புதுடில்லி : பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையையும் மீறி அதிக இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. இதனமூலம், எக்கட்சியின் ஆதரவும் இன்றி தனித்து ஆட்சி அமைக்க இருப்பதோடு மட்டுமல்லாது, எதிர்க்கட்சி என்ற ஒன்றே இல்லாத நிலையையும் வரலாற்றில் உருவாக்கியுள்ளது. வதோதரா மற்றும் வாரணாசி தொகுதியில், எதிர்த்து நின்ற வேட்பாளர்களை இமாலய ஓட்டுகள் வித்தியாசத்தில், பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தோற்கடித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும், மோடி புராணமே பாடப்பட்டது என்று கூறினாலும் அது மறுப்பதற்கில்லை. மோடியின் வெற்றியை சர்வதேச நாடுகள் பாராட்டுவதோடு நின்றுவிடாமல், அவரை தங்கள் நாட்டிற்கு வர வைப்பதிலும், நாடுகள் பெரும் ஆர்வத்தை காட்டி வருகின்றன. மோடியை, தங்கள் நாட்டிற்கு வரவேற்பதில், பிரிட்டன் முந்திக்கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகள், மோடியை தங்கள் நாட்டிற்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. பிரிட்டன் நாடு, நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியால், பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், மோடியை தஙகள் நாட்டிற்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை, பிரிட்டன் பெற்றுள்ளது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends