Announcement

Collapse
No announcement yet.

அனல் மின் திட்டத்தை முடக்க வெளிநாட்டு சத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அனல் மின் திட்டத்தை முடக்க வெளிநாட்டு சத

    தேவிபட்டினம் : ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில், 1600 மெகாவாட் மின் உற்பத்திக்கான அனல்மின் நிலையம் அமைப்பதற்காக நடந்த மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை போட சிலரை தூண்டிவிடும் வெளிநாடுகளின் சதியா இது; எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பண உதவி வருகிறதா என உளவுப்பிரிவினர் ரகசிய விசாரணையை துவக்கி உள்ளனர்.

    உப்பூர் அருகே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தலா 800 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு யூனிட் அனல்மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. 100 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை கொண்டு சூப்பர் கிரிடிக்கல் தொழில் நுட்பம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதற்காக 1342 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 962.50 ஏக்கர் நிலம், பட்டா விளைநிலங்கள். மற்றவை அரசு புறம்போக்கு நிலங்கள். இந்த திட்டத்திற்காக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம், தேவிபட்டினத்தில், நேற்று நடந்தது.உப்பூர், நாகனேந்தல், வலமானூர், திருப்பாலைக்குடி கிராம பொதுமக்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் நந்தகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்பு பொறியாளர் ராஜேந்திர பாபு, புதிய அனல் மின் நிலைய திட்ட சிறப்பு அலுவலர் கணபதி சங்கரன் ஆகியோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் செயல்பாடுகள், நன்மைகள் குறித்தும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற்பொறியாளர் சுல்தானா விளக்கினார்.பின்னர் பொதுமக்களில் பலர், இந்திட்டத்தை செயல்படுத்துவதால் விவசாயம், மீனவர்களின் வாழ்வாததாரம் கேள்விக்குறியாகும். வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. இத்திட்டத்தை மக்கள் வசிக்காத, வேறு பகுதியில் செயல்படுத்த வலியுறுத்தினர்.பதிவு செய்த மக்களின் கருத்துக்கள் அனைத்தும், மத்திய அரசிற்கு அறிக்கையாக அனுப்பப்பட்டு முடிவு செய்யப்படும் என, மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் ராஜேந்திரபாபு தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் சிலர், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆதரவாளர்கள். இதனால் உளவுப்பிரிவு போலீசார், இந்த கூட்டத்தை கண்காணித்தனர். நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு முட்டுக்கட்டை போட, சில தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் அனுப்பப்படும் பணம், இதுபோன்ற எதிர்ப்புகளுக்கு பயன்படுகிறதா என்பது குறித்தும் விசாரணையை துவக்கி உள்ளனர்.

    மாநில போலீஸ் அறிக்கை தயார்:



    பூவுலகின் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்கள் முகிலன்(ஈரோடு), ரமேஷ் கருப்பையா(சென்னை), கடலோர மீனவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் காந்திமதி, சேசு ரத்தினம், நிரபாரதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு நிர்வாகி அருளானந்தம் உள்ளிட்டோர் உப்பூரில் புதிய அனல் மின் நிலையங்கள் அமைய கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பூவுலகின் நண்பர்கள் குழு, புதிய அனல் மின் நிலையம் அமைவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வெளிநாடு பின்னணி உள்ளதா என்பது குறித்து மாநில அரசுக்கு, போலீசார் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.
Working...
X