Announcement

Collapse
No announcement yet.

How to perform Sandhi,Tarpanam while not well?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • How to perform Sandhi,Tarpanam while not well?

    How to perform Sandhi,Tarpanam while not well?
    ஸ்வாமின்
    அடியேன் தண்டு சமர்ப்பித்து நமஸ்காரங்கள்.
    அடியேனுக்கு கீழ்கண்ட விஷயம் பற்றி சில அறிவுரை அளிக்க வேண்டுகிறேன்.


    என் தமையனார் (பிராயம் 78) இருதினம் முன்பு வலது கை மணிக்கட்டு உடைந்து, அறுவை சிகிச்சை பண்ணி பிளாஸ்டர் கட்டு போட்டுக்கொண்டுள்ளார். அவர் பொருட்டு என்னை சந்தேகம்கள் நிவர்த்தி கேட்க்க சொன்னார்.


    1. அறுவை சிகிச்சை பொது யக்யோபவீதம் கழற்ற பட்டது. மீண்டும் இப்போது புதிதாக அணிய வலதுகை கட்டில் இருப்பதால் அவரால் மாற்றிக்கொள்ள இயலாது. இதற்க்கு என்ன பரிகாரம்?


    2. நித்திய சந்த்யவந்தனம் செய்ய இயலாது. இதற்க்கு மானசீக சந்தித்தான் வழியா?


    3. அமாவசை தர்பணதிர்க்கு என்ன வழி?


    தேவரீர் தயவு செய்து பதில் என்னக்கு அனுப்பினால் க்ருதக்யன் ஆவேன்.


    அடியேன்

    கோவிந்தகிருஷ்ணன் அழகர் தாசன்

    --
    Srivilliputtur Govindakrishnan Alagar






    1. அறுவை சிகிச்சை பொது ......... இதற்க்கு என்ன பரிகாரம்?,

    ..... பரிஹாரம் எதுவும் தேவையில்லை, யஜ்ஞோபவீதம் மறர்றிக்கொண்டால் போறும். மாற்றிக்கெர்ள்ளும்போது மட்டும் வலது கையின் நுனி மட்டும் உள் நுழைவதுபோல வைத்து மாற்றிக்கொண்டு, பின்னர் கழுத்தில் மாலையாக அணிந்துகொள்ளட்டும். அதுபோலவே சந்தியாவந்தனம் (மானசீகமாக) பண்ணும்போதும் வலது கை நுனி மட்டும் நுழைத்து வைத்துக்கொண்டோ, குறைந்தது வலது கையால் தொட்டுக்கெர்ண்டோ பண்ணட்டும்.

    3. அமாவசை தர்பணதிர்க்கு என்ன வழி?

    இவருக்கு தீர்த்தமாடிய சுத்தம் ஏற்படவேண்டுமானால், யாராவது ஒருவர், ஒவ்வொருமுறையும் இவரைத் தொட்டுவிட்டு, தொட்டுவிட்டு பத்துமுறை தீர்த்தமாடவேண்டும். கடைசீமுறை மடிவஸ்த்ரம் மாற்றிவிடரவேண்டும்.
    இவர் ப்ராசீனாவீதம் பண்ணிகொண்டு மந்திரங்களைச் சொல்ல பிள்ளையோ யாராவது ஒருவர் (ப்ராசீனாவீதம் தேவைியில்லை) தர்பணம் செய்து ஜலம் விடலாம்.
    இவையெல்லாம் செய்ய இயலாதபட்சத்தில் தர்ப்பணம் செய்யாவிடில் தவறில்லை.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X