நாக பஞ்சமி;:--ஆஸ்தீக முனிவர் நாகங்களை வேள்வி தீயிலிருந்து காப்பாற்றியது இந்த பஞ்சமியில் தான். இதனால் தான் நாகங்களுக்கு பஞ்சமி உகந்த நாள் எனக் கருதபடுகிறது. பின் கண்ட மந்திரத்தை சொல்வது மிகவும் உத்தமம்


சர்வே நாகா ப்ரீயந்தாம் மேயே கேசித் ப்ருத்விதலே.
யே சே ஹோலி மரீசிஸ்தா யே சுந்தர திவி சம்ஸ்திதா:
யே நதீஷீ மஹாநாகா யே சரஸ்வதி காமின:
யே சே வாபி தடாகேஷு தேஷீசர்வேஷீ வை நம:

இந்த பூமியிலே, ஆகாசத்திலே, ஸ்வர்கத்திலே , சூரிய கிரணங்களிலே, சரோவர்களிலே ஏரி, கிணறு, குளங்களிலே ப்ரசன்னமாயிருக்கும் எல்லா நாகங்களுக்கும் நமஸ்காரம்.

இவ்வாறு நியமப்படி பஞ்சமியன்று நாகங்களுக்கு பூஜை செய்து ப்ராஹ்மண போஜனம் செய்வித்து அதன் பிறகு தானும் தன் குடும்பத்துடன் முதலில் இனிப்பையும் அதன் பிறகு மற்ற ப்ரசாதம் சாப்பிடுகிறானோ , அவன் இறந்த

பிறகு நாக லோகம் சென்று போக போக்யத்துடன் வாழ்கிறான். அதன் பின் த்வாபர யுகத்தில் மிகுந்த பராக்ரம சாலியாக ஆரோக்கியமாக பேரன் பேத்திகளோடு அரசாள்கிறான். .

சதுர்த்தியன்று ஒரு வேளை சாப்பிட்டு பஞ்சமியன்று நாக பூஜை செய்ய வேண்டும்..12 மாதம் சுக்ல பஞ்சமியும் பூஜை செய்ய வேண்டும். வ்ரத பாரணை செய்ய வேண்டும். ஏராளமான ப்ராஹ்மணர்களுக்கு தங்க நாகர் தானம் செய்ய வேண்டும்.

அனந்தன், வாசுகி, சங்கன், பத்மன், கம்பளன், கார்கோடகன், அஸ்வதர், த்ருதராஷ்டிரன், சங்கபாலன், காளியன், தக்ஷகன், பிங்களன் என்று 12 நாகங்களுக்கும் 12 மாதம் கிரமமாக பூஜை செய்ய வேண்டும்.

பூமியில் நாகங்களின் சித்திரங்களை தங்கத்தாலோ , மரத்தாலோ , மண்ணாலோ செய்ய வேண்டும். அரளி, தாமரை, மல்லிகை பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் .தூப, தீப , நைவேத்யம் செய்ய வேண்டும். கீரை, லட்டு ஆகியவைகளை ஐந்து ப்ராஹ்மணர்கள் உண்ண ச்செய்ய வேண்டும்.

பஞ்சமி யன்று பால், வெள்ளரிக்கய் சமர்பிக்க வேண்டும்.சிரவண சுக்ல பஞ்சமியன்று பால், தயிர், அறுகம்புல், சந்தனம் அக்ஷதை மற்றும் அநேக பதார்தங்களுடன் வணங்க வேண்டும்.

புரட்டாசி சுக்ல பஞ்சமியில் நாகங்களை பல விதமாக சித்தரித்து பலவிதமாக பூஜித்தால் தக்ஷகன் என்ற நாகத்தின் ஆசி கிடைக்கும்

.ஐப்பசி சுக்ல பஞ்சமியில் தர்ப்பை புல்லால் நாகர் செய்து தயிர், பால், ஜலத்தால் ஸ்நானம் செய்விக்க வேண்டும்.. கட்டி தட்டிய பால், கோதுமையினால் செய்த பலகாரம் சமர்பிக்க வேண்டும்

.இதனால் வாஸுகி த்ருப்தியடைவார். எந்த இடத்தில் :ஓம் குருகுலவே ஸ்வாஹாஎன்ற மந்திரம் ஜபிக்க படுகிறதோ அங்கு பாம்பு பயம் ஏற்படாது.

சஷ்டி விரத மஹிமையும் கார்த்திகேயரும்.:--

புரட்டாசி சஷ்டியின் போது எண்ணையினால் அபிஷேகம் செய்ய க்கூடாது..
புரட்டாசி சஷ்டி மிகவும் சிரேஷ்டமானது.இன்று செய்யும் ஸ்நானம், பூஜை, தானம் ஆகியவைகள் பன் மடங்கு பயனளிக்கூடியது.. இரவு பலகாரம் சாப்பிடவேண்டும்.

ஸப்தமி திதி;--ஸூர்யன்.
சப்தமி திதி சூரியனுக்கு மிகவும் பிடித்தமான திதி. உலகில் படைப்பை உருவாக்க ப்ருஹ்மா தன்னுடைய உடலை ஆண் பெண் என இரு கூறுகளாக்கி கொண்டார். அதி ஆண் பாதி ஸ்வாயம்புவ மனு என்றும்

பெண் பாதி சதரூபா என்றும் அழைக்கப்பட்டனர். .அதே சமயம் தன் மனதின் மூலம் பத்து மகன்களை உருவாக்கி அவர்கள் ப்ரஜைகளின் உற்பத்திக்கு காரணமாக இருக்க வேண்டும் என க்கருதினார். அவர்கள் அதனால்

ப்ரஜா பதிகள் என அழைக்கப்பட்டனர். அவர்களில் தட்சனும் ஒருவன்.. தட்சனுக்கு நிறைய பெண்கள் இருந்தனர். அதில் திதி அதிதி என்பவர்களை காஸ்யப ப்ரஜாபதிக்கு மணம் செய்வித்தான்.

அதிதிக்கு பிறந்தவனே ஆதித்யன். .. அதிதி காச்யபர் திருமணமானப் பின் ஒரு முட்டை (அண்டம்). உண்டாயிற்று. பல நாள் ஆனப் பின்னும் எந்த உயிர் ஜீவனும் அந்த முட்டையிலிருந்து வெளி வரவில்லை. ஆனால்

காஸ்யபரோ அந்த முட்டை(அண்டம்) இறக்கவில்லை (மிருதா) என்று சொன்னார். ஒரு நாள் முட்டையை உடைத்துக்கொண்டு சூரியன் பிறந்தான். மிருதா அண்டம் என்ற இரு வார்த்தைகளை உள்ளடக்கி அவன் பெயரை

மார்த்தாண்டன் என தந்தை அழைத்தார்..அதிதியின் பிள்ளை ஆதித்யன்.,
கதிரவன், பகலவன், பரிதி சூரியன்.. தேவ சிற்பி விச்வகர்மா மகள் சம்க்ஞா. .சூரியன் மனைவி ஆனாள் இவர்களுக்கு யமன், யமுனா, சாவர்னிமனு ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள்.

சம்க்ஞாவால் சூரிய பேரொளி தாங்க முடியவில்லை. அதனால் தன் நிழலைக்கொண்டு தன்னை போலவே உள்ள சாயா என்ற பெண்ணை உருவாக்கினாள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
சூரியனுக்கும் சாயாவுக்கும் க்ருதசர்வா, ச்ருதகர்மா, தப்தி என்ற குழந்தைகள் பிறந்தனர். . ச்ருத கர்மா தான் பின்னால் சனி கிரஹமாக மாறினதாக பவிஷ்ய புராணம் கூறுகிறது. க்ருதசர்வா சாவர்ணிமனுவாக வளர்ந்ததாக கூறுகிறது.

ஒரு நாள் யமுனைக்கும் தப்திக்கும் தகராறு ஏற்பட்டது. நீ நதியாக போ என இருவரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டனர்.. தேவ சிற்பி யான விஸ்வகர்மா தன்னிடமுள்ள கடசல் கருவியினால் சூரியனின் தேவையற்ற உபரி சக்தியை செதுக்கி எடுத்து விட்டார்..

சூரியனின் வெப்பம் குறைந்தது. வனப்பகுதிகளில் பெண் குதிரையாக சுற்றிகொண்டிருந்த சம்க்ஞா தேவியிடம் சூரியன் ஆண் குதிரையாக வடிவெடுத்து சென்றார். இப்போது இருவருக்கும் பிறந்தவர்கள் அஸ்வினி தேவர்கள். . இவர்கள் தேவ லோக மருத்துவர்களானார்கள்..

மஹா பாரத கதையின் படி நகுல சகாதேவர்களின் தந்தையர் அசுவினி தேவர்கள்..
சூரியனும் சம்க்ஞாவும் சூரிய மண்டலத்திற்கு திரும்பியது ஸப்தமி திதிதான். ஆதலால் சூரியனுக்கு சப்தமி திதி மிகவும் பிடிக்கும்.. இப்போது இங்கு பிறந்தவன் ரேவந்தன். . இவன் குஹ்யர்கள் ராஜ்ய மன்ன னாவான்.