தமிழகத்தில் 2000-ம் ஆண்டுகளின் துவக்கத்தில் ஏ.டி.எம். எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரை ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடித்ததாக சரித்திரம் இல்லை. அது சுலபமானதும் அல்ல.
ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதியில் ஐந்து அல்லது ஆறு அறைகளுக்குள் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்த அறைகள் அலாய் ஸ்டீலால் ஆன பெட்டகத்தால் சூழப்பட்டிருக்கும். பெட்டகத்தை லாக் செய்தால் நான்கு பக்கமும் தலா இரு லாக் வீதம் மொத்தம் எட்டு லாக் செய்யப்படும். இந்த லாக்கை எவ்வித கூரிய ஆயுதத்தைக்கொண்டும் அறுக்க முடியாது. மேலும் இந்தப் பெட்டகத்தை எந்திரத்தை வெல்டிங் ராடு உருக்க முற்பட்டால் அது மேன்மேலும் உறுதி அடையுமே தவிர உருகாது. சில தனியார் வங்கிகள் இந்த பெட்டகத்தை 24 மணி நேரம் உயர் வெப்பத்தில் வைத்து சோதித்தப் பின்பே வாங்குகின்றன. எனவே, யாரும் வீண் முயற்சியில் ஈடுபட்டு சிறைக்குள் கம்பி எண்ண வேண்டாம்.
தமிழகத்தில் இம்மையங்கள் துவக்கப்பட்டபோது டெபிட் அட்டையை மையத்தின் வாயில் கதவில் சொருகினால் மட்டுமே கதவு திறக்கும். கதவில் அட்டையை சொருகும்போதே உள்ளே இருக்கும் காமிரா கண்விழித்துக்கொள்ளும். காமிரா 90 நாட்கள் வரை இடைவிடாமல் பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ளும். ஆனால், இன்றைக்கு 90 % மையங்களில் வாயில் கதவு லாக் சிஸ்டம் செயல் இழந்துவிட்டன.
" தாய்லாந்து, மலேஷியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் வங்கி ஏ.டி.எம். மையங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு, கண்காணிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. யாராவது ஏ.டி.எம். எந்திரத்தை நகர்த்தினாலோ, அடித்தாலோ, பின்புறமாக தொட்டாலோ மறு நொடியே கண்காணிப்புக் குழுவினர், சம்பந்தப்பட்ட வங்கி பொறுப்பாளர் மூலம் அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுவிடும். தவிர, வழக்கமான காமிராவைத் தவிர ஆங்காங்கே இருக்கும் ரகசிய சிறப்பு காமிராக்கள் பல்வேறு கோணங்களில் கொள்ளையரை படம் பிடிக்கத் தொடங்கும். இவை தவிர, அந்த மையத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளில் அலாரம் ஒலிக்கத்தொடங்கும். மேற்கண்ட தொழில்நுட்பத்தை செயல்படுத்த கூடுதல் செலவு, 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் தேவை. எதிர்காலத்தில் மேற்கண்ட வசதிகள் கொள்ளப்படும்.
--- மாநிலம். தி இந்து . செப்டம்பர் 28, 2013.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends