இருதய நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று நம்மில் பலர் அறிந்திருப்போம், ஆனால் இருதய நோய் என்றால் என்ன என்பது பற்றி நமக்கு துல்லியமாக தெரிந்திருக்காது. அதனை கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்பார்கள், கரோனரி ஆர்டெரி டிஸீஸ் என்றும், மயோகார்டியல் இன்ஃபார்க்ஷன், இஸ்கீமியா என்றெல்லாம் இருதய நோய்களை குறிப்பிடுவார்கள். இவை எல்லாம் ஒன்றுதானா? அல்லது இதில் எது அபாயகரமானது போன்ற நுணுக்கமான விவரங்கள் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இருதய மற்றும் ரத்தக் குழாய்கள் தொடர்பாக எண்ணிலடங்கா மருத்துவ பெயர்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இவற்றில் அடிப்படையான சில பதங்களுக்கு விளக்கம் கிடைத்தாலே போதுமானது அல்லவா? மருத்துவரை நீங்கள் அணுகும்போது கீழ் வரும் தகவல்கள் தெரிந்திருந்தால் அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இருதய ரத்தக்குழாய் நோய்

கார்டியோ வாஸ்குலர் டிஸீஸ் என்ற இருதய ரத்தக் குழாய் நோய் என்பது மிகவும் பரந்து பட்ட ஒரு பதம். இதன் பெயர் ஒரு குறிப்பிட்ட நோய் நிலைமையை குறிப்பிடுவதாக இருந்தாலும் சில பல நோய்களின் தொகுப்பு என்று கூறுவதே பொருத்தமாகும்.

இன்னமும் துல்லியமாக கூறவேண்டுமென்றால், இருதய ரத்தக் குழாய் ஒழுங்கமைப்பில் எந்த ஒரு இடத்தில் ஏற்படும் சேதமும், நோயும் இருதய ரத்தக் குழாய் நோய் என்று அழைக்கப்படுகிறது. இருதய ரத்தக்குழாய் ஒழுங்கமைப்பு என்பது இருதயம் மற்றும் உடலில் உள்ள அனைத்து ரத்தக் குழாய்கள் அடங்கிய உறுப்புகளின் அமைப்பு ஆகும். ஆகவே இருதய-ரத்தக் குழாய் நோயில் 2 முக்கிய விஷயங்கள் அடங்கியுள்ளன.

இருதய நோய்கள் (கார்டியோ),
ரத்தக்குழாய்களில் ஏற்படும் நோய் (வாஸ்குலர்).

ரத்த நாளம் விரிவடைதல் அல்லது பலவீனமடைதல், கெண்டை தசை பகுதியில் இருக்கும் ரத்த நாளங்கள் பெரிதாகுதல் ஆகியவை இருதய-ரத்தக் குழாய் நோய் ஆகும். பிறவியிலேயே நாம் சிலவகை இருதய-ரத்தக் குழாய் நோய்களைப் பெற்றிருக்கலாம். பிற்பாடு மோசமான வாழ்நெறிகளால் சில வகை நோய்களைப் பெறவும் நேரிடும். இருதய-ரத்தக் குழாய் நோயின் இரு முக்கிய பகுதியை மேலும் கூர்ந்து கவனிப்போம்:

இருதயத்தில் ஏற்படும் நோய்கள்

இருதயத்தை தாக்கும் நோய்கள் மற்றும் நிலைமைகள் ஒட்டு மொத்தமாக இருதய நோய் என்று அழைக்கப்படுகிறது. இருதயத்தில் உள்ள தசை ரத்தத்தை பம்ப் செய்கிறது, இருதய தசைக்கு ரத்தத்தை கொண்டு வருபவை ரத்தக்குழாய்கள். இருதயத்தில் உள்ள ரத்தம் சரியான திசையில் செல்பவை வால்வுகள். இவை ஏதாவது ஒன்றில் பிரச்சினை வரலாம். இதுவும் பரந்துபட்ட ஒரு சொல்லாகையால் இருதயத்தில் ஏற்படும் நோய்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கிறது:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsகரோனரி ஆர்டரி டிஸீஸ்

இருதய தசைக்கு ரத்தத்தை அனுப்பும் குழாய்களில் ஏற்படும் நோய்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது, இதுதான் இருதய நோயின் பிரதான வடிவம் மேலும் மாரடைப்பிற்கு இதுவே பெரிதும் காரணமாகிறது. இருதய தசைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது.

இத்தகைய அடைப்பிற்கு காரணமாகும் நோயின் பெயர் அதெரோ
ஸ்லெரோஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. ரத்தகுழாய் தொடர்பான இருதய நோய்களில் சுலபமாக வெற்றிகரமாக சிகிச்சை செய்ய முடிவது இந்த வகை நோயே. அஞ்ஜைனா என்ற நெஞ்சு வலிக்கும், மயோ கார்டியல் இன்ஃபார்க்ஷன் என்ற மாரடைப்பு நோய்க்கும் இட்டுச் செல்பவை கரோனரி ஆர்டெரி நோய்கள்.

