Brahminsnet.com - Forum - Powered by vBulletin
Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!
Results 1 to 1 of 1

Thread: குரு பெயர்ச்சி 2014 பலன்கள் & பரிகாரங்கள்! - 1

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    Super Moderator Crown soundararajan50's Avatar
    Join Date
    Jun 2012
    Location
    Tiruvannamalai
    Age
    67
    Posts
    7,510
    Downloads
    18
    Uploads
    0
    Rep Power
    852
    Font Size

    Default குரு பெயர்ச்சி 2014 பலன்கள் & பரிகாரங்கள்! - 1

    பூர்வ ஜென்மத்தில் அவரவர் செய்த கர்மாவின் படிதான் இந்த ஜென்மத்தில் ஜனன காலத்தில் ஜாதகத்தில் அந்தந்த கட்டங்களில் நவக்கிரகங்கள் அமர்கின்றன. அதையொட்டியே நம் வாழ்வு அமையும். இருப்பினும் வேண்டுதல், வழிபாடு, பரிகாரங்கள் இவற்றின் மூலம் கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் தோஷங்களால் ஏற்படும் இன்னல்களை குறைத்துக்கொள்ள முடியும்.

    மேலும் இந்த குரு பெயர்ச்சி போன்ற கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை ஒரு எச்சரிக்கையாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதுவே இறுதியானதல்ல. முடிவும் அல்ல. ஒரு ஊருக்கு போகிறீர்கள். பாதை எப்படி இருக்கும் என்று தெரியாது. “இன்னின்ன இடத்தில் இன்னின்ன தடைகள் இருக்கும்…. சாலை இத்தனை மோசமாக இருக்கும்… அங்கு பார்த்து ஜாக்கிரதையாக செல்லுங்கள்!” என்று உங்களுக்கு சொன்னால், அது உங்கள் பயணத்திற்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும்! அது போலத் தான் இந்த குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்.

    இவை அனைத்தும், நமது சுமூகமான வாழ்க்கைப் பயணத்திற்கு உதவிடவே கூறப்படுபவை. நம்மை பயமுறுத்த அல்ல.

    மேலும் நவக்கிரகங்கள் என்பவை இறைவன் இட்ட ஏவலை, அவன் வகுத்த நெறிமுறைகளின்படி அவன் சார்பாக செய்பவை. எனவே, எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் நவக்கிரகங்களை விட, நாம் வணங்கும் இறைவன் பெரியவன் என்பதை மறக்கக்கூடாது.

    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

    நவக்கிரகங்களும் ஜாதக கட்டங்களுமே ஒருவரது வாழ்க்கையை தீர்மானிப்பவை என்றால் கோவில்கள் எதற்கு? அங்கு வழிபாடு எதற்கு ? தெய்வங்கள் எதற்கு? எனவே கிரகங்களின் பெயர்ச்சிகளால் பலன்கள் நன்றாக இல்லை என்று கருதுபவர்கள் மனம் கலங்காது தாங்கள் விரும்பும் தெய்வத்திடம் மாறாத பக்தியை செலுத்தி, கூடுமானவரை அனைவருக்கும் நல்லதையே செய்து வரவேண்டும். தான தருமங்களை அவரவர் சக்திக்கு ஏற்ப செய்யவேண்டும். ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசிக்கவேண்டும்.

    நல்லதே நினையுங்கள். நல்லதே பேசுங்கள். நல்லதே செய்யுங்கள். நல்லதே நடக்கும். நடந்து தான் தீரும்!

    திருக்கணித பஞ்சாங்கப்படி நிகழும் ஜய வருடம் ஆனி மாதம் 5-ம் தேதி வியாழக்கிழமை (19.6.2014) கிருஷ்ணபட்சத்து, சப்தமி திதி, கீழ்நோக்குள்ள பூரட்டாதி நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த சித்தயோகத்தில் பஞ்ச பட்சியில் மயில் துயில்கொள்ளும் நேரத்தில் உத்ராயணப் புண்ணிய காலம் கிரீஷ்ம ருதுவில் பிரகஸ்பதி எனும் குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடகம் ராசிக்கு காலை மணி 9.01க்கு பெயர்ச்சி ஆகிறார்.

