Announcement

Collapse
No announcement yet.

கா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கா³ந்தி⁴ மஹாத்மாபி⁴: விரசிதம் “ஸத்யஸோ²த⁴நī

    மகாத்மா காந்தியின் சுயசரிதை உலகின் தலைசிறந்த புத்தக வரிசையில் முக்கியமான ஒன்று. இவ்வளவு ஆண்டுகள் கழித்து படித்தாலும் படிக்கும் இன்பமும், வாசகனை தன்னுள் ஈர்க்கும் வசீகரம் அதனிடம் உண்டு. “The Story of My Experiments with Truth” என்று ஆங்கிலத்தில் வெளிவந்த இப்புத்தகம் முதலில் மகாத்மா காந்தி தமது தாய் மொழியான குஜராத்தியில் எழுதியதன் மொழிபெயர்ப்பு தான். ஆம், நவம்பர் 1925 ஆண்டு முதல் பிப்ரவரி 1929 வரை அவர் எழுதிய சுயசரிதை அதே சமயத்தில் மகாதேவ் தேசாய் அவார்களால் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டு யங் இந்தியாவில் வெளிவந்தது.
    இப்போது இந்த சுயசரிதை உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் இயங்கி வரும் நவஜீவன் ட்ரஸ்ட் நிறுவனத்தார் அண்மையில் (2009) மகாத்மாவின் சுயசரிதை சம்ஸ்க்ருத மொழி பெயர்ப்பில் வெளியிட்டுள்ளனர். சமஸ்க்ருத வித்வான் ஹோசகரே நாகப்ப சாஸ்த்ரி என்பார் இம்மொழி பெயர்ப்பை செய்துள்ளார். “சத்ய சோதனம்” என்ற பெயரில் இப்புத்தகம் வெளிவந்துள்ளது. மகாத்மாவின் சுயசரிதையை ஐந்து பாகங்களாக பிரித்து அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார் ஆசிரியர். சாஸ்திரி அவர்கள் இப்புத்தகம் அச்சாகும் முன்பே தமது 85 வயதில் மூப்பு காரணமாக காலமாகிவிட்டார்.
    இந்த மொழி பெயர்ப்பிலிருந்து ஒரு பகுதி:
    “किं च संस्कृतं मे बहुक्लेशमदात् | रेखागणिते तावत्कण्डे करणीयं न किञ्चित् | संस्कृते पुन: सर्वस्यापि कण्ठपाठ: करणीय इत्यहमबोधिषम् । इदम् च चतुर्थश्रेण्याम् प्रारभ्यत । षष्टकक्षाम् प्रविष्टस्य मम हृदयमवसन्नमिवाभवत् । संस्कृतोपाध्यायैरस्माकं महान्परिश्रमोऽदायि | मन्ये बालकास्तावदिच्छन्तु वा नेच्छन्तु वा तदीयमन्त:करणम् तु तत्तद्विषयै: संपूरणीयनित्यभुत्तेषाम् प्रत्याशेति |
    சம்ஸ்க்ருதம் எனக்கு ஒரு சவாலாகவே இருந்தது. வடிவவியலில் (Geometry) எதுவும் மனப்பாடம் செய்யத் தேவை இல்லை. ஆனால் சமஸ்க்ருதத்தில் எல்லாமே மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைத்தேன். நான்காவது வகுப்பிலிருந்தே இந்த பாடம் துவங்கி விடுகிறது. நான் ஆறாம் வகுப்பை அடைந்த போது மிகவும் வருத்தம் அடைந்தேன். சமஸ்க்ருத ஆசிரியரும் எங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தினார்.
    संस्कृतवर्गस्य फार्सीवर्गस्य च कापि स्पर्धाभवत् | फारस्युपाध्याया मोलव्याख्यपण्डिता: सवच्छात्रान्न मृशम् दण्डयन्ति स्म | इतिही बालका: परस्परमालापन् | यथा – “फारसी किलातीव सुलभा भाषा | फारस्युपाध्याया अतीव साधव: | अमी बालकानाम् दयाम् दर्शयन्ति” इति | फारसीभाषाया: सौलभ्यमाकर्ण्य सञ्जातचापलोऽहम् एकस्मिन् दिने फारसीवर्गम् प्रविश्योपाविशम् | एतेन विषण्ण: संस्कृताध्यापको मामाकार्यैवमभ्यधात् | यथा “युष्मज्जनको वैष्णव इति कथं त्वया विस्मृतम् ? स्वधर्मसंबन्धिनीम् भाषाम् कथम् ण शिक्षितुकामोऽसि | मदीयशक्तिमतिक्रम्य बालका: संस्कृतमध्यापनीया इतिच्छा मे जागर्ति | यथा यथा पाठ: प्रौढिमानम् भजते तथा तथा तस्य स्वारस्यम् युष्मदनुभवागोचरो जायते | न खल्वेवम् त्वया मन्दोत्साहेन भाव्यम् | पुन संस्कृतवर्गमागत्य शिक्ष्यतां पाठ: | ” इति |
