அலுவலகத்திலோ அல்லது வெளியிடங்களிலோ அல்லது ஏன் நம்
வீடுகளிலேயே கூட சில சமயம் சாதாரண விஷயத்தில் துவங்கும் ஒரு
வாக்குவாதம் மிகப் பெரிய சண்டையாகி, அனைவரும் வேடிக்கை பார்க்கும்
வண்ணம் அமைந்துவிடுகிறது. எல்லாம் முடிந்த பின்னர் நமக்கு தோன்றும்
இப்படி ஆகிப்போச்சேநாம இவ்வளவு கோபப்பட்டிருக்க
வேண்டியதில்லையோ? என்று.

பேசுபவர்கள் அருகே இருக்க ஆனால் நாம் கோபத்தில் இருக்கும்போது மட்டும்
கத்துவது ஏன்?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஒரு குரு தன் சிஷ்யர்களுடன் சென்றுகொண்டிருந்தார். போகும் வழியில்,
ஒரு வீடு முன்பு அந்த குடும்பத்து உறுப்பினர்கள் சிலர், வாக்குவாதத்தில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசப் பேச வார்த்தைகள் தடித்தது.

சிஷர்களிடம் திரும்பிய குரு, மக்கள் ஏன் கோபத்தில் இருக்கும்போது
மற்றவர்களை பார்த்து கத்துகிறார்கள்? என்று கேட்டார்
குரு சொன்னார், இரண்டு நபர்கள் கோபத்தில் சண்டையிடும்போது அவர்கள்
இதயம் நீண்ட தூரம் விலகிவிடுகிறது. அந்த தூரத்தை ஈடுசெய்யவே
அவர்கள் பேசும்போது அவ்வாறு கத்துகிறார்கள். எவ்வளவு கோபத்தில்
இருக்கிறார்களோ அவ்வளவு அதிகம் கத்தவேண்டியிருக்கிறது.

சீடர்கள ஒரு கணம் யோசித்தார்கள். அவர்களில் ஒருவன், கோபத்தில் நமது
பொறுமையை அமைதியை இழந்துவிடுகிறோம். அதனால் கத்துகிறோம்.

நாம் பேசிக்கொண்டிருக்கும் நபர் நமக்கு எதிரிலேயே இருக்க நாம் அதை
சாதரணமாக வெளிப்படுத்தலாமே ஆனால் ஏன் கத்துகிறார்கள்? குரு
மறுபடியும் கேட்க்க சிஷயர்கள் பதில் சொல்ல முடியாது விழித்தனர்.

என்னென்னவோ பதில்களை அவர்கள் சொல்லிப்பார்த்தார்கள். ஆனால்
அவர்களுக்கே அது திருப்தியாக இல்லை.

கடைசீயில் குரு சொன்னார், இரண்டு நபர்கள் கோபத்தில்
சண்டையிடும்போது அவர்கள் இதயம் நீண்ட தூரம் விலகிவிடுகிறது. அந்த
தூரத்தை ஈடுசெய்யவே அவர்கள் பேசும்போது அவ்வாறு கத்துகிறார்கள்.
எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்களோ அவ்வளவு அதிகம்
கத்தவேண்டியிருக்கிறது.

ஆனால் இரண்டு பேர் காதலிக்கும்போது ஏன் மெல்லிய குரலில் அமைதியாக
பேசுகிறார்கள்? ஏனெனில் அவர்கள் இதயம் நெருக்கத்தில் இருக்கும்.
அவர்களுக்கிடையே இடைவெளி என்பதே சொல்லப்போனால் இருக்காது.
காதல் இன்னும் அதிகமாக இருக்கும்போது அந்தக் குரலும் இன்னும் குறைந்து
மிகவும் சன்னமாகிவிடும். இறுதியில் சன்னமாக கூட பேச தேவையின்றி
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் என்று இருப்பார்கள்.
So, இதயங்கள் அருகே இருக்கும்போது அங்கே கூச்சலுக்கோ கோபத்துக்கோ
வழியில்லை.

ஆகையால். நீங்கள் யாருடனாவது வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்தால்
இதயங்கள் விலகிவிட அனுமதிக்காதீர்கள். உங்கள் இடைவெளியை
அதிகப்படுத்தும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். சில சமயம் அந்த
இடைவெளி பெரிய தூரமாகி நாம் அந்த வழியில் திரும்ப வரமுடியாத ஒற்றை
வழி பாதையாகிவிடும். நீங்கள் கத்துவதால் சாதிப்பதை விட, மென்மையாக
கூறும் வார்த்தைகள் அதிகம் சாதித்துவிடும்.
- See more at: http://rightmantra.com/?
p=1195#sthash.RTGgmPPB.dpuf