தலை சீவ மாட்டார் . கண்ணாடி பார்க்க மாட்டார் . மோதிரம் அணிந்ததில்லை . கைக்கடிகாரம் அணிய மாட்டார் . " என்னை காலண்டர் பார்க்கவைத்து, சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி " என்று சொல்லிக்கொண்டார் !
* முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் . மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தது .
* அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு . ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார் . " காலமோ சித்திரை ... நேரமோ பத்தரை ... உங்களுக்கோ நித்திரை ... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை " என்பதே அந்தப் பேச்சு !
* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது . சுயமரியாதை திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது . தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டத்தை சட்டமாக்கியது ... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

information

Information

* அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம் . 1806 பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன் , 1907 எகிப்து குடியரசுத் தலவர் கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது கின்னஸ்

--- ஆனந்தவிகடன் , 17. 03. 2010 .