என்ன நடக்கிறது காஷ்மீரில் ?

காஷ்மீரில் நடப்பது வெறுமனே இந்து - முஸ்லீம் பிரச்னையோ, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான இடம்பிடிக்கும் போட்டியோ அல்ல ; அதன் வேர் இந்தியப் பிரிவினையில் இருந்து தொடங்குகிறது . காஷ்மீரில் பெரும்பகுதி முஸ்லீம் இருந்தபோதிலும் சுதந்திரத்தின்போது ஹரிசிங் என்ற இந்து மன்னர்தான் காஷ்மீரை ஆண்டு வந்தார் .அவர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ காஷ்மீரை இணைக்க மறுத்தார் . அந்த நிலையில் பாகிஸ்தானின் பஸ்தான் பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது படை எடுத்தனர் . அதை சமாளிக்க முடியாத ஹரிசிங், நேருவுடன் ஒப்பந்தம் போட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார் . இப்படித்தான் காஷ்மீர் இந்தியாவுக்கு வந்தது

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsinformation

Information

பின்னர் படிப்படியான நிகழ்வுகளின் காரணமாக அரசியல் சட்டத்தில் 370 - வது பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது . இந்த இணைப்பில் மிக முக்கியமான அம்சம் என்பது ' காஷ்மீர மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் ' என்பதுதான் . ஆனால், இன்று வரை அப்படி ஓர் ஓட்டெடுப்பு நடத்தப்படவில்ல . நேருவும் அதன் பின் வந்த யாருமே அந்த ஓட்டெடுப்பு நடத்த துணியவே இல்லை . காஷ்மீரில் சின்னச் சின்னதாக இயக்கங்கள் தோன்றி ' சுதந்திர காஷ்மீர் ' கேட்டு ஜனநாயக வழியில் போராடத் தொடங்கினார்கள் . 50 ஆண்டுகள் ஜனநாயகப் போராட்டத்தில் வெறுப்புற்று 1980 -களின் பிற்பகுதியில் போராட்டம், ஆயுத வடிவம் எடுத்தது

[

பெரும்பகுதி காஷ்மீர் முஸ்லீம்கள் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்பவில்லை . இரு தரப்பும் முஸ்லீம்கள்தான் என்றாலும் அடிப்படையிலேயே வேறுபாடு இருக்கிறது . பாகிஸ்தானின் முஸ்லீம்கள் ஷன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் . காஷ்மீரின் முஸ்லீம்கள் ' குஃபி ' வகையைச் சேர்ந்தவர்கள் . தங்களைத் தனித்த தேசிய என வகைப்படுத்தும் காஷ்மீரிகள் ' சுதந்திர காஷ்மீர் ' கேட்கின்றனர் . இதை பாகிஸ்தானோ, இந்தியாவோ இதுவரை கண்டுகொள்ளவில்லை


--- ஆனந்தவிகடன் , 25. 8. 2010.