    குரு பெயர்ச்சியை முன்னிட்டு தினகரன் நாளிதழுக்காக திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா அவர்கள் கணித்த குரு பெயர்ச்சி பலன்கள் கீழே ராசிகளுக்கும் தொகுத்து தரப்பட்டுள்ளது.



    குரு பெயர்ச்சி பலன்கள்(13.06.2014 முதல் 04.07.2015 வரை)

    கணித்தவர்: திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா
    மேஷம்

    மேஷம்: கடந்த ஆண்டில் குரு பகவானின் மூன்றாம் இடத்து சஞ்சாரம் தற்போது நான்காம் இடமாகிய சுகஸ்தானத்துக்கு வர உள்ளது. இதனால் வாழ்க்கையில் நிம்மதி கூடும். நன்கு ஆலோசித்து செயல்படும் திறன் ஓங்கும். திடீர் பயணங்கள் இருக்கும். அதிக அலைச்சலுடன் சுபகாரியங்கள் நடந்தேறும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலையால் சேமிப்பும் உயர்வடையும். வீடு, மனை, நிலம் போன்ற அசையா சொத்துக்களில் முதலீடு செய்து வைப்பது நல்லது. சிலருக்கு தங்கம், வெள்ளி, வைர நகைகள், ஆடை, ஆபரணங்கள் சேரும்.

    தாயார் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் இழந்த சொத்துக்களை மீட்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். திடீர் தொழில், ஆன்மிக பயணங்கள் இருக்கும். சுபசெலவுகள் இருக்கும். தாயார் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழிலில் ஓய்வின்றி உழைப்பதும், அதிகப்படியான அலைச்சலும் இருக்கும். 65 விழுக்காடு நற்பலனை காணும் வகையில் குருபகவான் அருள் செய்வார்.

    மாணவர்கள்: உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் இன்ஜினியரிங், இயற்பியல், உடற்கல்வி, பிசியோதெரபி, பயோ டெக்னாலஜி துறை மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு.

    பெண்கள்: குடும்பத்தின் மகிழ்ச்சியை தக்க வைப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் அவசியம். கணவருக்கு அவ்வப்போது ஆலோசனை சொல்வீர்கள். முக்கியமான முடிவுகளை செவ்வாய் கிழமையில் எடுப்பது நல்லது. ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும்.

    ஆரோக்யம்: நீண்டநாள் தொந்தரவுகள் முடிவுக்கு வரும். அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவது உடல்நலத்தை பாதிக்கும். உடல்நலத்துக்காக சித்த, ஆயுர்வேத மருந்துகளை நாடலாம்.

    தொழில், உத்யோகம்: அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிட்டும். டிராவல்ஸ் நடத்துபவர்கள், பழைய பொருட்களை வாங்கி விற்பவர்கள் நன்மை காண்பார்கள். கட்டிட கலை, சமையல் கலை சார்ந்தோருக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உணவுப்பண்ட வியாபாரம் செழிக்கும்.

    Dear you, Thanks for Visiting Brahmins Net!
    JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



    பரிகாரம்: பிரதி மாதம் கிருத்திகையில் விரதம் இருந்து ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும் போது வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி முத்துக்குமார சுவாமியை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்வதால் கூடுதல் நன்மை உண்டாகும்.

    =================================================================
    ரிஷபம்

    ரிஷபம்: தற்போதைய குருப்பெயர்ச்சியால் சில சங்கடங்கள் இருக்கும். குரு பகவான் தன ஸ்தானத்திலிருந்து 3ம் இடத்திற்கு பெயர்வதால் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத அலைச்சல் இருக்கும். எதிலும் தடங்கலுக்கு பின் வெற்றி கிடைக்கும். முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். எதிலும் ஒருவித பயம் இருக்கும். உடன்பிறந்தோர் உதவுவார்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள்.

