Announcement

Collapse
No announcement yet.

சமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்…

    சமஸ்க்ருதம் கற்க மேலும் சில காரணங்கள்

    சமஸ்க்ருதம் ஒரு பழமையான மொழி, அதில் ரிக் வேத காலம் தொட்டு மனிதன் கண்டடைந்த அனுபவங்களும், ஞானமும் பொதிந்திருப்பது குறித்து பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருப்பது தான். காலப் போக்கில் சமஸ்க்ருதம் ஒரு சாரார் மட்டுமே கற்றுக்கொள்ளும் மொழி என்று ஆனது எப்போதிலிருந்து தெரியுமா? ஆங்கில முறைக் கல்விவந்ததிலிருந்து தான்!
    சமஸ்க்ருதத்தின் ஆகச் சிறந்த கவி காளிதாசனோ, வால்மீகியோ, வியாசரோ ஒரு தனிப்பட்ட ஜாதி வர்ண பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். காளிதாசன் இடைக்குலத்தைச் சேர்ந்தவன். வால்மீகி ஒரு திருடர்.அதனால் சமஸ்க்ருதம் ஒரு சாராருக்கு மட்டும் சொந்தமானது என்ற கூற்று தவறு. பழைய காலத்தில் அப்படி இருந்தது இல்லை.
    ஆங்கில முறைக்கல்வி வருவதற்குமுன் ஒவ்வொரு கிராமத்திலும், சிற்றூரிலும் பள்ளிக் கூடங்கள் இருந்தன. இன்று பல கிராமங்களில் இல்லை! ஆங்கிலேயரின் ஆட்சியில் மெக்காலே எந்த அளவு நமது நாட்டுக் கல்வியை மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செயல் பட்டார் என்பது நன்கு ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. அதன் விளைவாக நமது நாட்டு பாரம்பரியக் கல்வி முறையை கற்க ஆர்வம் குறைவு பட்டது.
    சமஸ்க்ருத பாரதியின் ஷிபிரம் ஒன்றில் பேசும் போது திரு. ராஜன் அவர்கள் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். அவருடைய நண்பரின் பாட்டனார் காலத்தில் புதிய வீடு ஒன்றுக்குநிலைப்படி அமைப்பதற்கு தச்சருடன் பாட்டனார் உரையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது நிலை இவ்வாறு அமையவேண்டும் என்று மனையடி சாத்திரத்திலிருந்து இவர் ஒரு ஸ்லோகத்தை சொல்ல, பதிலுக்கு அந்த தச்சர் வேறு ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி தன் ஐடியாவை சொன்னாராம். இவ்வாறு இருந்த நிலை இன்று முற்றிலும் மாறிவிட்டது.
    இன்று சமஸ்க்ருதம் கற்றுக் கொள்ளவேண்டிய அவசியம், காரணம் அது வெறும் பாரம்பரிய மொழி என்பதோடு அல்லாமல் மேலும் சில காரணங்களும் அதனுடன் இணைந்திருக்கின்றன.
    • கலாசாரத்துக்கு சம்ஸ்க்ருதிஎன்று பெயர். சம்ஸ்க்ருதம் சம்ஸ்க்ருதி என்ற சொல் ஒற்றுமை போல, நமது பண்பாட்டை அறிந்து கொள்ள சம்ஸ்க்ருத அறிவு அவசியம்.
    • நமது வழிபாட்டு முறைகளிலும், பூசைகளிலும், சடங்குகளிலும்மந்திரங்களை உச்சரிக்கும் போது, சமஸ்க்ருதம் தெரிந்தால் நமது பாவனையே மாறிவிடும்.உதாரணமாக குருப்யோ நம:என்று சொல்லும் போது, பன்மையில் எல்லா குருமார்களையும் வணங்குகிறேன்என்ற பொருள் புரிந்தாலே அதற்கே உரிய உணர்வுடன் ஈடுபட முடியும். பிரார்த்தனைகள், சடங்குகளின் பலனை உடனே மனத்தால் உணர முடியும்.
    • இதெல்லாம் தவிர முக்கியமான ஒரு காரணமும் உண்டு. இன்றைய நாளில் உலகின் வல்லரசு என்றுஅறியப் படும் அமெரிக்காவோ, உடைந்து போவதற்கு முன் இருந்த ரஷ்யாவோ அப்படி வல்லரசு ஆனது தம் வசம் அவை வைத்திருந்த ஆயுதங்களால் தான்.கடந்த பத்து வருடங்களில் இந்தியாவும் வல்லரசு ஆகும் என்ற பேச்சு அடிபடுகிறது. இந்தியா வல்லரசு ஆவது வெறும் ஆயுதங்களால் அல்ல அறிவினால் (Knowledge power). இந்த அறிவு நமது பாரம்பரிய நூல்களில் பொதிந்துள்ளது.

