திருமண சூட்சும பொருத்தங்கள்.:

லக்னாதிபதி நீசமாக இருக்ககூடாது.. லக்னத்தில் நீச கிரகம் இருக்க கூடாது.
லக்னாதிபதி மறைவு ஸ்தானத்தில் இருக்கக் கூடாது.. மறைவு ஸ்தானம் என்பது லக்னத்திலிருந்து 3, 6, 8, 12 ஆவது வீடுகள் ஆகும்.

ஆண் பெண் இருவருக்கும் இரண்டாமிடத்து அதிபதி நீசத்தில் இருக்க கூடாது இருவருக்கும் இரண்டாமிடத்து அதிபதி மறைவு ஸ்தானத்தில் இருக்க கூடாது.. சுக்கிரனுக்கு லக்னத்திலிருந்து 3, 8 ஸ்தானங்கள் மட்டும் மறைவு ஸ்தானம்.

சந்திரன், புதன் குருவுக்கு 3,6,8,12 லக்னத்திலிருந்து எதில் இருந்தாலும் மறைவே. லக்னத்திலிருந்து 8 அல்லது 12 ல் சூரியன், செவ்வாய், சனி, ராஹு, கேது இருந்தாலும் மறைவு என்று பெயர்.

இரண்டாம் வீட்டில் பாவியான கிரஹம் இருவருக்கும் இருக்க கூடாது.

பொதுவான பாவிகள்.: சூரியன், செவ்வாய், சனி, ராஹு, கேது., தேய்பிறை சந்திரன், இவர்களுடன் கூடிய புதன்.

சுபாவமான சுபர்கள்:. குரு, சுக்ரன், வளர்பிறை சந்திரன், பாவிகளுடன் சேராத புதன்..

ஜன்ம லக்ன ரீதியான பாவிகள்;--

-லக்னம்.==============பாவிகள்.
-
மேஷம்:.====சனி, புதன், குருவுடன் கூடிய சனி.
ரிஷபம்=====சந்திரன், குரு, செவ்வாய்.
மிதுனம்====குரு, சூரியன், செவ்வாய் ,குருவுடன் கூடிய சனி.

கடகம்======சுக்ரன், புதன், சனி.
சிம்மம்=====சுக்ரன், புதன், சனி.
கன்னி======சந்திரன், குரு, செவ்வாய்.

துலாம்=====சூரியன், குரு, செவ்வாய்.
விருச்சிகம்=====சுக்ரன். புதன், செவ்வாய்.
தனுசு==========சுக்ரன், புதன்.


மகரம்.========சந்திரன், குரு.
கும்பம்=======சந்திரன், குரு, செவ்வாய்.
மீனம்=========சூரியன், புதன், சுக்ரன், சனி.

ஆண், பெண் இருவருக்கும் இரண்டாமிடத்தில் இந்த பாவிகள் இருக்க கூடாது..

லக்னத்திற்கு க்ளாக் ஒயிஸ் அடுத்த வீடு இரண்டாவது வீடாகும்.
இரண்டாமிடம்: வாக்கு, குடும்பம், கண், செல்வம், செல்வாக்கு பற்றியது.
வாக்கு தவறினால் நாணயம் தவறும்.

அந்தந்த லக்னத்திற்கு மறைவு ஸ்தனாதிபதிகள் சேர்ந்தோ தனிதனியாகவோ இரண்டாமிடத்தில் இருவருக்கும் இருக்க கூடாது.

ஒவ்வொரு லக்னத்திற்கும் , 3, 6, 8, 12 இட அதிபதிகள் தனியாகவோ, சேர்ந்தோ இரண்டாமிடத்தில் இருவருக்கும் இருக்க கூடாது..

இரண்டாமிடம் கெட்டு போன பெண் ஜாதகம் உள்ளவளை மணந்து கொண்டால் வீடு, குடும்பம் ஆமை, அமீணா புகுந்ததாகி விடுகிறது.

ஆண் பெண் இருவருக்கும் இரண்டாமிடம் கெட்டு விட்டால் நித்ய கண்டம், பூர்ணாயுசு தான். செல்வ ஸ்தானம் கெடுவதால் பணக்கஷ்டம்..

ஆண் ஜாதகத்தில் இரண்டில் சனி இருந்தால் இரு மணைவிகள் வாய்பர் என்பது ஜோதிட விதி..

