எட்டாமிட பொருத்தம்:-
எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம்.; இதில் பாப கிரஹங்கள் இருக்ககூடாது. மாங்கல்ய காரகனாகிய செவ்வாய் இங்கு இருக்கவே கூடாது. இருந்தால் கணவனுக்கு அற்பாயுள் ஆகி விடும்.

குருவோ, சுப கிரஹமோ 5ஆவது அல்லது ஒன்பதாவது வீட்டுக்காரன் இந்த செவ்வாயை பார்த்தால் தோஷ நிவ்ருத்தி. ஆண் ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் இருக்கலாம். எட்டாமிடத்து அதிபதி நீசம் பெற்று விட்டாலோ

அல்லது எட்டாமிடத்தில் வேறு நீச கிரஹம் இருந்தாலோ அல்லது ஒரு பாப கிரஹம் எட்டாமிடத்தில் அமர்ந்தாலோ அவள் திருமண வாழ்வில் வறுமை, துக்கம், சோகம், பயம் குடியேறும். எட்டாமிடம் கெட்டால் ஆயுளை குறைத்து விடும்.

5.ஆம் இடம் புத்ரஸ்தானம். :
ஆண் ஜாதகத்தில் ஐந்தாமிடம் புத்ர ஸ்தானம்.. பெண் ஜாதகத்தில் ஒன்பதாமிடம் புத்ர ஸ்தானம் .பெண் ஜாதகத்தில் ஐந்தாமிடம் கருச்சிதைவு,ஆயுத கேஸ், குழந்தை பிறக்க தடை கண்டறியலாம்..

ஒரு ஆண் ஜாதகத்திலோ பெண் ஜாதகத்திலோ லக்னத்துக்கு ஐந்தாமிடமான புத்ர ஸ்தானத்தில் சனி, ராஹு, கேது தனியாகவோ கூட்டாகவோ இருக்க கூடாது .இருந்தால் புத்ர தோஷம்.

புத்ர கிரஹமாகிய குரு ஐந்தில் வலுத்து இருந்தாலும் புத்ர தோஷம். இவர்களுக்கு பெண் குழந்தைகளாக பிறக்கும்.. பிறந்தாலும் குடும்பத்தை சின்னா பின்ன மாக்கிவிடும்..

ஐந்தாம் அதிபதி நீசம் பெற்றுவிட்டாலோ ஐந்தாம் வீட்டில் நீச கிரஹம் இருந்தாலோ ஐந்தாம் ஸ்தானத்தின் அதிபதி மறைவு ஸ்தானம் சென்று விட்டாலும் புத்ர தோஷம்.

ஐந்தில் குரு இருந்தால் திருச்செந்தூர் சென்று வழி பட வேன்டும். ஐந்தாமிடத்தில் சனி, ராஹு, கேது ஒன்றாகவோ கூட்டாகவோ இருந்தால் காளஹஸ்தி சென்று வழி பட வேண்டும். தில ஹோமம் செய்ய வேண்டும்..

லக்னாதிபதியோ, ஐந்தாமிடத்து அதிபதியோ, அல்லது ஒன்பதாமிடத்த திபதியோ இவர்களை பார்ர்த்து விட்டால் இந்த தோஷம் அடிப்பட்டு விடும்.

ஆண் வாரிசுகள் உண்டாக ஒன்பதாமிடமும் ஐந்தாமிடமும் பலம் பெற வேண்டும். அதில் ஆண் கிரகமான சூரியன் செவ்வாய், குரு இருக்க வேண்டும். அல்லது ஐந்தாம் வீட்டினதிபதி ஆண் கிரகமாக இருந்து அவர் ஆட்சியிலோ, உச்சத்திலோ மூல திரிகோணத்திலோ இருக்க வேண்டும்.

புத்ர தோஷம் நிரம்பிய ஆண் பெண் ஜாதகங்களை ஒன்றினைத்தால் அவர்களுக்கு குழந்தயே பிறக்காது ஐந்து ஒன்பதாமிடம் கவண மாக பரிசீலிக்கவும்.

