மஹாலிங்கமே , உன்னை எட்டு சுலோகங்களில் பாடியதற்கு பெயர் லிங்காஷ்டகம். எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கேட்கக் கேட்க அலுக்க வில்லை. பாடப் பாட நா மணக்கிறதே தவிர வெறுக்க வில்லையே. என்ன ரகசியம் இதில்?

சிவனை விஷ்ணுவும் பிரம்மாவும் வணங்குகிறார்கள். விஷ்ணுவை சிவனும் பிரம்மாவும் கோடி கோடி தேவர்களும் வணங்குகிறார்கள். இவ்வாறு ஒருவரை ஒருவர் வணங்குவதால் யாரும் யாருக்கும் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ இல்லை என்றும் பொருள் கொண்டாலும், மகாதேவா , நீ ஒன்றே சாஸ்வதம், வேண்டுவோர் வேண்டிய வண்ணம் பலராக, பலவாக, நிறைவாகத் தோன்றுகிறாய் என்று புரிந்து நமஸ்காரம் பண்ணுகிறேனே .

நீ துக்க நாசனம் பல பிறவிகளில் சேர்த்து வைத்துக்கொண்ட , சர்வ பாப நாசனம் பண்ணுபவனல்லவா. ஆத்ம ஒளி தரும் ஜாஜ்வல்ய லிங்கமல்லவா. லிங்கமென்றாலே எனக்கு என்ன தோன்றுகிறது? . அருவத்தை ஏதோ உருத்தெரியாத ஸ்வரூபமாகக் காட்டுவது என்று. ஆனால் பார்க்கும்போதே மனத்தை காந்தமாக ஈர்க்கிறதே. இனம் புரியாத பக்தி, பரவசம், உள்ளே உலவுகிறதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வெளியே சொல்லத்தெரியவில்லையே.

பொங்கி வரும் நன்றிபபெருக்கால் நான் சொல்ல முடிந்தது ''சிவ சிவா'' ஒன்றே தான். இது தான் என் ஜபம். இதைச் சொன்னாலேயே கேட்டதெல்லாம் கொடுப்பவனாச்ச்சே நீ. எத்தனை ராக்ஷசர்களும் கொடியவர்களும் கூட உன்னை வேண்டினதும் அருள் புரிந்தவனல்லவா.

To hear In Sanskrit, click this link.http://www.youtube.com/watch?v=Ffd2Ni01BcA#t=11

இங்கே இதோ தமிழில் (Courtesy from TamilSaivaIndu)

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsநான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

காமனை எரித்த பேரருள் லிங்கம்
ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்
வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம்
சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்
தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம்
கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம்
தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம்
பங்கய மலர்களை சூடிடும் லிங்கம்
வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

அமர கணங்கள் போற்றிடும் லிங்கம்
அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்
கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம்
எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம்
அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம்
நிரந்தரம் வானத்து மலர்நிறை லிங்கம்
அனைத்திற்கும் மேன்படு பரம்பொருள் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்

சிவ சன்னிதானத்தில் இதனை உரைப்பார்
சிவ பதம் எய்தியே சிவனோடு இருப்பர்.