துலா லக்னத்தை ஆணோ பெண்ணோ பெற்றிருந்தால் அவர்களுக்கு இரண்டு இல்லற துணை அமைந்திடும்.

5, 7,11 அதிபதிகள் இணைவோ பார்வையோ இருந்தால் காதல் திருமணம் .

பெண்ணின் ஜாதகத்தில் லக்னமும், சந்திர லக்னமும் பெண் ராசியில் அமைந்திருந்தால் இந்த ஜாதகி பெண்ணாக இருப்பாள். ஆண் ராசியாக அமைந்துவிட்டால் ஆணாக இருப்பாள். பெண் ஜாதகத்தில். 7ல் சூரியன் இருந்தால் ஆணாகத்தான் இருப்பாள்


முதலில் ஆயுள் பொருத்தம் ; மன நிலை ஒற்றுமை, திருமணம் ஒன்றுக்கு மேல் உள்ளதா. வைப்பாட்டி வைத்துக்கொள்ளும் யோகம் உள்ளதா. ; மாங்கல்ய பலம் உள்ளதா/. தோஷ சாம்யம், தசா சந்தி பொருத்தம் பார்க்க வேண்டும்.

ஆயுள் பொருத்தம்: பாலாரிஷ்டம்: பிறப்பு முதல் எட்டு வயது வறை இருப்பது
அற்பாயுள்: எட்டு வயது முதல் முப்பது வயது முடிய. .மத்யம ஆயுள் முப்பது வயது முதல் எழுபது வயது வறை. பூர்ணாயுள்; 70வயதுக்குமேல்100 முடிய இருப்பது.
மற்றொரு கணக்கும் உள்ளது. அற்பாயுள் 33 வயது,வறை. மத்திம ஆயுள் 34 வயது முதல் 67 வயது.வறை. பூர்ணாயுள் 67 முதல் 100 வயது.வறை.

லக்ன அதிபதி லக்னத்தில் இருந்தாலோ லக்னத்தை பார்த்தாலோ பூர்ணாயுள்..

சர ராசிகள்;--மேஷம், கடகம், துலாம், மகரம்.
ஸ்திர ராசிகள்.----ரிஷபம், சிம்மம்,விருச்சிகம், கும்பம்.
உபய ராசிகள்----மிதுனம், கன்னி, தனுஸ், மீனம்.

ஜன்ம,லக்னம்/ சந்திர லக்னம் சர ராசியில் , ஜன்மலக்ன, சந்திர லக்னாதிபதிகள் சர ராசியில் இருந்தால் தீர்காயுள்.

ஜன்ம லக்ன சந்திர லக்னங்கள் சர ராசி லக்னாதிபகள் ஸ்திர ராசியில் உள்ளது மத்திம ஆயுள்,

ஜன்ம லக்ன /சந்திர லக்னங்கள் சர ராசியிலும், இதன் அதிபதிகள் உபய ராசியிலும் இருந்தால் அற்பாயுள்.

ஜன்ம சந்திர லக்னங்கள் ஸ்திர ராசி இதன் அதிபதிகள் உபய ராசி தீர்காயுள்.
ஜன்ம சந்திர லக்னங்கள் ஸ்திர ராசி இதன் அதிபதிகள் சர ராசியில் மத்திமம்
ஜன்ம சந்திர லக்னங்கள் ஸ்திர ராசி இதன் அதிபதிகள் ஸ்திர ராசி அற்பாயுள்..

ஜன்ம சந்திர லக்னங்கள் உபராசி இதன் அதிபதிகள் ஸ்திரம் தீர்காயுள்.
ஜன்ம சந்திர லக்னங்கள் உபய ராசி இதன் அதிபதிகள் உபயராசி மத்திமம்
ஜன்ம சந்திர லக்னங்கள் உபய ராசி இதன் அதிபத்கள் சர ராசி அற்பாயுள்.

ஜன்ம லக்னம் சர ராசி லக்னாதிபதி/ 8ம் அதிபதி சர ராசி தீர்காயுள்.
ஜன்ம லக்னம் சர ராசி லக்னாதிபதி 8ம் அதிபதி ஸ்திர ராசி மத்திமாயுள்.
ஜன்ம லக்னம் சர ராசி லக்னாதிபதி/ 8ம் அதிபதி உபய ராசி அற்பாயுள்.