சுப கிரஹமான குரு எந்த பாப கிரஹத்துடன் சேர்ந்தாலும் அந்த பாப கிரஹத்தின் பலனைத்தான் குருவால் பிரதிபலிக்க முடியும்.. குரு எந்த பாபராலும் பார்க்கபட கூடாது. நீசம் பெற்ற கிரஹத்துடன் சேரக்கூடாது.

லக்ன பலம் குறைந்தால் எந்த ஒரு ராஜ யோகமும் அனுபவிக்க முடியாது.

பத்தாமிடத்து அதிபதி கெட்டு போய் விட்டால் ஜீவனம் நிலையாக இருக்காது. செயல்களில் அறை குறைத்தனம் காணப்படும் .வேலைகேற்ற ஊதியம் கிடைக்காது .எதிபார்த்த லாபம் கிடைக்காது.

பத்தாமிடத்ததிபதி நீசம் ஆக கூடாது. அஸ்தங்கதம் ஆக கூடாது. நீச கிரஹத்துடன் சேர்ந்து இருக்க கூடாது. பத்தாமிடத்ததிபதி பன்னிரண்டாம் இடத்து அதிபதியுடன் சேர்ந்து இருக்க கூடாது.

பத்தாமிடம் கெட்ட ஆண் பெண் ஜாதகம் இணைக்க கூடாது. பத்தாமிடம் கெட்ட பெண் வரவுக்குள் வாழ முடியாமல் தவிப்பாள். கடன் ஏற்படும். இதனால் மனம் கெட்ட வழியில், இழிவான பாதையில் செல்ல தூண்டும்.

ஆகவே பத்தாமிடம் கெட்ட பெண் கூடாது..
இருவருக்கும் ஒரே சமயத்தில் லக்னாதிபதி தசை நடக்க கூடாது. ஜாதகம் பொருத்தம் பார்க்கும் சமயத்தில்.
சனி தசை நான்காவதாகவும், செவ்வாய் ராஹு தசை ஐந்தாவதாகவும் குரு தசை ஆறாவது தசையாகவும் வந்தால் அந்தந்த தசைகளில் கஷ்டம் உண்டாகும்.

ஜன்ம லக்னத்துக்கோ, ஜன்ம ராசிக்கோ பன்னிரண்டில் செவ்வாய் இருந்தால் , சுப கிரஹ பார்வையும் பெறாமல் இருந்தால் தாமத திருமணமே சிறந்தது.

மற்ற கிரஹங்களின் தன்மையை அலசி ஆராய்ந்து லக்ன ரீதியாக சுபர் பார்வை அறிந்து உச்ச நீசம் அறிந்து பார்க்க வேண்டும்....

சுக்ரன், சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்து மூன்றாம் இடத்தையோ மூன்றாம் வீட்டின் அதிபதியையோ , பன்னிரண்டாம் வீட்டையோ பன்னிரண்டாம் வீட்டின் அதிபதியையோ பார்த்தாலோ இணைந்தாலோ

காம இச்சை அதிக மாகி பலருடன் தொடர்பு கொள்வாள் . உடன் தொழில் அதிபர் சேர்ந்தால் விபச்சார தொழில் தான். குரு பார்வை இருந்தால் இதை மாற்றி அமைக்க வாய்ப்பு உண்டு.

லக்ன சஷ்டாஷ்டகம் ஆண் பெண் ஜாதகத்தில் இருந்தால் இருவருக்கும் மனநிலை ஒத்து போகாது. ஆனால் லக்னாதிபதி ஒன்றாக இருந்து விட்டால் பொருத்தமாகும்.