கரோனரி இருதய நோய்

இது கரோனரி ஆர்டெரி நோயை பெயரளவில் ஒத்திருந்தாலும் இது வேறுபட்ட நோய் வகையாகும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கூறி உங்கள் நண்பர்களையும் ஏன் உங்கள் மருத்துவரையும் கூட நீங்கள் அசத்தலாம். அதாவது ரத்தக்குழாய்களை தாக்கும் நோய்கள் கரோனரி ஆர்டரி நோய்கள். இருதய தசையை தாக்கும் நோய் கரோனரி இருதய நோய் இதுதான் அந்த வித்தியாசம்.

இருதய தசை நோய் (கார்டியோ மயோபதி)

இருதய தசை தொடர்பான அனைத்து நோய்களும் கார்டியோ மயோபதி என்று அழைக்கப்படுகின்றன. இதில் சிலவகை மரபுக்கோளாறுகளால் தோன்றுபவை. மற்ற வகை நோய்கள் எப்படி தோன்றுகின்றன என்பதை அறிவது மிகக் கடினம். மாரடைப்பால் ஏற்படும் இருதய தசையிழப்பிற்கு காரணமாகும் இஸ்கீமியா, இருதயம் விரிவடைதல், ஹைபர் ட்ராபிக் என்று அழைக்கப்படும் இருதயத் தசை இறுக்கமடைவது, அல்லது இடியோபதிக் என்று அழைக்கப்படும் காரணம் தெரியாத ஒன்று ஆகியவை இப்பிரிவின் கீழ் அடங்கும். இதில் பொதுவாக ஏற்படுவது காரணம் கண்டுபிடிக்க முடியாத இருதய விரிவாக்கம் என்ற நோயே.

இருதய வால்வு நோய்

இருதயத்தில் உள்ள வால்வுகள், ரத்தத்தை சரியான திசையில் செலுத்தும் வேலையைச் செய்கின்றன. பல்வேறு காரணிகளால் இந்த வால்வுகளில் பழுதுகள் தோன்றலாம். இதனால் வால்வுகள் குறுகலாம். இது ஸ்டெனொஸிஸ் என்று அழைக்கப்படுகிறது மற்றும் கசிவு எற்படுவதும் ஒரு வகை நோயாகும். சிரு வயதில் ஏற்படும் வாத நோய் சார்ந்த காய்ச்சல், இணைப்புத் திசு சேதங்கள், புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை முறை ஆகியவற்றால் வால்வுகள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இருதயத்தை மூடிக் கொண்டிருக்கும் சவ்வில் ஏற்படும் நோய்
(பெரிகார்டியல் நோய்)

இதில் குலையுறை அழற்சி (பெரிகார்டைட்டீஸ்), குலையுறையில் திரவம் சேர்தல் ஆகியவை தனித் தனியாகவோ அல்லது சேர்ந்தோ தோன்றலாம். இந்த நோய்க்கு மாறுபட்ட காரணங்கள் உண்டு. உதாரணமாக குலையுறை அழற்சியானது மாரடைப்பினால் ஏற்படலாம். இதன்காரணமாக குலையுறையில் திரவம் சேர்தல், மார் வலி ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கருவிலேயே ஏற்படும் இருதய நோய் (Congenital Heart Disease)

இதுவும் ஒரு பரந்துபட்ட பதமாகும் இதன் கீழ் பல்வேறு இருதய நோய்களை வகைப்படுத்தலாம். இருதய தசை உருவாக்கம், அதன் அறைகள் மற்றும் வால்வுகள் உருவாக்கத்தை இது தடுக்கும். இருதயத்தில் துளைகளில் ஒரு பகுதியில் துளைகளை குறுக்கும் நோய் இதனால் ஏற்படுவதே, சிலவகை நோய்களை பிறந்தவுடன் சில நாட்களிலேயெ கண்டு பிடித்து விடலாம் சிலவற்றை பிற்பாடுதான் கண்டுபிடிக்க முடியும்.

இருதயம் பழுதடைதல்

இது பொதுவாக கான் ஜெஸ்டிவ் இருதய பழுது என்று அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் போதுமான ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய முடியாத நிலையே இவ்வாறு அழைக்கப்படுகிறது. ரத்தத்தை இரைக்கும் தன்மையையே இருதயம் இழந்து விட்டது என்று இதற்கு பொருளல்ல. ஆனால் முக்கிய உறுப்புகளுக்கு ரத்தத்தை அனுப்ப முடியாமல் போகும் நிலையே இது. இதனால் மூச்சிறைப்பு மற்றும் சோர்வு ஏற்படலாம். இருதயம் பழுதடைவதால் உடலில் திரவம் சேர்ந்து விடுகிறது. இது இருதயத்தின், ரத்தக்குழாய்களின் பழுதுகளால் தோன்றுவதும் உண்டு.