமாக (motto) உள்ளது. இதில் சொல்லாத செய்தியும் ஒன்று உண்டு: மற்றவர்கள் செல்லத் தயங்குகிற நிலைகளுக்கும் செல்ல ஆல் இந்தியா ரேடியோ துணிகிறது. வெறும் பணத்துக்காக, லாபம் சம்பாதிப்பதற்காக என்று மட்டும் இன்றி பாரதத்தின் செழுமையான மொழியியலை (Rich Linguistic Heritate) பாதுகாக்கவும் இந்த வானொலி நிலையம் ஈடுபட்டு வருகிறது.
    அரசாங்கத்தின் அதிகார துந்துபியாக ஆல் இந்தியா ரேடியோவை ஒதுக்கி விடுவது நாகரிக பாணியாக இருக்கலாம். ஆனால் திரைப்பட நிகழ்ச்சிகள் ஆக்கிரமிக்கிற எஃப்.எம் ரேடியோக்கள், லாப நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் சம்ஸ்க்ருதத்தில் ஓரிரு நிகழ்ச்சிகளாவது நடத்த துணிவார்களா?” என்று கேட்கிறார் ஆகாசவாணியில் ஹிந்தி செய்தி வாசிப்பாளர் திரு.ராஜேந்திர சுக் அவர்கள்.
    “தில்லி தலைமை செயலகத்திலிருந்து ஒலிபரப்பாகும் சம்ஸ்க்ருத செய்திகள் பழமையான இந்தியாவின் ஆன்மாவை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப் படும் ஒரு முயற்சியே” என்கிறார் திவ்யானந்த ஜா. வேதம், உபநிடதம், வால்மீகி ராமாயணம், காமசூத்திரம், வாஸ்து சாத்திரம் என்று சம்ஸ்க்ருதத்திலேயே இயற்றப் பட்ட பல படைப்புகள் நிரம்பிய பாரத பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்கின்றது இந்த ஐந்து நிமிட செய்திகள்” என்கிறார்.





    ஆகாசவாணியின் டைரக்டர் ஜெனரல் திரு,ஜி. மொஹந்தி “பொது ஊடகமாக இருக்கிற நாங்கள், தேவைப் படுகிறவர்களுக்கு லாப நோக்கில் செயல்ப்படும் சந்தையில் கிடைக்கப் பெறாத விஷயங்களையும் கிடைக்கச் செய்கிறோம்” என்கிறார்



    1936 ஆகாசவாணியாக இந்திய வானொலி சேவை துவங்கி நாற்பது ஆண்டுகள் கழித்தே 1974ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை ஒன்பது மணிக்கு சம்ஸ்க்ருத செய்தி சேவை துவங்கியது. ஏன் நாற்பதாண்டு கழித்து திடீரென்று சம்ஸ்க்ருத செய்திச் சேவை தேவை என்று ஆரம்பிக்கப் பட்டது? ஆகாசவாணியில் நீண்டநாளைய செய்தி வாசிப்பாளர் கூறுகிறார்: “நமது மக்களின் வழக்கம் எப்போதுமே நமது நாட்டு திறமைகளையும் பெருமைகளையும் மேற்குலகில் அங்கீகரிக்கப் பட்டபின்னர் தான் கண்டு கொள்வோம். சமஸ்க்ருதத்துக்கும் இதுவேதான் நடந்தது. 1960ம் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜெர்மனிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அங்கே ஒரு உள்ளூர் வானொலி நிலையம் சம்ஸ்க்ருதத்தில் நிகழ்ச்சிகளை வழக்கமாக ஒலிபரப்பி வந்ததைக் கண்டார்கள். அவர்கள் திரும்பி வந்து சம்ஸ்க்ருதத்தின் பிறப்பிடமான நமது பாரதத்தில் சம்ஸ்க்ருதத்திலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஏழு ஆண்டுகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டபின்னர் தான் சம்ஸ்க்ருத செய்திகள் துவங்கியது.
    இப்போது ஆல் இந்தியா ரேடியோ வானொலி நிலையம் தினம் தொண்ணூறு மொழிகளில் 647 செய்தி சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் தில்லியில் இருந்து மட்டுமே 33 மொழிகளில் 178 செய்திகள் ஒலிபரப்பாகின்றன. இவற்றில் சம்ஸ்க்ருத செய்திகளும் ஒன்று.
    “சம்ஸ்க்ருத செய்திகள் “சம்ஸ்க்ருத வார்த்தா:” என்ற பெயரில் ஒலிபரப்பாகின்றன. ஹிந்தி செய்திகளைப் போல “சமாச்சார்” என்று நாங்கள் சொல்லுவதில்லை. ஏனெனில் சம்ஸ்க்ருதத்தில் சமாச்சார் என்பது “நல்ல பழக்கம்” என்று அர்த்தம் வரும்.
    ஆல் இந்தியா ரேடியோவின் மற்ற மொழிச் செய்திகளைப் போலவே தான், ஆங்கில செய்திகளை மற்ற மொழி செய்தி துறைகளுக்கு எடிட்டர் அனுப்புவார். சம்ஸ்க்ருத துறையில் ஒரு செய்தி தயாரிக்க இருவர் ஈடுபடுவர். ஒருவர் ஆங்கில செய்தியை மொழி பெயர்ப்பார். பின்னர் ஒருவர் அதனை வானொலியில் வாசிப்பார். சம்ஸ்க்ருதத் துறையில் மொத்தம் பத்து பேர் பணி புரிகிறார்கள். இருபது வயதில் இருந்து அறுபது வயது ஆனவர்கள் வரை உள்ள இவர்கள் செய்தி மொழிபெயர்ப்பது, வாசிப்பது ஆகியவற்றை பகுதி நேரமாக செய்து வருகிறார்கள்.

