Announcement

Collapse
No announcement yet.

ராகு கேது கோயில்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராகு கேது கோயில்கள்

    ராகு-கேது பெயர்ச்சியை ஒட்டி, கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம், வைத்தீஸ்வரன் கோவில் அருகிலுள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்களுக்குச் சென்று வரலாம்.
    நாகேஸ்வரம் வரலாறு: சுசீல முனிவரின் மகன் சுகர்மன், வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு அவனைத் தீண்டியது. தன் மகனை தீண்டிய தக்கனை, மானிடனாக பிறக்கும்படி முனிவர் சபித்தார். சாபவிமோசனம் பெற, தக்ககன், "பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் நாகநாதர் என்ற பெயரில்அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், "நாகநாதர்' என பெயர் பெற்றார்.
    யோகராகு: இங்குள்ள அம்பாள் கிரிகுஜாம்பிகை எனப்படுகிறாள். இங்கு துணைவியருடன் கூடிய ராகுவுக்கு தனி சந்நிதி உள்ளது. இதுதவிர விநாயகரும், யோகராகுவும் ஒரு சந்நிதியில் உள்ளனர். இவர்களை வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாகும். மேலும், இங்கு சரஸ்வதி, லட்சுமி, கிரிகுஜாம்பிகை ஒரே சந்நிதியில் உள்ளனர்.
    தோஷ பரிகாரம்: நாகதோஷம் உள்ளவர்கள் ராகுவுக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு கால நேரங்களில் பாலபிஷேகம் நடக்கும். ராகு பெயர்ச்சியன்று, ராகு பகவான் வீதியுலா செல்கிறார். நவக்கிரகத்தில் ஒன்று வீதியுலா செல்வது இங்கு விசேஷம்.
    கேது கோயில்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்திலுள்ள நாகநாதர் கோயில் கேது பரிகார ஸ்தலமாகும். தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்திய போதுவிஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக இத்தலத்தில் தவமிருந்தது. வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததுடன், அதன் வேண்டுதலை ஏற்று நாகநாதர் என்ற பெயரில் அமர்ந்தார். இங்கு கேது பகவானுக்கு சந்நிதி உள்ளது. கேதுவால்
    பாதிக்கப்படுவோர் எமகண்ட நேரத்தில் விசேஷ அபிஷேகம் செய்யலாம்.
    இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் திருநாகேஸ்வரம், மயிலாடுதுறையில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் கீழப்பெரும்பள்ளம்



    ஆன்மிக கட்டுரைகள்/ dhinamalar
Working...
X