திருமாலின் சயனத் திருக்கோலங்களின் பாகுபாடுகள்
திருமால் திருத்தலங்களில் மூல மூர்த்திகளின் நின்ற நிலை, வீற்றிருந்த நிலை, சயன நிலை என்ற மூன்று திருக்கோலங்கள் பொதுவாக எங்கும் காணப்படுகின்றன. சயனத்திருக்கோலத்தில் ஆதிசேஷன் மீது சயனித்துள்ள முறையில் மூலவர் திருமேனி காணப்படும். பொதுவாக எதிரே வணங்குபவரின் வலக்கை எதிரே திருவடி நீட்டப்பட்டிருக்கும். இதற்கு மாறாகவும் சில திருக்கோயில்களில் சயனம் அமைந்துள்ளது. உதாரணம் - காஞ்சி திருவெகாவில் சொன்னவண்ணம் செய்த பெருமாள், திருவாட்டாறு ஆதிகேசவ பெருமாள். மூலபேரருக்கு இருமருங்கிலும் ஸ்ரீதேவி, பூமிதேவிகளின் மூலத் திருமேனிகள் இடம்பெருகின்றன. பெருமாளின் நிலைக்கு ஏற்ப நின்றோ இருந்தோ காணப்படுகின்றனர். வலப்புறம் திருமகள், இடப்புறம் நிலமகள்;;. இரண்டு திருக்கரங்களில் ஒன்றில் மலர் ஏந்தப்பட்டிருக்கும், மற்றது தொங்கவிடப்பட்டிருக்கும். திருப்புளிங்குடி என்ற திவ்யதேசத்தில் மலர்மகளும் நிலமகளும் எதிரெதிரில் அமர்ந்து எம்பெருமான் திருவடிகளை வருடிக் கொண்டிருப்பதாக அமைந்துள்ளது. வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி என்று நம்மாழ்வார் பாடியுள்ளார்.
சயனப் பாகுபாடுகள்:
1. உத்தான சயனம் 1 திவ்யதேசம் திருக்குடந்தை
2. தர்பசயனம்; 1 திவ்யதேசம் திருப்புல்லாணி
3. தலசயனம் 1 திவ்யதேசம் திருக்கடன்மல்லை
4. புஜங்கசயனம் 20 திவ்யதேசங்கள் திருவனந்தபுரம், திருவரங்கம்
5. போகசயனம் 1 திவ்யதேசம் திருச்சித்ரகூடம்
6. மாணிக்கசயனம் 1 திவ்யதேசம் திருநீர்மலை
7. வடபத்ரசயனம் 1 திவ்யதேசம் ஸ்ரீவில்லிபுத்து}ர்
8. வீரசயனம் 1 திவ்யதேசம் திருஇந்தளூர்
என்று சயனத் திருக்கோலங்கள் - 27
Anantha sayanam
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks