மாசி மாதம் க்ருஷ்ண பக்ஷ சப்தமியன்று மங்கள கலசத்தை சதுரமான செங்கல்லால் அமைத்த வேள்வி மேடையில் சூர்ய நாராயணனை நன்றாக ஸ்தாபிக்க

வேண்டும்.. ஹோமத்தீயில் ஆஹூதிகள் செய்யவும் .ப்ராஹ்மண போஜனம், வேத பாடம்., நடனம், இசை போன்ற உற்சவாதிகள் செய்ய வேண்டும்.

சதுர்த்தியில் விரதமிருந்து , பஞ்சமியில் ஒரு போது சாப்பிட்டு சஷ்டி ஸப்தமியில் இரவு மாத்திரம் சாப்பிட்டு சப்தமி யன்று வேள்வி, ப்ராஹ்மண போஜனம் செய்விக்க வேண்டும். ப்ராஹ்மணருக்கும், பெளராணிகருக்கும்

நல்ல தக்ஷிணை தர வேண்டும். அஷ்டமி அன்று ரத ஓட்டம் நடை பெற வேண்டும். ரதம் நகரில் எல்லா வீதிகளிலும் சென்று வர வேண்டும். புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் சூரியனுக்கு மிகவும் பிடித்தமானது.

சூரிய பகவானுக்கு பேரிச்சம் பழம், , இளநீர், மாம்பழம், மாதுளம் பழம் சூரியனுக்கு பிடிக்கும். கோதுமை மாவில் வெல்லமும் நெய்யும் சேர்த்து நைவேத்யம் செய்தால் மிகவும் பிடிக்கும்..

ஆவணி சுக்ல சப்தமி யன்று அபய சப்தமி கொண்டாடப்படுகிறது.. தை மாதம் சுக்ல பக்ஷ சப்தமி அபய பக்ஷ சப்தமி வ்ரதம். கொண்டாடப்படுகிறது.புரட்டாசி மாதம் சுக்ல சப்தமி திதி அனந்த சப்தமி வ்ரதம்.மார்கழி சுக்ல பக்ஷ

சஷ்டியில் காமத விரதம். மார்கழி மாத சஷ்டியில் மந்தார சஷ்டி வ்ருதம். மந்தார பூக்களால் அருச்சிக்க வேண்டும் .ஐப்பசி மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி யன்று சர்க்கர சப்தமி வ்ருதம் .ப்ராஹ்மண்ருக்கு சக்கரை அல்லது இனிப்பு தானம் செய்ய வேண்டும்.

மார்கழி க்ருஷ்ண பக்ஷ சப்தமி: சர்வதா சப்தமி வ்ருதம் எனப்பெயர். உப்பு எண்ணைய் இரண்டையும் சாப்பாட்டில் ஒதுக்க வேண்டும் .பங்குனி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் த்ரிவர்க்க சப்தமி விரதம் எனப்படும்.,நந்தா ஸப்தமி என்றும் இதற்குப்பெயர். ஸந்தான ஸப்தமி என்றும் கூறுகின்றனர்


ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வரும் நாளில் செய்யும் விரதம் புத்ர விரதம்.. புத்ரன் வேண்டி செய்யும் விரதம். சூரிய பூஜை செய்து மஹாஸ்வமேத மந்திரத்தை சொல்லி இரவு படுக்க வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends8-3-2015 அன்று ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வருகிறது.

சுக்ல பக்ஷம், சப்தமி திதி ரோஹிணி நக்ஷத்திரம் ஞாயிற்றுகிழமை சேர்ந்து வந்தால் வட ஆதித்ய வார விருதம் எனப்பெயர் சாயங்காலம் வரை மஹாஸ்வமேத மந்திரம் ஜபிக்க வேண்டும்.. இந்த வருடம் இம்மாதிரி சேர்ந்து ஒரு நாளும் இல்லை..

..


.