தேவையான பொருட்கள்:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsவாழைகாய் - 2
பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
இஞ்சி - 1 டீஸ்பூன் துருவியது
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க :

கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 /2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
கருவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

வாழைக்காயை அலம்பி இரண்டாக நறுக்கவும்.
குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஆறினதும், வெந்த வாழைக்காயின் தோல் நீக்கவும்.
வாழைக்காயை துருவி வைக்கவும்.
ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
கருவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு துருவிய வாழைக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
கீழே இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
அற்புதமாக இருக்கும்.
அவ்வளவுதான், சுவையான வெள்ளை வெளேர் என்கிற 'வாழைக்காய் பொடிமாஸ்' தயார்.

குறிப்பு: நீங்கள் தேங்காய் விரும்பினால் தேங்காய் சேர்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பினால் நீங்கள் மஞ்சள் பொடி சேர்த்து மஞ்சள் பொடிமாஸ் செய்யலாம்


இங்கே நான் இன்று செய்த பொடிமாஸ் புகைப்படம் இருக்கிறது

Click image for larger version. 

Name:	11042014725.jpg 
Views:	7 
Size:	62.3 KB 
ID:	1626