Announcement

Collapse
No announcement yet.

ஆயிரத்து 550 ரூபாயில் திருப்பதி தரிசனம் ! IRCTC வ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆயிரத்து 550 ரூபாயில் திருப்பதி தரிசனம் ! IRCTC வ

    உங்கள் குடும்பத்தினர் 12 பேர் அல்லது நண்பர்கள், உறவினர்கள் 12 பேர் சென்னையில் இருந்து திருப்பதி திருமலைக்குச் சென்றுவிட்டு வரவேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? ரயில் பயணம் அல்லது பேருந்துப் பயணம் ஆகியவற்றுக்கு புக் செய்யவேண்டும். அதற்கு முன்னர் தரிசனத்துக்கு புக் செய்ய வேண்டும். ரயிலில் போனால் அங்கிருந்து திருமலைக்குப் பஸ் பிடித்துப் போகவேண்டும் என மலைக்க வைக்கும் பலவற்றை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருக்க சரி அடுத்த முறை போய்க்கொள்ளலாம் என தள்ளிப்போடும் சம்பவமும் நடக்கும்.

    இதற்கெல்லாம் சிம்பிளாக ஒரு தீர்வைத் தருகிறது இந்திய ரயில்வேயின் சுற்றுலாக் கழகம். (Indian Railway Catering and Tourism Corporation) 12 பேர் சேர்ந்தாகிவிட்டது அடுத்து என்ன செய்யலாம்.

    சிம்பிள்..IRCTC சுற்றுலாக்கழகத்தின் சென்னை எண் + 90031 40681 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு 12 பேர் இந்த தேதியில் சென்று வர விரும்புகிறோம் என்று சொன்னவுடன் அடுத்தது புக்கிங் ஃபார்மாலிட்டிஸ் இருக்கும்.

    ஒருவருக்கு 1550 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். குளிர்சாதன வசதி கொண்ட ஒரு டெம்போ டிராவலர் உங்கள் 12 பேரையும் ஏற்றிக்கொண்டு உதாரணத்திற்கு சென்னையில் காலை 5 மணிக்கு புறப்படுகிறது என்றால் ஆந்திர எல்லையில் சுமார் 7 மணிக்கு ஒரு சின்ன பிரேக். அதில் டீயோ, காஃபியோ குடித்துவிட்டு வேனில் ஏறி உட்கார்ந்தால் போதும் சரியாக 8.30 மணிக்கு கீழ் திருப்பதியில் ஒரு ஓட்டலில் காலை தரமான உணவு. இட்லி, குட்டி கல்தோசை, பொங்கல், வடை என ருசியான உணவு.

    அதையடுத்து மலைக்கு அழைத்துச்செல்லும் IRCTC சுமார் 11 மணிக்கு எல்லாம் 300 ரூபாய் கட்டண வழியில் உங்களை தரிசனம் செய்ய அனுப்பும். அளவான கூட்டமாக இருந்தால் 1 மணிக்கெல்லாம் தரிசனத்தை முடித்துக்கொண்டு உடனடியாக கீழ்த் திருப்பதி வந்தபின் அதே ஓட்டலில் மதிய உணவு.
    முடி காணிக்கை செலுத்தவும் IRCTC பணியாளர்களே நேரடியாக அழைத்துச்சென்று காணிக்கை செலுத்த விரைந்து ஏற்பாடுகள் செய்கின்றனர். முடித்தவுடன் அடுத்ததாக அலர்மேலு மங்காபுரம். அங்கு தரிசனம் முடித்தவுடன் புறப்பட்டால் 7 அல்லது 7.30 மணிக்கு உங்களை சென்னையில் இறக்கி விட்டுவிடுவார்கள்.

    காலை உணவு, மதிய உணவு, 300 ரூபாய் தரிசன கட்டணம் ஆகியவையும் 1550க்குள் அடங்கும்.மேலும், தரிசன கட்டணத்துக்கு உண்டான லட்டுக்களுக்காக நீங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை IRCTC பணியாளர்கள் அதை வாங்கி வைத்திருந்து தரிசனம் முடித்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்கள் கைகளில் கொடுத்துவிடுகின்றனர். . சரி தரிசனம் முடிய நேரம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமே தேவையில்லை. தரிசனம் முடியும்வரை அந்த வேன் காத்திருந்து சென்னையில் இறக்கிவிடும்வரை IRCTC உங்களுடனே பயணிக்கிறது.

    பாதுகாப்பான பயணம், சிக்கனம், டென்சன் இல்லாத ஒரு திருப்(ப)தி டிரிப் என அசத்துகிறது IRCTC.

    இதுபற்றிய விவரங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட ஐஆர்டிசியின் ரவீந்திரன் திருப்பதி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எந்த சுற்றுலாத்தலத்திற்கும் இதே போல சிறப்பு ஏற்பாடுகளை செய்து தர IRCTC காத்திருப்பதாகக் கூறினார்.

    இத்தகைய ஒரு பயண அனுபவத்தை நமக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்.ரவி, tourboss என்ற பயண ஏற்பாட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர். (www.tourboss.in) என்.ரவியை தொடர்பு கொள்ள : +99629 44015.

    படத்தில் : என்.ரவி, தலைமை செயல் அலுவலர், டூர்பாஸ்.


    - TNTV-SBNN
Working...
X