சூட்சும பொருத்தம் தொடர்கிறது.

பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்தும் சந்திரன் இருக்கும் ராசியிலிருந்தும் 7ஆம் பாவம் பார்க்க பட வேண்டும். சுபர்கள் கூட்டு பார்வை இருந்தாலோ அல்லது பாக்கியாதிபதி பார்வை இருந்தாலோ அல்லது அந்த ராசியாதிபதி பார்வை இருந்தாலோ திருமண வாழ்க்கை சுபம்.

ஏழு; எட்டுக்கு உடையவர்கள் 7; 8 பாவத்தை தவிற மற்ற இடங்களில் சேர்ந்திருக்கலாம். 2,7,12 க்குடைய கிரஹங்கள் கேந்திர திரிகோணத்திலிருந்து குரு பார்வை பெற்றால் பிரச்சினை இல்லாது திருமணம் நன்றாக இருக்கும்.

குரு பார்வையினால் தோஷம் விலக வேண்டுமானால் குருராஹு. கேது இணைவு கூடாது. குரு கிரஹ யுத்தத்தில் தோற்று போயிருக்க கூடாது. குரு அஸ்தங்கதம் ஆகியிருக்ககூடாது. குரு 8 ல் இருக்க கூடாது. குரு கெளரவ பதவி தான் கொடுக்கும். வருமானம் கொடுக்காது.

ஐந்திர்க்குடையவன் எட்டில் இருந்தால் ஒரு குழந்தை இறக்கும்.

ஏழுக்குடையவன் நிற்கின்ற இடத்திலிருந்து 2, 7, 11 ல் சுப கிரஹங்கள் இருந்தால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். செவ்வாய் சனி மகர ராசியிலிருந்தால் ( லக்னம் பற்றி கவலை இல்லை.).நல்ல திருமணம் நடக்கும்.

ஆண்கள் ஜாதகத்தில் 7ஆம் பாவம் ஏழுக்குடைவன் நிற்கின்ற ராசி, சுக்ரன் நிற்கின்ற ராசி மூன்றும் பெண்கள் ராசியாக இருந்தால் நல்ல திருமணம் நடக்கும்.. குரு ஏழாமிடத்திலிருந்தால் நல்ல திருமண வாழ்க்கை.

கூடுதல் பெண் கிரஹங்கள் பெண் ராசியில் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் கூடுதல் ஆண் கிரஹங்கள் ஆண் ராசியில் இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.

சுக்ரன், உச்சத்திலோ, ஆட்சியிலோ சுய வர்கங்களிலோ இருந்தால் வாழ்க்கை துணை அழகாக இருப்பார்கள்.. .
அசுப பலன்கள்.:--
சுக்ரனிலிருந்து 4,8,12 ல் அசுப கிரஹங்கள் இருப்பது; ..அசுப கிரஹங்கள் சுக்ரனை பார்ப்பது.;

சுக்ரனுக்கு அல்லது ஏழாம் பாவதிற்கு அல்லது ஏழாவது பாவாதிபதிக்கு ஏதோ ஒன்றுக்கு பாப கர்த்திரி யோகம் இருந்தால் தாமத திருமணம் ஏற்படுகிறது.

( ஒரு ராசிக்கு இரு பக்கமும் பாப கிரஹம் இருந்தால் பாப கர்த்திரி யோகம் எனப்பெயர்.).. லக்னத்திற்கு பாப கர்த்திரி யோகம் இருந்தால் உடல் நிலை பாதிப்பு வருகிறது .ரிஷப லக்னத்திற்கு ஏழில் சுக்ரன் இருந்தால் வாழ்க்கை துணை இறப்பு.தசா புக்தி காலங்களில்

குருவுடன் சனி இருந்தால் சனிக்கு பாப கர்த்ரி யோகம் வராது..பாகை பார்த்து சொல்ல வே|ண்டும். ஐந்திற்கு உடையவனும் ஏழிற்குடையவனும் பரிவர்ர்த்தனை ஆணாலும் திருமண தடை வரும். ஆண்கள் ஜாதகத்தில்.

சந்திரனுக்கு செவ்வாய் பார்வை சுக்ரனுக்கு சனி பார்வை அல்லது சந்திரன்/ சுக்ரன்/ செவ்வாய், சனி பார்வை இருந்தாலும் திருமணம் கஷ்டம். .

சூரியனும் ராஹுவும் ஏழில் இணைவு. .தாமத திருமணம் திருமண வழி பொருள் நஷ்டம்.
ரிஷபத்திற்கு செவ்வாய் ஏழிலும்; மகரத்திற்கு குரு ஏழிலும்; மீனதிற்கு சனி ஏழிலும் இருந்தால் வாழ்க்கை துணைக்கு சந்தோஷ குறைவு; வ்யாதி;ஆயுள் குறைவு இருக்கும்

. 7ல் கேது வாழ்க்கை துணை உடல் நிலை கோளாறு.; அதி புத்திசாலி .நல்ல ராஹு ஏழில் சுயநல வாதி.;; ராஹு ஏழில் கெட்டால் தாழ்ந்த ஜாதி திருமணம்..;

6,8,9,என்ற இடங்களில் பாப கிரஹங்கள் கூட்டு பார்வை இருந்தால் மனைவி பாலியல் குற்றங்கள் செய்வாள்; ஏழுக்குடையவன் அல்லது சுக்ரன் பலமிழந்து ராஹு கேது இணைவுமிருந்தால் பாலியல் குற்றம் செய்வாள்.

ஏழில் சனி,;சந்திரன்; செவ்வாய் இம் மூன்று கிரஹங்கள் இருந்தால் எந்த லக்னமாக இருந்தாலும் சரி கணவன் மனைவி இருவரும் பாலியல் குற்றம் செய்வார்கள்..

சுக்ரன் ஏழில் பலமிழந்து போனால் ஆண்மை குறைவு உண்டாகும்;;.ஏழில் செவ்வாய் வேறு பாதிக்கபட்ட அசுபரோடு இணைவு;=-கிட்னி ; சிறு நீர் பை பாதிப்பு ஆதலால் ஆண்மை குறைவு..

சனி ஆறு அல்லது பன்னிரண்டில் பலமிழந்து போனால் ஆண்மை குறைவு.
சுக்ரனிலிருந்து சனி ஆறு அல்லது எட்டில் இருந்தால் ஆண்மை குறைவு .

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsசந்திரன் பெண் ராசியிலிருந்து புதன் ஆண் ராசியிலிருந்து இரண்டையும் செவ்வாய் பார்த்தாலும் ஆண்மை குறைவு.
ஏழுக்குடைய சுக்ரன் ஆறிலிருந்தாலும் ஆண்மை குறைவு வரும்.

லக்னம் ஆண் ராசியாக இருந்து செவ்வாய் பெண் ராசியில் இருந்தாலும் ஆண்மை குறைவு வரும்.
பென்கள் ஜாதகத்தில் எட்டுக்கும் செவ்வாய்க்கும் எந்த தொடர்பு இருந்தாலும் பிரச்னை தான். .

செவ்வாய்; சனி; ராஹு எட்டாமிடத்திற்கு தொடர்பு இருந்தால் கண்டிப்பாக காதல் திருமணம் தான் . குரு பார்வை இருந்தால் குறைக்கும்..

இரண்டு, ஏழுக்குடையவன் பலமிழந்து, கேந்திர திரிகோணத்திலிருந்து சுபர்கள் பார்வையும் இருந்தால் ஒரே திருமணம் தான் நடக்கும்.
குரு, புதன் இரு கிரஹங்களும் சூரியன் அல்லது செவ்வாய் நவாம்சத்தில் இருந்தால் ஒரே திரும\ணம் தான். .

புதன் ஏழில் இருந்து குருவின் நவாம்சம் பெற்றால் ஒரே திருமணம் தான்.
லக்னாதிபதி, 7ஆம் வீட்டு அதிபதி சுக்ரன் இம்மூன்று கிரஹங்களும் உபய ராசியில் இருந்தால் 2 திருமணம் நடக்கும் .குரு பார்வை கிடைத்தால் நடக்காது.

புதனும் சனியும் 7ல் இருந்து 11ஆம் வீட்டில் 2 கிரஹங்கள் இருந்தால் 2 திருமணம் உண்டு..
பத்தாமிடத்தில் மூன்று கிரஹங்கள்=கல்யாணம் நடக்காது. சந்யாச யோகம்.

ஏழுக்குடையவன் சனி யாக இருந்து பாபிகளுடன் கூடி யிருந்தால் பல திருமணங்கள் நடக்கும்.
ஏழாமிடத்தில் மூன்று கிரஹங்களோ அல்லது அதற்கு மேற்பட்ட பாப கிரஹங்கள் இருந்தால் இரண்டு திருமணம் அல்லது வைப்பாட்டிகள்.

சுக்ரன் பலமிழந்து அசுபர்கள் கூட்டு பார்வை இருந்தாலும், எட்டுக்குடையவன்
லக்னத்திலோ ஏழாம் வீட்டிலோ இருந்தாலும், லக்னாதிபதி ஆறிலிருந்து ஏழிலசுப கிரஹம் இருந்தாலும்,; இரண்டிற்குடையவன் ஆறாம் வீட்டிலிருந்து ஏழிலசுப கிரஹம் இருந்தாலும் ஒன்றுக்கு

மேற் பட்ட திருமணம் நடக்கும்..
ஏழுக்குடையவன் பலவான் கேந்திர திரி கோணங்களில் இருந்தால் பல திருமணங்கள் நடக்கும்.
பலம் பெற்ற ஏழாம் அதிபதியும் பதினொன்றாம் அதிபதியும் பரிவர்த்தனை யோகம். இரண்டு திருமணம் நடக்கும்.

சுக்ரன் நீச ராசியில் அல்லது; சுக்ரன் அஸ்தங்கதம், ராஹு கேது இணைவும். 2 திருமணம் நடக்கும்.
குருவும் சூரியனும் சாத்வீக குணம் உடையவர்கள்; ;சுக்ரன் ராஜஸ குணம்; செவ்வாய் ,சனி தாமஸ குணம்.; சுக்ரன், குரு, சூரியன் பார்வை_ சந்யாசி யோகம். சுக்ரன், செவ்வாய், சனி பார்வைபாலியல் தொடர்பு..

ஏழுக்குடையவன் இருக்குமிட்த்திலிருந்து மூன்றாம் இடத்தில் பலம் பெற்ற சந்திரன் இருந்தால் 2 திருமணம் தான்.

லக்னாதிபதி எட்டில் இருந்து ஏழில் செவ்வாய், சுக்ரன், சனி மூன்றும் இருந்தால் 2 திருமணம்.
லக்னத்திலிருந்து சந்திரன் மூன்றாமிடத்தில் பலம் பெற்றால் மாற்றங்கள் கல்யாணத்திலோ அல்லது வேலையிலோ வருகிறது.

ரிஷப லக்னத்திற்கு சந்திரன்; சுக்ரன் இணைவும் பலமும் இருந்தால் 2 திருமணம் நடக்கும்.
ஏழாவது வீட்டு அதிபதியை பதினொன்றாம் வீட்டு அதிபதி பார்த்தாலும் 2 திருமணம் தான். .

லக்னாதிபதியோ அல்லது 5ஆம் அதிபதியோ அல்லது 9ஆம் அதிபதியோ பார்வை கிடைத்தால் ஒரே திருமணமாக மாறி விடுகிறது..