
Below is a writeup from a monthly magazine:
த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிடம், Уதங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை வணங்குகிறீர்கள்?Ф என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியுள்ளார்.
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ
வேதாந்தவித் சந்த்ரஸஹஸ்ரதர்சீ |
மாஸோபவாஸீ ச பதிவ்ரதா ச
ஷட் ஜீவலோகே மம வந்தனீயா: ||
- நித்யான்ன தாதா: தினமும் அன்னதானம் செய்பவன்,
o ஸ்நானம், ஸந்த்யா, காயத்ரீ முதலான ஜபம், ஒளபாஸனம் தேவபூஜை, வைச்வதேவம் ஆகிய ஷட்கர்மாக்களைச் செய்தபின் அதிதிக்கு அன்னமிடுபவன்.
- தருணாக்னி ஹோத்ரீ:
o இளம் வயதிலேயே விவாஹம் செய்து கொண்டு அக்னி ஹோத்ரம், ச்ரௌத கர்மாக்கள் ஆகியவற்றைச் செய்பவன்.
- வேதாந்த வித்:
o வேதம், வேதாந்தம், சாஸ்த்ரம் கற்றுணர்ந்து அதன்படி நடப்பவன்.
- சந்த்ர ஸஹஸ்ரதர்ஸீ:
o 1000 பூர்ண சந்திரர்களைப் பார்த்தவன்
இந்த ஸ்லோகத்திலிருந்து, ஆயிரம் பூர்ண சந்த்ரன் கண்ட Уஸஹஸ்ர சந்திரதர்சிФ மற்ற சிறந்த ஐவருக்கு நிகராகப் போற்றப் படுகிறான் என்று தெரிகிறது. -
ஆக ஸ்ரீ கிருஷ்ண பகவானே வணங்கும் சிறப்புடையதாகச் சொல்லப்படும் இந்த சதாபிஷேகம் செய்து கொள்பவரே குறைவு. செய்து கொள்ளும் சிலரையும், தரிசிக்கும் பாக்கியமே எல்லோருக்கும் கிட்டுவதில்லை என்பதனை அனுபவத்தில் கண்டவன் என்பதால், தரிசித்தவர்கள் அனைவரின் அடி பணிகிறோம். இந்த "ஸஹஸ்ர சந்திரதர்சி" நம்மையும், நம் குலத்தையும் வாழ்த்தட்டும்.
Bookmarks