திருமணத்திற்கு ஏழாம் பாவம், ஏழாம் பாவாதிபதி, களத்ர காரகன் சுக்ரன் பலம் அதிகம் இருந்தால் நிச்சயம் கல்யாணம் நடக்கும் .சுக்ரன் கெட்டு விட்டால் திருமண தாம்பத்ய சந்தோஷம் இருக்காது.

சுக்ரன் அஸ்தங்கதம்=மெளட்யம் ஆகி இருந்தால் காதலோடு நிற்கும். ஆனால் கல்யாணம் நடக்காது. லக்னாதிபதி பலஹீனமாக இருந்தாலும் காதலோடு நிற்கும். கல்யாணம் ஆகாது.

ஒரு பாவம்==என்றால் ஒரு வீடு==ஒரு ராசி.கெட்டு விட்டது என்றால்=12க்கு உடையவன்== 12 ஆம் வீட்டு அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பது.

6,8,12 வீட்டுக்காரர்கள் தொடர்பு இருக்க வேண்டும்.---பாவம் அல்லது பாவாதிபதிக்கு..அல்லது சுக்ரனுக்கு.

,3 ,6,11-வீட்டுக்காரர்கள் இரண்டாம் வீட்டு ஆதிபத்யம் பெற்றாலும் பாவம் கெடும்.

ஆறுக்குடையவன் 7ல் இருந்தால் ஒருவருக்கொருவர் சந்தேகம், சண்டை..
எட்டாம் வீட்டுக்காரன் 7ல் இருந்தாலும்.7ஆம் வீட்டுக்க்காரன் 8ல் இருந்தாலும் களத்திரத்தின் ஆயுள் குறையும்.அல்லது பிரிவு ஏற்படும்.

பன்னிரண்டாம் வீட்டுக்காரனுக்கும் 7ஆம் வீட்டுகாரன் தொடர்பு இருந்தால் விரயம், சிலவு, அல்லது இருவரும் வெகு தூரத்தில் பிரிந்து இருப்பர்..

பொதுவான இயற்கை சுப கிரஹம் தொடர்பு இந்த பாவத்திற்கு இருக்க வேண்டும், அப்போது பலம் வரும்..லக்னாதிபதியோ, ஐந்தாவது அல்லது ஒன்பதாவது அதிபதி பார்வை கிடைத்தால் இந்த தோஷம் நீங்கி விடுகிறது.

ஏழாம் வீட்டையோ, ஏழாம் வீட்டு அதிபதியையோ சுக்ரனையோ சனி பார்த்தால் தாமத திருமணம். ஆனால் .ஏழாம் வீட்டை ஏழாம் வீட்டுக்காரன் பார்த்தால் ஏழாம் வீட்டிற்கு உள் பலம் ஏற்படுகிறது. ஆதலால் இந்த தோஷம் நீங்கி விடுகிறது.

கடகத்தில் செவ்வாய், அசுப கிரகம் நீசம், ஆதலால் அசுபம் அதிகம்.சந்திரன் மனது காரகன். எண்ணங்கள்சந்திரன் பக்ஷ பலம் தேய்பிறை சந்திரன் கெட்ட எண்ணங்கள். வள்ர்பிறை சந்திரன் நல்ல எண்ணங்கள். புத்தி காரகன்

புதன்... அமாவாசை சந்திரன்=சூரியன் சந்திரன் இணைவு.= மனது அலை பாயும். மனோ பலம் இருக்காது சுய சிந்தனை இருக்காது .சந்திரன் தனியாக இருப்பது நல்லது. பாவ கிரஹங்கள் பார்வை இணைவு இருக்க கூடாது.