    இக்கட்டான நேரங்களில் நண்பர்களின் உதவியால் வெற்றி கிடைக்கும். சுயமுயற்சியால் வலிமை கூடும். வாழ்க்கைத் துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் நல்ல வெற்றி கிடைக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்றிணைவதற்கான சூழ்நிலை கூடி வரும். இக்கட்டான சூழலில் அதிகம் பேசாது அமைதி காப்பது நல்லது. பணிச்சுமையால் ஞாபக மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதையும் எழுதி வைத்து செயல்படுவது நல்லது. இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு 50 சதவீத நற்பலன்களை தரும்.

    மாணவர்கள்: கல்வி நிலை சிறப்பாக அமையும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடிப்பார்கள். ஏரோநாட்டிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அறிவியல் துறை மாணவர்கள் சிறப்பான நற்பலன்களை காண்பார்கள். ஆசிரியரின் உதவியோடு சாதிப்பார்கள்.

    பெண்கள்: அவ்வப்போது மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். இக்கட்டான சூழலில் கணவரின் ஆலோசனைகள் பயன்தரும். அக்கம்பக்கத்தாரிடம் உள்ள சுமுகஉறவு உதவியாய் அமையும். முன்பின் தெரியாதவர்களிடம் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

    ஆரோக்யம்: உடல் ஆரோக்கியத்தில் உண்டாகும் சிறு பிரச்னைகளை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது.

    தொழில், உத்யோகம்: கூட்டுத்தொழில் லாபகரமாக இருந்தாலும், பங்குதாரர்களோடு கருத்து வேறுபாடு தோன்றும். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் சற்று நிதானித்து செயல்படவேண்டும். இயந்திரங்கள் சார்ந்த தொழிலில் சிறப்பான தனலாபம் உண்டு. உத்யோகஸ்தர்கள் தங்கள் பொறுப்புகளை யாரை நம்பியும் விட்டு செல்வதோ, அடுத்தவர்களின் வேலையை கூடுதலாக சுமப்பதோ கூடாது.

    பரிகாரம்: தினமும் தியானம், யோகா பயிற்சிகளை செய்து வருவது மனதுக்கும், உடலுக்கும் நன்மை பயக்கும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலையில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும். திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வணங்க மன நிம்மதி கூடும்.

    =================================================================
    மிதுனம்

    மிதுனம்: தற்போது தனஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள குரு பகவானின் செயல்பாட்டால் தடையில்லாத தனவரவு இருக்கும். பொருளாதார நிலை உயரும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அசையா சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். எந்த ஒரு விஷயத்திலும் நன்மை தீமையை ஆராய்ந்து யோசித்து செயல்படுவதால் நிச்சயம் வெற்றி உண்டாகும். பேச்சாற்றல் கூடும்.

    உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலை, மன நிலையில் அக்கறை அவசியம். தம்பதியருக்குள் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களோடு கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். முன்பின் தெரியாத புதிய நபர்களுடன் மிகுந்த கவனத்துடன் பழக வேண்டியது அவசியம். வாகனங்களை இயக்கும் போது நிதானம் தேவை. இந்த குருப்பெயர்ச்சியால் கடன் பிரச்னை தீரும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் செயல்படுவீர்கள். 80 சதவீத நற்பலன்களை தரும் வகையில் இந்த குருப்பெயர்ச்சி அமைந்துள்ளது.

    மாணவர்கள்: அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாற்று துறை மாணவர்களும், ரசாயனம், இயற்பியல், புவியியல் துறை சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். குருவின் அருளால் பொதுஅறிவு வளரும். கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

    பெண்கள்: உங்களின் விவேகமான அணுகுமுறை குடும்ப பிரச்னைகளுக்கு எளிய தீர்வை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவரோடு அவ்வப்போது வீண் விவாதம் தோன்றலாம்.

