ஒன்றில் மனம் ஒன்றாமல் ஈரடியையும் நாடாமல்
முக்குணங்களில் மூழ்கி நான்கும் புரியாமல்
ஐந்தை அடக்கமுடியாமல் ஆறறிவை உபயோகிக்க தெரியாமல்
ஏழேழ் பிறவிகளிலும் எதையும் எட்டாமல்
ஒன்பது வாசல்களின் பத்துடன் பரிதவிக்கிறோம்


ஆண்டவனிடம் கேட்டேன் அனைத்தையும் ஆக்கினாய் அனைத்துமாய் ஆனாய்
ஆனால் அடியேன் மனத்தை மட்டும் உன் ஒருவனிடம் வைத்துக்கொள்ளாமல்
ஐவரிடம் கொடுத்துவிட்டாய்

அவனை மேலும் கேட்டேன் , பதிலும் கிடைத்தது.

பாரளந்தாய் நொடிப்பொழுதில்
பாரதம் முடித்தாய் 18 நாட்களில்
கானகம் கடந்தாய் 14 வருடத்தில்
பாவம் களைய எத்தனை சன்மங்களோ

சன்ம சன்மமாய் காத்துக்கிடந்தும்
பாவங்கள் குறைந்தபாடில்லை

குறையாத பாவம் நிறைவாக தீர
மறையின் பொருள் மறையாமல் தெரிய
தெரிந்த நாமங்களை தெளிவாக செப்ப
செப்பும் நாமங்களை குறையாமல் ஏத்த
ஏறியிருக்கும் பாவங்கள் நிறைவாக தீருமே

உணர்ந்தேன் கண்டுகொண்டேன் முயற்சிக்கிறேன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsPosted by: Narasimhan KP <kpnarasimhan@yahoo.com>