நேதாஜி

* ஜனவரி 23 , 1897 -ம் வருடம் ஜானகிநாத் போஸ் -- பிரபாவதி தேவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் . குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9 -வது குழந்தை போஸ் ! * சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு . அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார் . * போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார் . அப்போதுதான் போஸூக்கு ' நேதாஜி ' என்ற பட்டத்தை அளித்தார் தாகூர் . ' மரியாதைக்குரிய தலைவர் ' என்பது அர்த்தம் !

information

Information

திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார் . ஆனால், 1934 -ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது . இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா . ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றதுதான் எமிலியுடனான இறுதி சந்திப்பு !





Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



notice

Notice

'இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன் ! ' -- இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது . 1944 -ல் ' ஆசாத் ஹிந்த் ' வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை, ' தேசப் பிதா ' என்று முதன்முதலில் அழைத்தார் . ' ஆசாத் ஹிந்த் ' என்றால் ' சுதந்திர இந்தியா ' என்று பொருள் ! * காந்திக்கும் போஸூக்கும் கொள்கைரீதியாக வேறுபாடு இருந்தாலும், மனதளவில் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்தனர் . எப்படி சுபாஷ், காந்தியை ' தேசப் பிதா ' என்று அழைத்தாரோ, அப்படியே, காந்தி, போஸை ' தேச பக்தர்களின் பக்தர் ' என்று அழைத்தார் !








*பெண்களை ராணுவத்தில் பங்கேற்கச் செய்தது முக்கியமான வரலாற்று நிகழ்வு . காந்தி எப்படி பெண்களை அகிம்சையின் வடிவமாகப் பார்த்தாரோ, அதற்கு நேர்மாறாகப் பெண்களைச் சக்தி வாய்ந்த துர்க்கைக்கு நிகராகப் பாவித்தவர் நேதாஜி ! * 1945 -ம் ஆண்டு ஆகஸ்ட் 16 -ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார் . ஆகஸ்ட் 18 -ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது . ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது . இதுவரை 12 கமிஷன்கள்வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை . நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம் !


--- ந. வினோத்குமார் , ஆனந்த விகடன் . 13 . 10 . 10 .