    ஆரோக்யம்: ஒற்றைத் தலைவலி, நரம்புத்தளர்ச்சி, கைகால் குடைச்சல், இடுப்பு வலி பிரச்னைகளால் உடல்நலம் பாதிக்கப்படலாம். இயற்கை மருத்துவமுறை நன்மை தரும்.

    தொழில், உத்யோகம்: உங்கள் பேச்சு திறமையால் காரியங்களை சாதிப்பீர்கள். உயர்பதவியில் உள்ளோர் அலைச்சலை சந்திக்க நேரும். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி, இன்சூரன்ஸ். சாப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பத்திரிகை துறை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். வெளிநாட்டு பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். சுயதொழில் செய்வோர் பார்ட்னர்ஷிப் ஏதுமின்றி தனித்து செயல்பவடுவது நல்லது.

    பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று வணங்குவது நல்லது. இயலாதவர்கள் இருந்த இடத்திலிருந்தே பெருமாளை தியானிப்பதும், விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்வதும் நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாத பெருமாளை வணங்க நன்மை உண்டாகும்.

    =================================================================
    கடகம்

    கடகம்: கடந்த ஆண்டு அதிக அலைச்சலை தந்த குருபகவான் இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்கு வர உள்ளார். இதனால் ஏதேனும் ஒரு வழியில் நினைத்தது நடக்கும். ஆறாம் இடத்திற்கும் அதிபதி குரு பகவானே என்பதால், அவர் ஜென்ம ராசியில் இடம் பெறும் நேரத்தில் மனசஞ்சலம் அதிகரிக்கும். கோயில்களுக்கு செல்லுதல், இயலாதவர்களுக்கு உதவுதல், தான தருமங்கள் செய்தல், சாதுக்கள், சந்யாசிகள், ஆன்மிக பெரியோர்களுடனான சந்திப்பால் மனசஞ்சலம் நீங்கும். எதிலும் அவசரப்படாது நிதானத்துடன் சிந்தித்து செயல்படுங்கள்.

    ஜென்ம ராசியில் குரு அமர்வதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைப்பேறு வேண்டி காத்திருப்பவர்களுக்கு புத்ரபாக்யம் ஏற்படும். பிள்ளைகள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குடும்ப சூழ்நிலை காரணமாக பிள்ளைகளை விட்டு பிரிந்து வாழும் பெற்றோர்கள் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணத்திற்காக காத்திருப்போருக்கு நல்ல வரன் அமையும்.

    பிரச்னைக்குரியவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. திடீர் தொலைதூர பயணங்களுக்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். முன்னோர்களின் சொத்துகளால் அனுகூலம் உண்டு. கடன் பிரச்னைகள் தீரும். வழக்குகள் முடிவுக்கு வரும். பொறுப்புகள் கூடும். இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு 70 சதவீத நற்பலன்களை தரும்.

    மாணவர்கள்: மாணவர்களுக்கு ஞாபக மறதி பிரச்னை தீரும். பாடங்களை வேகமாக படித்து முடித்து விடுவீர்கள். ஆசிரியர்களின் துணையோடு மாணவர்கள் கல்வியில் முதன்மை பெறுவர்.

    பெண்கள்: பிறந்த, புகுந்த வீட்டுக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். நவீன வீட்டு உபயோக பொருட்களை வாங்குவீர்கள். கணவர் உறுதுணையாக இருப்பார். நீங்கள் தகுந்த நேரத்தில் அவருக்கு உரிய ஆலோசனையை சொல்வீர்கள். வீட்டில் சுபநிகழ்வுகள் இருக்கும். குடும்ப விசேஷங்களில் தனித்து செயல்படுவீர்கள்.