    சமஸ்க்ருத ஆசிரியர்களுக்கும் பார்சி மொழி ஆசிரியர்களுக்கும் இடையே போட்டி நிலவியது. பார்சி மொழி ஆசிரியர் மாணவர்களிடம் கடுமைஇன்றி இருந்தார். “பார்சி மொழி மிகவும் எளிது, ஆசிரியரும் சாது, எல்லா மாணவர்களையும் தயையுடன் நடத்துகிறார்” என்று மாணவர்கள் தமக்குள் பேசிக்கொண்டனர். பார்சி சுலபம் என்பது என்னை ஈர்க்கவே ஒரு நாள் பார்சி வகுப்பில் போய் உட்கார்ந்தேன். இதனால் சமஸ்க்ருத ஆசிரியர் மிகவும் வருந்தினார். என்னை அழைத்து, “உன் தந்தை ஒரு வைணவர் என்பதை மறந்து விட்டாயா? உனக்கான தர்மத்தின் தொடர்புடைய ஒரு மொழியை கற்க ஏன் உனக்கு ஆசையில்லாமல் போனது? உங்களுக்கு என் சக்தி, புத்தி அனைத்தையும் கொண்டு சமக்ஸ்ருதம் சொல்லித் தருவதே என் ஆசை. எந்தெந்த பாடங்கள் கடினமாக இருக்கிறதோ அதுவே போகப் போக சுவாரசியமானதாகும். மனதை தளரவிட வேண்டாம். மறுபடி சமஸ்க்ருத வகுப்பிலேயே வந்து உட்கார்” என்றார்.
    अहम् दयारसपरिप्लुतमेतद्वचनमाकर्ण्य नितराम् लज्जितोऽभवम् | उपाध्यायस्य प्रीतिवचन मनदर्तुमात्मा नान्वमनयत | अद्य खलु स्मरामि कृतज्ञतापुर:सरम् यत् कृष्णशङ्करपाण्ड्यामहाशायस्तदा ममोपाकरोत् | यावद्धि मया संस्कृतं तदा शिक्षितम् “तावतोऽप्यनभिज्ञतायामस्मात्पवित्र ग्रन्थेष्वासक्तिरेव मे दुरुत्पादाभविष्यत | इतोऽप्यतिशयेन संस्कृतं मया न शिक्षितमित्यह-मिदानीमनुतप्ये | हिन्दुजनेषु हि बालकेन वा बालक्या वा संस्कृतमवश्यमध्येतव्यमिति पश्चादव-गतोऽस्मि ||”
    இவ்வாறு அவர் சொன்னதைக் கேட்டு வெட்கமுற்றேன். அவரது அன்பை புறக்கணிக்க முடியவில்லை. இன்று கிருஷ்ண சங்கர பாண்ட்யா அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் சமஸ்க்ருதம் கற்றுக் கொண்டிருக்கவிடில் இப்போது நமது பவித்ரமான புத்தகங்களை படிக்க ஆர்வம் ஏற்பட்டிருக்காது. இந்துக்களில் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் அவசியம் சமஸ்க்ருதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.
    - சத்ய சோதனம் – முதல் பாகம் ஐந்தாம் அத்தியாயம் “उच्चविद्यालये”
    மிக அழகான சமஸ்க்ருதத்தில் ஒவ்வொரு அத்தியாயங்களும் எளிமையாகவும், சுவாரசியமாகவும், காந்தியின் வார்த்தைகளின் பொருள் திரிந்து போகாமலும் அருமையாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளரின் அசாத்தியமான சமஸ்க்ருத புலமையும், முயற்சியும் கண்டு வியப்படையாமல் இருக்க முடியாது. இப்படி ஒரு புத்தகம் சமஸ்க்ருதத்தில் அண்மையில் வெளிவந்திருப்பது, சமஸ்க்ருதத்தின் உயிர்ப்புத் தன்மைக்கு ஒரு சான்றும் கூட.
    நவஜீவன் ட்ரஸ்ட் இந்த புத்தகத்தை மிகக் குறைந்த சலுகை விலையில் அளிக்கிறது. இந்த புத்தகத்தின் விலை முப்பது ரூபாய் தான். தபால் செலவு சேர்த்தால் ஐம்பது – அறுபது ரூபாயில் இந்தியாவில் எங்கும் வாங்கலாம். இந்த புத்தகம் வாங்க கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    Navajivan Trust,
    P.O. Navajivan,
    Ahmedabad-380014 (Guj.), INDIA.
    Last edited by soundararajan50; 21-04-14, 10:13. Reason: to add the address
Working...
X