புதுடில்லி: வெளியூர் செல்வதற்கு வழங்கப்பட்ட சிறப்பு பயணச்சலுகைகளை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 6 எம்.பி.,க்கள் வீடுகளில் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தி வருகிறது. டில்லி மற்றும் ஒடிசாவில் உள்ள எம்.பி.,க்கள் வீடுகளில் சி.பி.ஐ., அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக டிராவல்ஸ் ஏஜன்ஸி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இது போன்ற மோசடி செய்திருப்பதில் 3 பேர் தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாகவுள்ளனர். 3 பேர் மாஜி ராஜ்யசபா எம்.பி.,க்கள் தற்போதைய எம்.பி.,க்கள் பண்டோபாத்தியாயா, பரிஜேஸ், லால் , முன்னாள் எம்.பி.,க்கள் ஜே.பி.என்.,சிங், ரேணுபாலா, மௌமீத், அடங்குவர்.

எப்படி மோசடி நடந்தது ? அதாவது, எம்.பி.,க்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள் செல்வற்கான பயணச்செலவை அரசிடம் பெற்று கொள்ள முடியும். ஆனால் பல எம்.பி.,க்கள் வெளியூர் சென்றதாக கணக்கு காட்டியுள்ளனர். அவர்கள் வெளியூர் முறையாக போனதில்லை. இதற்கான கட்டணச்செலவை போலி பில்கள் தயாரித்து பார்லி., செயலகத்தில் தாக்கல் செய்து பணம் பெற்றுள்ளனர்.


உதாரணத்திற்கு ஐக்கிய ஜனதாதள எம்.பி,.யான அனில்குமார் சகானி, விமான டிராவல் ஏஜன்டுகளிடம் போலி பில் பெற்றுளார். இவர் 9.5 லட்சம் அரசிடம் இருந்து மோசடி மூலம் பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இன்னும் பல எம்.பி.,க்கள் சிக்குவார்கள் என சி.பி.ஐ., வட்டாரம் தெரிவிக்கிறது.


பயணச் சலுகைகள் என்னென்ன? பொதுவாக எம்.பி.,க்களுக்கு பயணச்செலவுக்கென பல்வேறு சலுகைகள் அரசு வழங்கி வருகிறது. இதில் ஏராளமான வசதிகளை அவர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். அப்படி இருந்தும், மேலும் தவறான வழியில் சென்று ஆதாயம் தேட இந்த எம்.பி.,க்கள் முயற்சித்திருப்பதுதான் படு கேவலமான விஷயம் ஆகும்.


அரசு தரப்பில் எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விவரம் இதோ ;


பார்லிமென்ட் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், குழுக் கூட்டங்களில் பங்கேற்கவும் பயணப்படி வழங்கப்படுகிறது. உறுப்பினர் வழக்கமாக வசிக்கும் இடத்திலிருந்து, பார்லிமென்ட் அல்லது சபைக்குழு கூட்டம் நடைபெறும் இடம் வரை சென்று திரும்புவதற்கு, இந்த பயணப்படி வழங்கப்படும்.


ரயில் - விமான பயணம்: ரயில் பயணம் என்றால், ஒரு முதல் வகுப்பிற்கான கட்டணமும், ஒரு இரண்டாம் வகுப்பிற்கான கட்டணமும் வழங்கப்படும். எம்.பி., எந்த வகுப்பில் பயணம் செய்தாலும் இந்த பயணப்படி வழங்கப்படும். விமானம் மூலம் பயணம் செய்தால், ஒன்றே கால் மடங்கு கட்டணம் வழங்கப்படும். சாலை வழியாக பயணம் செய்தால், கிலோ மீட்டருக்கு 13 ரூபாய் வழங்கப்படும். உறுப்பினர் வசிக்கும் இடத்திற்கும் பார்லிமெனட் அல்லது குழுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, நேரிடையாக செல்ல விமான சேவை கிடைக்காத பட்சத்தில், ஒரே நாளில் தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லும் வகையில் எந்த வகை பயணத்தையும் உறுப்பினர் மேற்கொள்ளலாம். உறுப்பினரின் மனைவி அல்லது கணவர் பார்லிமென்ட் சாதாரண கூட்டத்தொடர் நடைபெறும்போது ஒருமுறையும், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்போது இரு முறையும், ஆக மொத்தத்தில் ஆண்டுக்கு 8 தடவைக்கு மிகாமல் உறுப்பினர் வசிக்கும் இடத்திலிருந்து டில்லிக்கு விமானம்/ ரயில், சாலை வழியாக வந்து திரும்பலாம்.


இலவச ரயில் பயண அட்டை: ஒவ்வொரு உறுப்பினரும் அவரோ அவருடைய கணவர் அல்லது மனைவியோ இந்தியாவின் எந்த பகுதிக்கும் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிக்கவும் அவருடைய உதவியாளர் ஏசி இரட்டை படுக்கை வசதி பெட்டியில் பயணிக்கவும் வசதியாக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டை உறுப்பினரின் பதவிக்காலம் முழுமைக்கும் செல்லுபடியாகும்.


8 முறை விமானப் பயணம்: ஒவ்வொரு உறுப்பினரும் அவருடைய கணவர் அல்லது மனைவியுடனும் அல்லது உதவியாளர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆண்டுக்கு 34 முறை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விமான பயணம் மேற்கொள்ளலாம். உறுப்பினரின் கணவர் அல்லது மனைவி அல்லது உதவியாளர், உறுப்பினரைப் பார்ப்தற்கென 8 முறை விமானப் பயணம் மேற்கொள்ளலாம். ஊனமுற்ற உறுபபினரின் உதவியாளர், உறுப்பினருடனேயே பயணிக்க அனுமதி உண்டு. இப்படி பல சலுகைகள் எம்.பி.,க்களுக்கு உண்டு.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsSourceinamalar