துலாம்
இந்த குருப்பெயர்ச்சி, வாழ்வின் நெளிவு- சுளிவுகளை, சமூகத்தில் வளைந்து கொடுத்துப் போகும் கலையை உங்களுக்குக் கற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: ரேவதி நட்சத்திர நாளில் திருவானைக்கா ஸ்ரீஜம்புகேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஏழை கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சுபிட்சம் வந்து சேரும்.

விருச்சிகம்
இந்த குருப்பெயர்ச்சி, முதல் வரிசையில் உங்களை உட்காரவைப்பதுடன், வசதி- வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்: அமாவாசை நாளில் திருவிடைமருதூரில் அருளும் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடுங்கள். வாரிசு இல்லாதவர்களுக்கு உதவுங்கள். வளம் பெருகும்.

தனுசு
இந்த குருப்பெயர்ச்சி, சற்றே போராடி புதிய முயற்சிகளை முடிக்கவைப்பதாக அமையும்.
பரிகாரம்: திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை யும், திருவாசகம் பாடி வணங்குங்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

மகரம்

இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவதுடன், வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்று வதாக அமையும்.
பரிகாரம்: கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசக்கரபாணிப் பெருமாளை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.

கும்பம்
இந்த குருப்பெயர்ச்சி, செலவுகளையும், அலைச்சலையும் தந்தாலும், ஓரளவுக்கு வெற்றி பெற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதி நாள்களில் விராலிமலைக்குச் சென்று ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுங்கள். வினைகள் யாவும் நீங்கும்

மீனம்
இந்த குருப்பெயர்ச்சி, நீங்கள் தொட்டதை எல்லாம் துலங்கவைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங் களையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: பௌர்ணமி தினங்களில் நாமக்கல் சென்று, ஸ்ரீநரசிம்மரையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். துப்புரவுப் பணியாளருக்கு பொருளுதவி செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும்.


குரு பகவான் காயத்ரீ
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்
குரு பகவான் மந்திரம்
தேவானாம்ச ருஷினாம்ச குரும்
காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய
தம் நமாமி பிருஹஸ்பதிம்
கருத்து: தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் குரு, பொன்னன், மூவுலகங்களின் புத்தி சக்தியாக விளங்குபவராகிய பிரகஸ்பதியை வணங்குகிறேன்

சாம் மகேந்திரன்
Source: சாம் மகேந்திரன்
நன்றி விகடன்
( VikatanAstro)


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends