சூரிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர் மாந்தாதா தர்மம் தவறாமல் ஆட்சி செய்து வந்தார், இருந்தாலும் ஒரு முறை அவரது நாட்டில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழையே பெய்யவில்லை. பஞ்சத்தால் மக்கள் படும் துயர் தாங்காத மன்னர் ஆங்கீரச முனிவரைத் தரிசித்து துயரம் நீங்க வழி கேட்டார்.

"மன்னா, உனது ராஜ்யத்தில் ஒருவன் தன் தர்மத்தைச் செய்யாமல், அடுத்தவன் தர்மத்தைச் செய்து கொண்டிருக்கிறான். அதனால்தான் உனது தேசத்தில் மழையே இல்லை. அவனைக் கொன்றுவிடு. உன் நாட்டில் மழை கொட்டும், துயரம் இருக்காது'' என்றார் ஆங்கீரசர்.

மன்னர் மறுத்தார். "வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். கொலை பாதகம் செய்ய என் மனம் இடம் தரவில்லை முனிவரே'' என்றான். "மன்னா, உன் கருணை உள்ளத்தைத் தொடுகிறது. புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பத்மநாபா ஏகாதசி.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடி. மழை பெய்யும்" என்றார் முனிவர். மன்னர், பத்மநாப விரதம் இருந்தார். வானம் திறந்து வளம் தரும் மழை பொழிந்து தேசத்தையே வளமாக்கும் ஏகாதசி இது.
Source:Malai malar