Announcement

Collapse
No announcement yet.

பஞ்ச ஜோதிர்லிங்க தரிசனத்திற்கு ’ஏசி’ சிறப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பஞ்ச ஜோதிர்லிங்க தரிசனத்திற்கு ’ஏசி’ சிறப

    பஞ்ச ஜோதிர்லிங்க தரிசனத்திற்கு ’ஏசி’ சிறப்பு ரயில்!



    சென்னை: ராகு - கேது பெயர்ச்சிக்காக, பஞ்ச ஜோதிர் லிங்கங்களை தரிசிக்க, ’ஏசி’ சிறப்பு ரயிலை, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,)

    இயக்குகிறது. இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல உதவி பொது மேலாளர், ரவிகுமார் கூறியதாவது: ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு, அவுங்நாக்நாத் - ராகு ஸ்தல ஜோதிர்லிங்கம், பார்லி வைத்ய நாத் - சூரிய ஸ்தல ஜோதிர்லிங்கம், குருஸ்னேஸ்வர் - கேது ஸ்தல ஜோதிர்லிங்கம், திரையம்பகேஸ்வர் - சுக்ரன் ஸ்தல ஜோதிர்லிங்கம், பீம்சங்கர் - செவ்வாய் ஸ்தல ஜோதிர்லிங்கம் ஆகிய இடங்களுக்கு, முழுவதும், ’ஏசி’ வசதியுடைய ரயிலில் சென்று தரிசிக்க, ஏற்பாடு செய்துள்ளோம்.வரும், ஜூலை 4ம் தேதி, சென்னையில் இருந்து புறப்பட்டு, எட்டு நாட்கள் பயணம் முடிந்து, 11ம் தேதி திரும்பும் வகையில், சுற்றுலா அமைகிறது. இதில், ’லக்சரி, டீலக்ஸ், கம்பர்ட்’ என, மூன்று வகை வசதியுடைய பயணத்திற்கு, முறையே, 25,520 ரூபாய், 28,613 ரூபாய், 34,798 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. தென்னிந்திய சைவ உணவு, ’ஏசி’ ரயிலில் பயணம், தரிசன பகுதிகளில், ’ஏசி’ பேருந்து, மூவர் தங்கும் வசதியுள்ள, ’ஏசி’ அறை ஆகியவை, கட்டணத்தில் அடங்கும். பயணத்திற்கு, 90031 40681 என்ற மொபைல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
Working...
X