    கணிதம், வானவியல், மருத்துவம் என்று நமது பாரம்பரிய ஞானம் மிக ஆழமானது. Π (பை)என்கிறகணிதமாறிலி குறித்து நமது நூல்களில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள்.அத்தகைய அறிவு மேலும் கண்டடையப் படவே இல்லை. சுமார் நாற்பது லட்சம் ஏடுகள் (manuscripts) இன்னும் ஆய்வுக்கு ஆட்படாமலே இருக்கின்றன. இது வரை சுமார் பத்தாயிரம் போல எடுத்து படித்து பகுத்து வைத்துள்ளனர்.
    அதற்குள்ளாகவே நாம் யோகம், ஆயுர்வேதம் போன்றவற்றின் பலனை நேரடியாக பார்த்து வருகிறோம். இன்னும் இந்த பாரம்பரிய ஞானம் வெளிவருவது நமக்கும் நல்லதுநமது நாட்டுக்கும் நல்லது.அதற்கு சமஸ்க்ருத ஞானம் அவசியமான ஒன்று.
    சமஸ்க்ருதம் படிக்கிற அத்துணை பேருமே ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதில்லை என்றாலும், அந்த அறிவு பரவலாக இருப்பது, பழமையான மானுட நலனுக்கானசிந்தனைகளை, அறிவை உடனடியாக உணர்ந்து கொள்ள உதவும்.பழைய நூல்களில் இருந்து நமக்கு தெரியவரும் புதிய கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து நம் நாடு அறிவில் சிறந்ததேசமாக மாற அது உதவும்.
    சமஸ்க்ருதம் அப்படி ஒன்றும் கடினமான மொழியும் அல்ல.சம்யக் + க்ருதம் = சம்ஸ்க்ருதம், நன்கு செய்யப் பட்டது, Perfected என்று பொருள். சமஸ்க்ருதத்தில் பொருள் இல்லாத சொல்லே இல்லை.ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேர்ச்சொல் அதற்கே உரிய பொருள் உண்டு. கணித சூத்திரங்கள் போல, சம்ஸ்க்ருத மொழியும் சூத்திரங்களால் ஆனது. இந்த சூத்திரங்கள் தெரிந்தாலே போதும், மொழியின் அத்தனை வார்த்தைகளையும், அவற்றின் பயன் பாடுகளையும் உபயோகப் படுத்த முடியும்.ஆனால் அந்த சூத்திரங்கள் தான்எண்ணிக்கையற்று இருக்கின்றன.ஆயினும் ஒவ்வொரு படியாக கற்பது சாத்தியமே.
    அதிலும் வெளிநாட்டினரை விட இந்தியர் சம்ஸ்க்ருதம் கற்பது இயல்பாகவே எளிது.தமிழகத்தின் புதுக் கோட்டைப் பகுதியில் பேசப்படும் வட்டார வழக்கில் என்ன குழம்பு, என்ன வெஞ்சனம்?” என்பார்கள். வெஞ்சனம் என்பது வ்யஞ்ஜனம் என்ற சம்ஸ்க்ருத சொல் தான். இவ்வாறு நமது மொழிகளில் வட்டார வழக்குகளில் கலந்து விட்டிருக்கும் சமஸ்க்ருதம் கற்றுக் கொள்வது நமக்குத்தான் எளிமையானது.
Working...
X