    ஆரோக்யம்: காது, கழுத்து, தோள்பட்டை, மார்பு பகுதிகளில் சிறு பிரச்னைகள் தோன்றலாம். ஒரு சிலருக்கு தோலில் பிரச்னைகள் தோன்றலாம்.

    தொழில், உத்யோகம்: அலுவலகத்தில் உடன் பணி புரிவோர், ஒத்துழைப்பு அளிப்பார்கள். குளிர்பானங்கள், உணவு பொருட்கள் வியாபாரம் செய்வோர், பொன், வெள்ளி போன்ற ஆபரண தொழில்செய்பவர்கள், ஜவுளி, சென்ட், பேன்சி பொருட்கள் விற்பனையாளர்கள், வங்கி, இன்சூரன்ஸ் ஏஜென்டுகளுக்கு சிறப்பான தனலாபம் இருக்கும்.

    பரிகாரம்: பவுர்ணமி தோறும் சத்யநாராயண விரதம் மேற்கொள்வது நல்லது. நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

    =================================================================
    சிம்மம்

    சிம்மம்: 11ம் இடத்து குரு தற்போது 12ம் இடத்திற்கு வந்து அமர்கிறார். இதனால் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். குழப்பத்தால் தெளிவான முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. எடுத்த பணியை வெற்றிகரமாக முடிக்க கூடுதல் அலைச்சலை சந்திக்க நேரும். ஆனால் அநாவசிய செலவுகள் குறையும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் எனும் பழமொழி குருபகவானுக்கு பொருந்தாது. முக்கியமான பணிகளின் போது அடுத்தவர்களை நம்பி காத்திருக்க வேண்டி வரும்.

    குடியிருக்கும் வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். வாகன சேர்க்கை உண்டு. தாயார் வழி உறவினர்களால் ஆதாயம் இருக்கும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். உடன்பிறந்தோருக்காக சில தியாகங்கள் செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. யாரையும் நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது கூடாது.

    கொடுக்கல், வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியம். ஆன்மிகத்துக்காக அதிகம் செலவழிப்பீர்கள். மனதில் குழப்பமான சூழல் நிலவும். கனவு தொல்லையால் உறக்கம் பாதிக்கும். பொதுவாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமற்ற நிலையை தந்தாலும் நீங்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்கள் என்பதால் கவலை இல்லை. உங்களுக்கு 55 சதவீத நற்பலன்களை இந்த குருப்பெயர்ச்சி அருள்கிறது.

    மாணவர்கள்: உயர்கல்வி மாணவர்களுக்கு எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். குரு பகவானின் அமர்வு நிலை உங்கள் எழுத்து வேகத்தை உயர்த்தும். நிறைய மாதிரி தேர்வுகளை எழுதிபார்ப்பது நல்லது. இன்ஜினியரிங், மொழிப்பாடம், கலைத்துறை, வேளாண்மை, சைகாலஜி துறை மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

    பெண்கள்: குடும்ப விவகாரங்களில் உங்களின் தலையீடு பிரச்னையை பெரிதாக்கும். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் இடையே மனஸ்தாபம் உண்டாகலாம். குடும்பப் பிரச்னைகளை அண்டை அயலாரோடு விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது.

    ஆரோக்யம்: வேலை பளுவால் சுகவீனம் தோன்றும். வாந்தி, தலைசுற்றல், பித்த மயக்கம், அஜீரண கோளாறு பிரச்னைகளால் அவதிப்பட நேரும். ஒரு சிலருக்கு சிறுநீரக கோளாறுகள், பித்தப்பை கல் பிரச்னைகள் தோன்றலாம்.

    தொழில், உத்யோகம்: வங்கி, இன்சூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை சார்ந்த பணியாளர்கள் சிரமம் காண்பார்கள். பால், கூல்டிரிங்ஸ், மினரல் வாட்டர், தின்பண்டங்கள், பெட்டிக்கடை போன்ற சில்லரை வணிகம் சிறக்கும்.