    மதிப்பிற்குரிய பலதேவானந்தசாகர் தான் இறுதியாக இருந்த முழுநேர செய்தி வாசிப்பாளர். பகுதிநேர ஊழியர்கள் பலரும் இவர் பெயரை மரியாதையுடன் உச்சரிக்கிறார்கள். வாரணாசி சம்ஸ்க்ருத பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி பட்டம் பெற்ற இவர், ஆல் இந்தியா ரேடியோ முழுநேர செய்தி வாசிப்பாளராக அமர்த்திய மூவரில் ஒருவர். அவர் ஒய்வு பெற்ற பின்னர் உஜ்ஜையினி காளிதாச சம்ஸ்க்ருத அகாதமியில் இயக்குனராக பணிபுரிகிறார். ஆனாலும் இன்னமும் தில்லி வரும்போதெல்லாம் வானொலியில் செய்தி வாசிக்கிறார்.




    இந்த செய்திகளைத் தாண்டி சம்ஸ்க்ருத மொழியின் தீவிரமாக கற்க வேண்டும் என்று எண்ணுகிற மாணவர்களுக்கு மேலும் கற்க வழியுண்டு. அரசு ஆதரவில் ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத சம்ஸ்தான் பல்கலைக் கழகம் பல பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. அதே போல சம்ஸ்க்ருத பாரதி அமைப்பும் பல எளிய வகுப்புகளை நிகழ்த்தி வருகிறது. சம்ஸ்க்ருத மொழி தெரிந்த விற்பன்னர்கள் குறைவு ஆனால் அவர்களது சேவை செறிவானது.
    “தில்லி பல்கலைக் கழகத்தில் 400 சம்ஸ்க்ருத மாணவர்கள் உள்ளனர். இவற்றில் பாதிப்பேர் பட்ட மேற்படிப்பும் படிக்கிறார்.” என்று சம்ஸ்க்ருதத் துறைப் பேராசிரியர் மைதிலேஷ் குமார் சதுர்வேதி கூறுகிறார். “மற்ற துறைகளில் இடம் கிடைக்காவிட்டால் சம்ஸ்க்ருதத் துறையில் பலரும் பி.ஏ. படிப்பில் சம்ஸ்க்ருதம் படிக்கிறார்கள். ஏனெனில் இங்கே எப்போதுமே தேவைக்கு அதிகமாகவே இடங்கள் உள்ளன. ஆனால் முதுகலைப் படிப்பில் படிக்கிற மாணவர்கள் சம்ஸ்க்ருத ஆசிரியர்களாக பள்ளிகள் கல்லூரிகளில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிரமாக படிக்கிறார்கள். மேலும் சிலர் ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் பதவிகளின் நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க சம்ஸ்க்ருத மொழித் தேர்வு உதவும் என்பதற்காகவும் படிக்கிறார்கள்” என்கிறார்.
    வானொலி செய்திகள் சம்ச்க்ருத மொழி ஆர்வலர்களுக்கு ஒரு மனச்சாந்தி என்ற அளவில் மட்டும் இருப்பதில்லை. இந்த மொழியை நவீனப் படுத்தவும், நடைமுறைப் படுத்தவும் இது உதவுகிறது.
    2010ல் சம்ஸ்க்ருத செய்தித் துறை, நூதன சப்தாவளி என்கிற நூலை ஏற்படுத்தத் துவங்கியது. புதிய செய்திகளை மொழிபெயர்க்கும் பொது தேவைப் படும் புதிய சொற்களை இந்த நூலில் சேர்க்கத் துவங்கினர். ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியில் வருடா வருடம் புதிய ஆங்கில வார்த்தைகளை சேர்ப்பது போன்றது தான் இது – காலத்தை ஒட்டி மாற்றங்கள் புதியவற்றை புகுத்தும் முயற்சி. இன்டர்நெட் என்று சொல்வதற்கு அந்தர்ஜாலம் என்பன போல பல சொற்களை சேர்த்து புதுமைப் படுத்தி வருகிறார்கள் செய்தித் துறையினர்.