சந்திரன் மாந்தி இணைவு இருக்கவே கூடாது. சந்திரன் சனி இணைவு மனக்குழப்பம், கெட்ட சிந்தனைகள். சந்திரன் கேது இணைவு:- முன் கோபம் அதிகம். தற்கொலை எண்ணம் தோன்றும். சந்திரன் செவ்வாய் இணைவு குரூர

மனப்பான்மை; பேச்சில் விஷம் கொட்டும். செவ்வாய் தைரியம் கொடுக்கும்.சந்திரன் ராஹு இணைவு ஏமாற்றக்கூடிய மனது. இருக்கும். . பாகை கணக்கில் சந்திரனுக்கு அடுத்து உள்ள கிரஹம் சந்திரனை
தூண்டு.ம். சந்திரன் குரு இணைவு:- தார்மீக உணர்வு, கோவில், குளம். நல்ல எண்ணங்கள்.சந்திரன் சுக்ரன் இணைவு:-சுக்ரன் கெட்டு இருந்தால் கெட்ட

வழிக்கு இழுத்து செல்வான். சுக்ரன் கெட வில்லை என்றால் ஆடம்பர வாழ்க்கை..சூரியன் செவ்வாய் இணைவு;- நீயா நானா ஒரு கை பார்த்துவிடுவோம்.,. சந்திரன், சனி கேது இணைவு:-மன நிலை கெடும்.


தேய்பிறை.சந்திரன் அஸ்தங்கதம் ஆன புதன் இணைவு;-மனநிலை பாதிக்கலாம்.
வளர்பிறை சந்திரன், அஸ்தங்கதம் ஆகாத புதன்= calculative; cunning.;brilliant.
,materialistic மேதாவி.. சந்திரனும், புதனும் நீர் ராசிகளில் (அதாவது கடகம்,

விருச்சிகம்,மீனம் ராசிகள்) இணைவு:--பொறாமை குணம், பேராசை, மற்றவர்களிடம் வெறுப்பு மனோபாவம் ஏற்படும்..

சந்திரன் லக்னத்தில் இருந்தால் தட புடல், திடீர் மாற்றங்கள்.
சந்திரன் லக்னத்திற்கு இரண்டில் இருந்தால் : ஸ்திரமான மனோசக்தி.
சந்திரன் 3ல் டூப்லிசிடி இன் டேகிங் அதெர்ஸ் ப்ராப்லெம்.


சந்திரன் 4ல் உணர்ச்சி வசப்படல்.
சந்திரன் 5ல் நீ பெரியவனா நான் பெரியவனா.
சந்திரன் 6ல் நிமிட ப்ரகாரம் எல்லா வேலைகளும் சரியாக செய்ய பட வேண்டும்.

சந்திரன் 7ல். தீர்மானம் செய்ய முடியாத நிலை.
சந்திரன் 8ல் ;நம்பிக்கை, விஸ்வாசம். இருக்கும்.
சந்திரன் 9ல் பரந்த மனப்பான்மை; அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை.

சந்திரன் 10ல் ;-நட்புணர்வு. ;எல்லா கார்யமும் குறை கூற முடியாத நிலையில் செய்வார்கள்.
சந்திரன் 11.ல்;-ரிசர்வெடு டைப்.
சந்திரன் 12ல் உணர்வுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

இயற்கையான அசுப கிரஹங்கள் 2,4,7,8,12, உடன் தொடர்பு கொண்டால் தோஷம் விளைவிக்கிறது.. அதிக பாதிப்பு கொடுக்கிறது. செவ்வாயும் ராஹுவும் தான்.செவ்வாய் வன்முறை. கெட்ட எண்ணம் உண்டாக்கும்.

சூரியன் ஈகோ அதிகம். நீயா நானா பெரியவன் . கெளரவம்.;
சனி:-பிரச்னை, சண்டை வெகு நாட்கள் புகைந்து கொண்டே இருக்கும்.

மாற்றி மாற்றி பேசுவது. ஒருவரிடம் ஒன்று மற்றவரிடம் ஒன்று என பேசுவது. போன்ற குணம்.

ராஹு: படாபட்; திடீர் என எல்லாம் முடிந்து விடும்..ஒரே நிமிஷத்தில் திடீர் மரணம். திடீர் விவாஹ ரத்து..
கேது:--: இரண்டில் கேது, குடும்பத்தில் ஒட்டாமல் வெட்டி விடும் பத்தில் இருந்தால் வேலை போய் விடும்.