    பரிகாரம்: பிரதி மாதம் சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து சந்திர தரிசனம் செய்த பிறகு விநாயகரை வணங்கி போஜனம் செய்யவும். விநாயகர் அகவல் படித்து வருவது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசனம் செய்ய வளம் பெறுவீர்கள்.

    =================================================================
    கன்னி

    கன்னி: 11ம் இடத்துக்கு குரு பகவான் வரவிருப்பது கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான அம்சம். எடுத்த காரியங்களில் வெற்றியை பதிவு செய்வீர்கள். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். ஏழரை சனியால் இருந்த சிரமங்கள் குறையும். மிகவும் விசேஷமான பல பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் உயரும் வகையில் தனலாபம் இருக்கும். உண்மையான உழைப்புக்கான பலன் கிட்டும். நினைத்த காரியம் ஜெயமாகும். தனலாபத்தோடு ஸ்தான பலமும் உண்டாகும்.

    புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் கிட்டும். உங்களது முயற்சிகளும், செயல்களும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் அமைந்து உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். உடன்பிறந்த சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். முன்னோர்களின் சொத்து பிரச்னைகள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும்.

    நட்பு வட்டம் விரிவடையும். பொதுவாக இன்னும் ஒரு வருட காலத்திற்கு ஒவ்வொரு நாளும் உங்களுக்கு திருநாளாய் அமையும். ஜனன ஜாதகத்தில் பலமான திசை புக்தியை கொண்டவர்கள் சிறப்பான பெயரும், புகழும் அடைவார்கள். குறைந்த பலம் உடைய ஜாதகர் கூட குறிப்பிடத்தகுந்த நன்மை அடைவார்கள். இந்த குருப்பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு 90 சதவீதம் நற்பலன்களை தருகிறது.

    மாணவர்கள்: கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஞாபக மறதி தொந்தரவு அகலும். பள்ளி, கல்லூரிகளில் போட்டிகளில் முதலிடம் பிடிப்பர். காமர்ஸ், எகனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுண்டன்சி, கணிதம், மொழிப்பிரிவு துறை மாணவர்கள் சிறப்பிடம் பெறுவார்கள்.

    பெண்கள்: குடும்ப பெரியவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். வீட்டில் தங்கம், வெள்ளி பொருட்கள் சேரும். வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களில் உங்களது நிர்வாக திறன் வெளிப்படும். வாழ்க்கைத்துணைவருக்கு தக்க ஆலோசனை வழங்குவீர்கள். பெரிய பொறுப்புகளை செய்து முடித்து நற்பெயர் காண்பீர்கள்.

    ஆரோக்யம்: ஒரு சில சிறிய உடல் உபாதைகள் ஏற்படும். தைராய்டு, கொழுப்பு சார்ந்த பிரச்னைகள் உள்ளோர் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். எண்ணெய் பலகாரங்களை தவிர்ப்பது நல்லது.

    தொழில், உத்யோகம்: உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மருத்துவம், சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ள சரியான நேரம் இது. பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற சிறுதொழில் செய்வோர் முன்னேற்றம் காண்பார்கள்.

    பரிகாரம்: குருப்பெயர்ச்சி நாளன்று அருகில் உள்ள ஆலயத்தில் உங்களால் இயன்ற அன்னதானம் செய்யவும். வியாழன் தோறும் சாயிபாபாவை வணங்கி வாருங்கள். நேரம் கிடைக்கும் போது ஷீரடி சென்று சாயிநாத சுவாமியை தரிசனம் செய்ய சர்வ மங்களமும் உண்டாகும்.
    - See more at: http://rightmantra.com/?p=11957#sthash.V9meLTuo.dpuf

    இந்த போஸ்ட் முதல் முறை பதிவாகதது அறிந்து இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளது
    Last edited by soundararajan50; 20-06-2014 at 07:34 AM.

  2. Dear Unregistered,Welcome!

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Powered byvBSocial.com and Block Facebook