    சம்ஸ்க்ருத வார்த்தா: என்கிற செய்திகள் பொதுக் கலாசாரத்தில் மொழியை நடைமுறை பயான்பாட்டில் கொண்டு வரும் ஒரு முயற்சி ஆகும். 1994ல் தூரதர்ஷன் தொலைக்காட்சியிலும் தேசிய சானலில் சம்ஸ்க்ருத செய்திகள் துவங்கப் பட்டன. இப்போது தேசமெங்கும் சுமார் 90 வார இதழ்கள், அரை மாத மற்றும் மாதாந்திர பத்திரிக்கைகள் சம்ஸ்க்ருதத்தில் வெளி வருகின்றன.
    ஒரு வகையில் ஆகாசவாணியின் சம்ஸ்க்ருதத் துறை அந்த மொழியை நடைமுறைப் படுத்த பாடுபட்டு வருகிறது. இதில் ஈடுபட்டு வருகிறவர்கள் பழைய பஞ்சாங்க ஆசாமிகள் அல்லர். உதாரணமாக திவ்யானந்த ஜா இருபதுகளில் இருக்கிற கிதார் வாசிக்கிற இளைஞர். சம்ஸ்க்ருதத்தில் பாடல்கள் இயற்றியும் வருகிறார். அவரது அண்ணன் பரமானந்த் அவர்களும் ஆகாசவாணியில் செய்தி வாசிக்கிறார். அதோடு அவர் பல பரிசு பதக்கங்கள் பெற்ற புலவரும் கூட. காஷ்மீர் பிரச்சனையில் இருந்து, நகர வாழ்க்கை வரை பல சமூக விஷயங்களைக் குறித்து கவிதைகள் இயற்றியிருக்கிறார். இரு சகோதரர்களும் சம்ஸ்க்ருத ஆசிரியர்களாக முழு நேர வேலை இருந்தும், செய்தியும் வாசித்து வருகிறார்கள். இரண்டு மணிநேரம் செய்தி வாசித்தால் ரூ 340 கிடைக்கும். “எங்கள் செலவுகளுக்காக இந்த செய்தி வாசிப்பதில்லை. சம்ஸ்க்ருதம் இந்த நவீன உலகில் எவ்வாறு அமைகிறது என்பதை வடிவமைக்கும் முனைப்பில் இந்த செய்திகள் எங்களுக்கும் பங்களிக்கின்றன. இது எங்களுக்கும் மிகவும் திருப்தி அளிக்கிறது.” என்கிறார்


    notice

    Notice

    தினமும் காலை 6:55AM மணிக்கும் 7:10PM மணிக்கும் செய்திகள் ஒலிபரப்பாகின்றன





    • நன்றி (செய்தி மற்றும் படங்கள்): www.livemint.com
Working...
X