ஜன்ம லக்னம் ஸ்திர ராசி லக்னாதிபதி 8ம் அதிபதி உபய ராசி தீர்காயுள்.
ஜன்ம லக்னம் ஸ்திர ராசி லக்னாதிபதி 8ம் அதிபதி சர ராசி மத்திமாயுள்.
ஜன்ம லக்னம் ஸ்திர ராசி ல்க்னாதிபதி 8ம் அதிபதி ஸ்திராசி அற்பாயுள்.

ஜன்ம லக்னம் உபய ராசி லக்னாதிபதி 8ம் அதிபதி ஸ்திர ராசி தீர்காயுள்.
ஜன்ம லக்னம் உபய ராசி லக்னாதிபதி 8ம் அதிபதி உபய ராசி மத்திமாயுள்.
ஜன்ம லக்னம் உபய ராசி லக்னாதிபதி 8ம் அதிபதி சர ராசி அற்பாயுள்.

சந்திரன் சந்திராசிக்கு அதிபன் , லக்னாதிபன் பலம்---சுபர் பார்வை, லக்னாதிபன் அதிக பலம், கேந்திரம்- சுபர் பார்வை. குரு லக்னத்திலிருப்பது

இவைகள் தீர்காயுள். லக்னாதிபதி, குரு கேந்திரம் கோணங்களில்பாபர் சம்பந்தம் இல்லாமல் இருப்பது லக்னாதிபதி, குரு கேந்திரங்களில் இருப்பது
தீர்காயுளை குறிக்கும்.

1, 4, 7, 10 ம் வீடுகள் கேந்திரங்கள் எனப்படுகிறது. 5, 9 ம் வீடுகள் கோணங்கள் எனப்படும்..

லக்னாதிபதியை விட 8க்குடையவன் அதிக பலம் பெற்று கேந்திரத்திலிருந்து
பாபர்கள் 8/12 ல் இருந்தால் மத்திமாயுள்..

தின ம்ருத்யு மற்றும் தின ரோகம் இவைகளில் ஜனித்தால் மரணமுண்டாகும். ஆனால் சந்திரன் பலம் பெற்று விட்டால் நன்மையே உண்டாகும்.

தின ம்ருத்யு: ஹஸ்தம், அவிட்டம் முதல் பாதம். விசாகம், திருவாதிரை
2ம் பாதம். ஆயில்யம், உத்திரட்டாதி 3ம் பாதம். பரணி மூலம் 4 ம் பாதம்.

தின ரோகம்:--ஆயியம், உத்திரட்டாதி 1ம் பாதம், பரணி, மூலம் 2ம் பாதம்.
திருவோணம், உத்ரம் 3ம் பாதம். ம்ருகசீர்ஷம், சுவாதி 4 ம் பாதம்..

விஷ கடிகை:--ஒவ்வொரு நக்ஷதிரத்திற்கும் விஷ கடிகை நேரம் உண்டு. இந்த நேரத்தில் லக்னம் அமைந்தால் மரணத்தை கொடுக்கும்

திதிகள்; நந்தா திதி: பிரதமை, சஷ்டி, ஏகாதசி; பத்ரா திதி: ;-த்விதியை, சப்தமி. த்வாதசி; ஜயா திதிகள்;- த்ருதியை; அஷ்டமி; த்ரயோதசி;

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsரிக்தா திதிகள்;--சதுர்த்தி, நவமி, சதுர்தசி; பூர்ணா திதிகள்;--பஞ்சமி,
தசமி, பெளர்ணமி//அமாவாசை

ஆரம்ப 2 நாழிகைகள் கடைசி 2 நாழிகைகள் (48 நிமிடங்கள்) திதி கண்டாந்தம்
எனப்படும்.மரணம் சம்பவிக்கும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி கடைசி 4 நாழிகைகள் ( 96 நிமிடங்கள்) அசுவதி, மகம்,மூலம் ஆரம்ப 4 நாழிகைகளும் கண்டாந்தம் என்ப்படும்.

கடகம், விருச்சிகம், மீனம், கடைசி 12 நிமிடங்கள். சிம்மம், தனுஸ், மேஷம்
ஆரம்பிக்கும் 12 நிமிடங்கள் ( அரை நாழிகை) லக்ன கண்டாந்தம் எனப்படும்.
வர்கோத்தம மாக வந்தாலும் மரணம் சம்பவிக்கலாம்...
.