ஒருவருக்கு திருமணம் நடப்பதை நிர்ணயிப்பவர் குரு. நீண்ட நாட்களாகத் திருமணம் தடைபடும் ஒருவரது ஜாதகத்தைப் பார்க்கும் ஜோதிடர், ""இவருக்கு வியாழ நோக்கம் வர இன்னும் இவ்வளவு காலம் இருக்கிறது. அதுவரை பொறுத்திருங்கள்,'' என்பார்.
குரு இருக்கும் ராசியை விட, அவர் பார்க்கும் ராசிகளுக்கே பலன் அதிகம். இதனையே குரு பார்க்க கோடி நன்மை என்பர். நவக்கிரகங்களில் குரு மட்டுமே பரிபூரணமான சுபகிரகம் ஆகும். இந்த கிரகத்தின் 5,7,9 ஆகிய பார்வைகள் முக்கியமானவை. இந்த பெயர்ச்சி காலத்தில், மிதுனத்தில் இருந்து 5,7,9 பார்வையால் துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். இந்த ராசியினருக்கு ஓராண்டு காலத்தில் திருமண யோகம் உண்டு. திருமணம் மட்டுமின்றி குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம், நல்ல குடும்பம், சொத்து வாங்குதல், பொன்பொருள் சேர்க்கை, ஆன்மிக சிந்தனை ஆகிய நற்பலன்களையும் குரு பார்வை தரும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends