வரும் கல்வியாண்டில், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க இருப்பவர்கள், சிதம்பரம் காயத்ரி கோயிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.
தல வரலாறு: சோழ மன்னன் ஒருவன், அறியாமல் பெண் ஒருத்தியை கொலை செய்து விட்டான். இதனால் அவனுக்கு ஸ்திரீஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க பல தலங்களுக்கும் சென்றும் பலனில்லை. மன்னனின் நிலையை அறிந்த அந்தணர் ஒருவர், காயத்ரி மந்திரத்தை அவனுக்கு உபதேசித்ததுடன், தான் பெற்ற புண்ணியத்தையும் தாரை வார்த்துக் கொடுத்தார்.
இதனால் மன்னனை பிடித்த தோஷம் நீங்கியது. மகிழ்ந்த மன்னன், அந்தணருக்கு பொருள் கொடுக்க விரும்பினான். அதை மறுத்த அந்தணர், மன்னனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் காயத்ரிக்கு கோயில் எழுப்பி வழிபடும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி மன்னன் இங்கு காயத்ரிக்கு சிலை வடித்து கோயில் எழுப்பினான்.
மூன்று தரிசனம்: மூலஸ்தானத்தில் காயத்ரிதேவி தாமரை மலர் மீது இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்திருக்கிறாள். முத்து, பவளம், மஞ்சள், வெண்மை, மேகவண்ணம் ஆகிய நிறங்கள் கொண்ட ஐந்து முகங்களுடன்
அருளும் இவள் பத்து கைகளிலும் ஆயுதம் ஏந்தியிருக்கிறாள். இவள் காலையில் காயத்ரியாகவும், மதிய வேளையில் சாவித்திரி, மாலையில் சரஸ்வதியாக அருளுவதாக ஐதீகம். மூலஸ்தானத்திற்கு உள்ளேயே காயத்ரி எதிரில் ஒரு நந்தி இருக்கிறது. இவள் மும்மூர்த்திகள் மற்றும் முத்தேவியரின் அம்சமாக அருளுவதன் அடிப்படையில் சிவனுக்குரிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளனர். அம்பாள் பாதம் அருகில் ஸ்ரீசக்ரம் பொறித்த தகடு உள்ளது. இவளுக்கு அருகில் மற்றொரு காயத்ரி சிலை இருக்கிறது. இச்சிலையே ஆதியில் மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
காயத்ரிதேவி சந்நிதி முகப்பில் துவாரபாலகர்கள், இடப்புறத்தில் விநாயகர், முருகன் இருக்கின்றனர். கோஷ்டத்தில் அஷ்டபுஜ துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி உள்ளனர். மகாலட்சுமி கையில்

வேத தெய்வம்: விஸ்வாமித்திரர் காயத்ரி மந்திரம் சொல்லி, பிரம்மரிஷி பட்டம் பெற்றார். இவ்வாறு தொடர்ந்து அவராலும், பிற ரிஷிகளாலும் மந்திரம் சொல்லப்பட்டபோது தோன்றிய உருவத்தை காயத்ரியாக வடித்தனர். இவ்வாறு காயத்ரியின் வடிவம் உருவானது. எல்லா இடங்களிலும் பரவி, உலகத்தை இயக்கும் காயத்ரிதேவியே மந்திரங்களுக்கும் அதிதேவதை ஆவாள். பகவான் கிருஷ்ணர் கீதையில், "வேதங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என்கிறார். இவ்வாறு சிறப்பு பெற்றிருப்பதால் இவளுக்கு "வேதமாதா' என்றும் பெயருண்டு.
சூரியனுக்கு சக்தி தருபவளும் காயத்ரியே ஆவாள். சூரியனுக்கு உகந்தது ஆவணி மாதம். இம்மாத மூல நட்சத்திரத்தில் சூரியன் வெளிப்படுத்தும் வெப்பத்தை பொறுத்தே, வருடம் முழுவதும் தட்பவெப்பநிலை இருக்கும். இதன் அடிப்படையில் ஆவணி பவுர்ணமியை ஒட்டி இவளுக்கு 3 நாட்கள் விழா நடக்கிறது. தவிர, பவுர்ணமிதோறும் 1008 காயத்ரி மந்திரம் சொல்லி, காயத்ரி ஹோமத்துடன் விசேஷ அபிஷேக, பூஜைகளும் நடக்கிறது.
பிரார்த்தனை: பள்ளியில் சேர்க்கும் முன், பெற்றோர் இங்கு குழந்தைகளுடன் வர வேண்டும். காயத்ரிக்கு வஸ்திரம், சிவப்பு மலர் மாலை அணிவித்து, வடை, பாயாசம் நிவேதனம் செய்து வேண்டிக்கொண்டால் குழந்தைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
இருப்பிடம்: சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., தூரத்திலுள்ள கஞ்சித்தொட்டி ஸ்டாப் அருகில்.
திறக்கும் நேரம்: காலை 9.00 - 10.00, மாலை 6.00 - 7.30 . பவுர்ணமி நாட்களில் காலை 8.00 - 12.00.
போன்: 94433-26272, 04144-223 450.

dinamalar.ஆன்மிக கட்டுரைகள்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends