Announcement

Collapse
No announcement yet.

கோயில்களின் பொதுவான அமைப்பு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கோயில்களின் பொதுவான அமைப்பு




    அ) விமானம் :-
    இந்தியக் கோயில்களின் மிக முக்கியமான பகுதி அதன் கருவறையே. இதன் கூரைமீது அமைக்கப்படும் உயரமான அடுக்குகளை விமானம் என்று கூறுவர். விமானம் என்பது கருவறையின் அடி முதல் முடிவரையான அமைப்பினைக் கூறுவதாகும்.
    ஆ) விமானத்தின் பகுதிகள் :-
    அதிஷ்டானம், கால்ஃசுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்து}பி என ஆறு பகுததிகள்.
    1. அதிஷ்டானம்:- இது பாதபந்தம், பத்ம பந்தம் என இருவகைப்படும்.
    2. கால் அல்லது பாதம் :- அதிஷ்டானத்தின் மேலிருப்பது. இதனை பிட்டி என்றும் அழைப்பர்.
    3. பிரஸ்தரம் (கூரை) :- சுவரின் மீதுள்ள கருவரையை மூடும் அங்கம்.
    4. கிரீவம் :- சிகரத்தின் கழுத்தான இப்பகுதி சதுரமாகவோ, எண் பட்டையாகவோ, வட்டவடிவமாகவோ அமைக்கப்படும்.
    5. சிகரம் :- கிரீவத்துக்கு மேலுள்ள இப்பகுதியும் சதுரம், வட்டம், ஆறு அல்லது எண்பட்டை வடிவிலும் அமையும்.
    6. ஸ்து}பி :- சிகரத்திற்கு மேலுள்ள ஆறாவது பகுதி. இது கலசம் என்றும் அழைக்கப்படும்.
    மேலே கூறப்பட்ட ஆறு பகுதிகளுடன் கூடிய ஷடங்க விமானத்திற்கு ஒரு கருவறையே உண்டு. இத்துடன் ஒன்றன்மேல் ஒன்றாக மேலும் இரு கருவறைகளைச் சேர்த்தால் அஷ்டாங்க விமானம் உண்டாகும். இம்மூன்று கருவறைகளிலும் திருமாலின் நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலங்கள் அமைக்கப்பட்டு வழிபடுவர். (உதாரணம் :- உத்திரமேரூர்)
    இ) பலி பீடம் :- தாமரைப் பூக்களின் இதழ்களைக் கீழ்நோக்கி ஒடித்து நடுவிலுள்ள மொட்டு தெரியும்படி வைத்ததுபோல் உள்ள அமைப்பு பலிபீடமாகும்.
    ஈ) துவஜஸ்தம்பம் :-
    கொடிமரம் என்னும் துவஜஸ்தம்பம் 33 கனுக்களை உடையதாய், உச்சியில் 3 திருஷ்டிப் பலகைகள் உடையதாய் இருக்கவேண்டும். விழாக்காலங்களில் இதில் கொடியேற்றப்படும். இது பலி பீடத்திற்கு முன்பாகவோ அல்லது பின்புறமாகவோ இருக்கவேண்டும்.
    உ) கருடன் :- விஷ்ணு ஆலயங்களில் கொடிமரத்தை ஒட்டி கூப்பிய கைகளுடன் நிற்கும் கருடன் ஸந்நிதி அமைக்கப்பட்டிருக்கும்.
    எ) கோபுரங்கள் :-
    கோயிலின் நுழைவு வாயிலில் கோபுரம் கட்டப்படும். திருக்கோயிலின் உறுப்புக்களில் மிகப் பெரியதும், உயர்ந்ததுமாகும். இது நீண்ட சதுரமாயும், 3, 5, 7, 9 என்று பல தளங்களை உடையதாகவும் இருக்கும். சோழர்கள் விமானங்களை உயரமாகவும், கோபுரங்களைக் குட்டையாகவும் கட்டினர். பாண்டியர்கள் கோபுரங்களை மிகவும் உயரமாகவும், விமானங்களைத் தாழ்வாகவும் கட்டினர். நாயக்க மன்னர் ஆட்சியில்தான் மிக நெடிய கோபுரங்கள் கட்டப்பட்டன. “கோபுர தரிசனம் பாப விமோசனம்” என்ற பழமொழி எழுந்தது. கோபுரங்கள் மிக உயரமாக எழுப்பப்பட்டு மனிதன் உள்ளத்தில் மகோன்னத உணர்ச்சி து}ண்டப்பட்டது.
    ஏ) கோபுரத்தின் பாகங்கள் :-
    கோபுரத்தின் கீழ்ப்பகுதி கருங்கற்களால் அமைக்கப்படுகிறது. இது கல்காரம் என்று அழைக்கப்படுகிறது. இது ப்ரதமம், உபானம், கண்டம், பட்டிகை, அதிஷ்டானம், வேதிகை, கால், உத்தரம், எழுதகம், யாளம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. கோஷ்டங்களில் துவாரபாலகர் உருவங்கள் வைக்கப்படுகின்றன. இதிஹாஸ புராணக் கதைக் காட்சிகளும் உருவங்களாக அமைக்கப்பட்டிருக்கும். கோபுரத்தின் மேல் பகுதி சிகரம். இதில் வண்டிக்கூடுபோல் அமையும் பகுதி விமானம் என்றும் பாண்டியல் என்றும் குறிப்பிடப்படும். கோபுரத்தின் உச்சியின் நடுப்பகுதிக்குக் கபாலம் என்று பெயர். இதிலுள்ள துவாரம் ப்ரபஞ்ச வெளி எனப்படும். கோபுரத்தின் உச்சியில் இரு கோடியிலும் யாளி வேலைப்பாடுகள் “நாசி” என்று கூறப்படும்.
    ஐ) மண்டபங்கள் :-
    கோயில் கட்டட வளர்ச்சியில் மண்டபங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அர்த்த மண்டபம், மஹா மண்டபம், திவ்யமண்டபம், அபிஷேக மண்டபம், வாகன மண்டபம், அலங்கார மண்டபம், நிருக்த மண்டபம், கல்யாண மண்டபம், முக மண்டபம், நு}ற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபங்கள், துலாபார மண்டபம் என்று பல வகைகள் உருவாயின. மேலு:ம் விஜயமண்டபம்(8 து}ண்கள்), க்ஷ{த மண்டபம் (4-28 து}ண்;கள்), ஸாதாரண மண்டபம் (28 - 100 து}ண்கள்), வாஸ்து மண்டபம் (4 - 32) முதலியவைகளும் உள்ளன.
    மண்டபத்தின் முக்கியமான பகுதி து}ண்கள். மொட்டையான து}ண்களிலிருந்து கலை வேலைப்பாடுள்ள து}ண்கள் வரை பல வகைகள் உள்ளன. இத்து}ண்களில் அரசர்கள், அரசிகள், அமைச்சர்கள் உருவச் சிலைகள் இடம் பெறுகின்றன. மண்டபத்தை எழுப்பியவர்களின் உருவச்சிலைகளும், புராண வரலாற்றுச் சிற்பங்களும், குதிரை வீரர்கள், யாளிகள் ஆகிய உருவங்களும் து}ண்களில் செதுக்கப்பட்டன. ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டிய து}ண்கள் முதல் ஒரே கல்லால்ஆன மிக உயர்ந்த து}ண்கள் வரை பல்வகைத் து}ண்கள் காணப்படுகின்றன. து}ண்களைச் சுற்றி வேலைப்பாடில்லாத பாகங்களில் கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளன. து}ண்களின் அமைப்பை ஆராய்ந்து மண்டபத்தின் காலத்தை ஒருவாறு அறியமுடியும். து}ண்களிலுள்ள சில உருவங்கள் மக்களால் வழிபடப்பெற்று புகழ்பெறுகின்றன.
    து}ண்களின் வகைகள் :-
    சதுரப் பட்டைத் து}ண்கள், பட்டைத் து}ண்கள், உருள் பட்டைத் து}ண்கள், சிற்பத் து}ண்கள், இசைத் து}ண்கள், யாளித் து}ண்கள், கோபுரத் து}ண்கள், சிலை தாங்கித் து}ண்கள்.

    திருக்கோயிலை எங்கு எவ்வாறு அமைப்பது என்பது பற்றிய நியதிகள் ஆகம, வாஸ்த்து, சிற்ப நு}ல்களில் காணக் கிடைக்கின்றன.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: கோயில்களின் பொதுவான அமைப்பு

    You have given the general settings in temples which are interesting to read. One wonders how five hundred years ago

    they could construct these temples without sand cement and other essential building materials and how did the workers

    climb up the top. It is beyond our understanding how the architectural designs were carried out on the gopurams and how

    long it took to complete the construction.Grateful if you can get answers to the queries raised including how many workers, engineers, and architects

    were employed . Many thanks.

    PC RAMABADRAN

    Comment

    Working...
    X