குழந்தை உள்ளத்தோடு தேடினால், பெரியவா நிச்சயம் கிடைப்பா
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஉண்மையான குழந்தை உள்ளத்தோடு தேடினால், பெரியவா நிச்சயம் கிடைப்பா!
மிருதங்க வித்வான் ஒருவர் சிறு பையனாக இருந்தபோது பெரியவாளுடைய சந்நிதியில் நடந்த சங்கீத கச்சேரிக்கு தன் அப்பாவோடு போனார். அவருடைய அப்பாவும் மிருதங்க வித்வானானதால், அன்று மகனை மிருதங்கம் வாசிக்க அமர்த்திவிட்டார். இரவு எல்லாருக்கும் ப்ரஸாதம் வழங்கினார்கள். அப்போது பெரியவா அந்தப் பையனை மட்டும் அழைத்து ஒரு சிவப்புப் பட்டு வழங்கி ஆசிர்வதித்தார்.
பல வர்ஷங்கள் கழித்து அந்தப் பையன் வானொலி நிலையத்தில் பணி புரிந்துவந்தார். அப்போது வானொலி நிலைய இயக்குனரோடு பெரியவாளை தர்சனம் பண்ணப் போனார். போகும்போது ஞாபகமாக அந்த சிவப்புப்பட்டையும் எடுத்துக் கொண்டு போனார்.
பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு "இந்த பட்டு வஸ்த்ரம் பெரியவாதான் அனுக்ரகம் பண்ணிக் குடுத்தேள் ..." என்றதும், "ஆமா....அப்போ ஒனக்கு ஒம்பது வயஸ்.." என்று சொன்னதும், ஆடிப்போய்
விட்டார்!
45 வர்ஷங்களுக்கு முந்தி நடந்ததை, ஏதோ நேற்று நடந்த மாதிரி பெரியவா சொன்னார். ஞானிகள் காலம், இடம் இரண்டையும் கடந்தவர்கள் இல்லையா?
அதே பக்தர் வீட்டில் பெரியவாளுடைய படங்கள் விதவிதமான போஸ்களில் மாட்டியிருந்தார். சொந்த ஊரை விட்டு தஞ்சாவூரில் சிலகாலம் வசிக்க வேண்டிய சூழ்நிலை! அந்த வீட்டில் பெரியவாளுடையது ஒரு படம் கூட இல்லை! மனசுக்குள் ஏதோ தவிப்பு! சஞ்சலம் ! அரிசி வாங்குவதற்காக கடைக்குப் போனார். புது ஊர்!
மாதிரிக்காக ஒரு கிலோ அரிசி வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். அவர் குடுத்த பேப்பர் பை ரெண்டு நாட்களாக வீட்டில் கிடந்தது. மூன்றாவது நாள் அதை குப்பையில் போடுவதற்காக எடுத்தால்........அந்தப்பையின் மேல் பக்கத்தில் "இதோ! வந்துட்டேன் பாத்தியா!.." என்று அழகாக சிரித்துக்கொண்டு பெரியவா! பக்தருக்கு நன்றியில் அழுவதைத்தவிர என்ன பண்ண முடியும்?
------------------------------------------------------------------------------------உண்மையான குழந்தை உள்ளத்தோடு தேடினால், பெரியவா நிச்சயம் கிடைப்பா!