பெண் ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் இருந்தால் ஆண் ஜாதகத்திலும் எட்டில் செவ்வாய் இருக்க வேண்டும். 7ல் இருந்தால் தோஷ சாம்யம் சரியாக வராது.
பெண் ஜாதகத்தின் 7 ஆம் இட தோஷம் ஆண் ஜாதகத்தின் எட்டாமிட தோஷம் சரியாகும்.

ஆண் ஜாதகத்தை விட பெண் ஜாதகத்தில் தோஷம் அதிகம் இருக்க கூடாது.
லக்னத்திலிருந்தும், சந்திர ராசியிலிருந்தும், சுக்ரன் நிற்கும் ராசியிலிருந்தும் 2,4,7,8,12 ம் வீடுகளில் உள்ள பாப கிரஹங்களின் தோஷ ஸாம்யம் பார்க்க வேண்டும். .

பெண் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரத்திலிருந்தால் பாலியல் உணர்வு அதிக மாகும். ஆண் ஜாதகத்தில் சுக்ரன் வக்ரமனால் பாலியல் உணர்வு அதிகமாகும்.

லக்னம் அல்லது சந்திரனுக்கு நான்கில் ராஹு இருந்தால் மாமியார் கொடுமை கண்டிப்பாக இருக்கும்..

எட்டாமிடத்திற்கு சுபர் பார்வை வேதனை இல்லாத மரணம் சம்பவிக்கும்.
எட்டாமிடத்தில் சுபர் இருந்தால் கஷ்டப்பட்டு மரணம்.
சந்திரன் லக்னத்திற்கு மறைவிடத்திலிருந்தால் திடீர் மரணம் சம்பவிக்கும்.

லக்னத்திற்கு எட்டில் சந்திரன், சூரியன், செவ்வாய், சனி, ராஹு தொடர்பு இருந்தால் திடீர் மரணம்.சூரியன் கெட்டு ஆறாமிட தொடர்பு, ராஹு தொடர்பு இருந்தாலும் திடீர் மரணம்.

எட்டாமிடம் ஸ்திர ராசி சொந்த ஊரில் அல்லது சொந்த வீட்டில் மரணம் சம்பவிக்கும். எட்டாமிடம் சர ராசியானால் சொந்த ஊரில் மரணம் இல்லை.

எட்டாமிடம் உபய ராசியானால் பிரயாணத்தின் போது மரணம் சம்பவிக்கும்.
மருத்துவ மனைக்கு செல்லும் போதும் பிரயாணம் தானே.

ஏழுக்குடையவன் லக்னத்திலிருந்தால் முன்பே தெரிந்த ஒருவரை திருமணம் புரிவார்கள் .ஒருவருகொருவர் ஒத்து வாழ்வார்கள்..

7ஆம் பாவத்திற்கு உள் பலம் இருந்தால் வாழ்க்கை துணை நன்றாக அமையும்.

7ஆம் பாவாதிபதி லக்னத்தில் பலம் பெற்று இருந்தால் அடிக்கடி பிரயாணம்.
7ஆம் அதிபதி லக்னத்தில் பலம் இன்றி இருந்தால் தகாத முறை உறவு ஏற்படும்.

7க்குடையவன் 2ல் பலத்துடன் இருந்தால் திருமண வழி பொருளாதார வளர்ச்சி, பெண்கள் வழி லாபம்,. பார்ட்னர்ஷிப் பிஸினஸில் நல்ல வருமானம் வரும்.

7க்குடையவன் 2ல் கெட்டு போயிருந்தால் ( நீசம், அஸ்தங்கதம்) பெண்களை
தகாத முறையில் பயன் படுத்தி வருமானம் கிடைக்கும். தசா புக்தி காலங்களில் மாரகம் வரும்.

7க்குடையவன் 3ல் பலத்துடன் இருந்தால் இளய சகோதரம் வெளி நாட்டில் நல்ல வளர்ச்சியில் இருப்பார்கள் .7க்குடையவன் 7லிருந்து மூன்றில் =வெளி நாடு.
7க்குடையவன் 3ல் கெட்டு விட்டால் இளய சகோதர சகோதரி தகாத முறை உறவு இருக்கும்.

7க்குடைவன் 4ல் பலத்துடன் இருந்தால் மனைவி வேலை செய்பவள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
7க்குடையவன் 4ல் கெட்டு விட்டால் குறுகிய மனப்பான்மை; சந்தேகம்..

7க்குடையவன் 5ல் பலத்துடன் இருந்தால் விரைவில் திருமணம் நடக்கும். மணைவி பணக்கார குடும்பம்.

7க்குடையவன் 5ல் கெட்டு போயிருந்தால் பெண் குழந்தையாக பிறக்கும். அல்லது குழந்தை பிறக்காது.

அதிக பாதிப்பு= கிரஹ யுத்தம்; , ராகு கேது பாதிப்பு; செவ்வாய் நீசம், சனி இணைவு. இருந்தால் அதிக பாதிப்பு எனப் பெயர்.

7க்குடையவன் 5ல் மிக அதிகம் கெட்டு விட்டால் மனைவிக்கு தவறான தொடர்பினால் குழந்தை பிறக்கும்.

.7க்குடையவன் 6ல் இருந்தால் சத்ரு மனப்பான்மை இருக்கும். கெட்டு விட்டால் சத்ரு பனமான்மை இன்னும் அதிகமாகும். தாய் மாமன் உறவில் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஒன்றிர்க்கு மேற்பட்ட திருமணம் நடக்கவும் வாய்ப்பு உண்டு. பொருளாதார பலஹினம்.

7க்குடையவன் 7ல் இருந்தால் மிக அதிக நல்ல பலன். வாழ்க்கை துணை மரியாதைக்குறியவர். கெட்டு விட்டால் சுப பலன் குறைவு.

7க்குடையவன் 8ல் இருந்தால் வாழ்க்கை துணை சீக்கிரம் மரணம்.. .இல்லை என்றால் பிறிவினை. அல்லது யாரோ ஒருவர் உடல்நிலை மோசமாகும்..
1,5,9 குடையவன் யாராவது ஒருவர் பார்வை கிடைத்தால் தோஷமில்லை.

7க்குடையவன் 9ல் இருந்தால் வாழ்க்கை துணை தர்மத்தை கடை பிடிப்பார்கள்.. கண்டிப்பாக பெண்கள் ஜாதகத்தில் வெளி நாடு செல்லும் யோகம் தரும்..

7க்குடையவன் 9ல் கெட்டு விட்டால் வாழ்க்கை துணை அதர்ம வழியில் நடப்பார்கள்.

7க்குடையவன் 10ல் இருந்தால் மனைவி வழி பொருளாதார உயர்வு ஏற்படும்.
நல்ல குணமுள்ள மனைவி.

7க்குடையவன் 10ல் கெட்டு விட்டால் மனைவிக்கு அளவுக்கு அதிக ஆசை இருக்கும்.

7க்குடையவன் 11ல் இருந்தால் இரண்டாம் திருமண வாய்ப்பு உள்ளது. பல பெண்கள் தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டு. கெட்டு விட்டால் இதில் இன்னும் மோசம்.. 1,5,9 பார்வை கிடைத்தால் தப்பிக்கலாம்.

7க்குடையவன் 12ல் இருந்தால் வெளி நாட்டு பயணத்தின் போது மரணம் ஏற்படலாம். மனைவி மிக அதிக தூரத்திலிருந்து வருவாள்.

7க்குடையவன் 12 ல் பலமிழந்து இருந்தால் சுக்ரனும் பலமிழந்தால் திருமணமாகாது...

.


...


..

.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends