தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1. வேங்கை அசன 200 கிராம்
2. வில்வவேர் பில்வமூல 200
3. சித்தாமுட்டி வேர் பலாமூல 200
4. சீந்தில்கொடி குடூசி 200
5. தண்ணீர் ஜல 12.800 லிட்டர்

இவைகளைக் கொதிக்க வைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டி அத்துடன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends1. நல்லெண்ணெய் திலதைல 800 கிராம்
2. பசுவின் பால் கோக்ஷீர 800

சேர்த்து அதில்

1. அதிமதுரம் யஷ்டீ 26.500 கிராம்
2. சுக்கு சுந்தீ 26.500
3. கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக் 26.500
4. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக் 26.500
5. நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக் 26.500

இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக்காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.


பயன்படுத்தும் முறை:

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும் குளிப்பதற்கு முன்

தீரும் நோய்கள்:

பொதுவான கண்ணோய்கள் (நயன ரோக), காது நோய்கள் (கர்ண ரோக), தலை நோய்கள் (சிரோரோக). வாத உபத்திரவத்தைக் குறைக்க வல்லது.

தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்த தைலத்தில் -அதிமதுரம் ,சுக்கு போன்றவைகள் உள்ளதாலும் -பொதுவாக தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்கவும் ,மண்டை பீனசம் வராமலும் தடுக்கவும் இந்த மருந்து உதவும்
கண்ணுக்கு ,காதுக்கு -நல்ல ஆற்றலை தரும் ..
தலை சார்ந்த நோய்களை -பீனசம் ,தலை வலி போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம் ..
அசன வில்வாதி புத்தியையும் -அறிவு கூர்மையையும் வளர்க்கும் ..
பிரமீ தைலம் ,சுக்குதைலம் ,பீனச தைலம் போன்ற பல தைலங்களில் சிறந்த தலையில் தேய்க்கும் மருந்துகளில் சிறந்த மருந்து