நாட்டில் பத்ம விருது படும்பாடு. எங்க மச்சானுக்கு ஒரு விருது தாங்க !
நாட்டின் உயர்ந்த விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் வி ஐபிகளின் உறவினர்களுக்கு அதிகமாக வழம்கப்பட்டுள்ளது அம்பலமாகி இருக்கிறது. வி ஐ பி.களின் பரிந்துரைகளின் பேரிலே இந்த விருதுகளை அவர்கள் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.


information

Information

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்றவை நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளாக கருதப்படுகின்றன. இந்த விருதுகள் ஆண்டு தோறும் குடியரசுத்தினத்துக்கு ஒரு நாள் முன்னதாக ஜனவரி 25ம் தேதி அறிவிக்கப்படும். ஜனாதிபதி மாளிகையில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடக்கும் விழாவில் ஜனாதிபதி வழங்குவார். இந்த விருதுகளுக்கு தேர்வு செய்யப்படும் நடைமுறையில் வி ஐ பிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது.

notice

Notice

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட விருதுகளில் யார்யாருக்கு எந்தெந்த வி ஐ பிகள் பரிந்துரை செய்தார்கள் என்ற தகவலை தருமாறு தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் மனு செய்திருந்தார். இந்த மனுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் சில ஆச்சரியமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

-- சண்டே ஸ்பெஷல் தினமலர்.. 10-11-2013.