பெங்களூரு: கர்நாடகத்தில் அமைச்சரின் மருத்துவ செலவிற்கு அரசு செலவழித்த தொகை குறித்து அரசியல் கட்சிகள் பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளது.
கர்நாடக மாநில அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏக்களின் மருத்துவ செலவிற்காக அரசு சார்பில் அதிகபட்சமாக ஏழு லட்சம் ரூபாய் வரை ஒதுக்கப்பட்டு அதற்குள்ளாகவே செலவழி்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாநில முதல்வரின் சிறப்பு கவனத்தின் அடிப்படையில் அமைச்சர் ஒருவருக்கு அளித்த மருத்துவ செலவு கணக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ்கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருப்பவர் நடிகர் அம்ரீஷ்.இவர் சினிமா நடிகராக மாநில மக்களிடம் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறார். 62 வயதாகும் அவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி இருந்தார். இதனையடுத்து அரசு சார்பில் சிகிச்சை பெறுவதற்காக வௌிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டார். இதற்கு மாநில அரசும் ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடன் குடும்ப மருத்துவரும் சிங்கப்பூருக்கு புறப்பட்டனர். அங்கு ஆசியாவிலேயேபுகழ் பெற்ற மவுண்ட் எலி்சபெத் மருத்துவமனையி்ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான செலவு சுமார் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் என காண்பிக்கப்பட்டது.
இவ்வளவு பெரிய தொகைக்கும் மாநிலஅரசு ஒப்புக்கொண்டது. இது குறித்து மாநில முதல்வரிடம் கேட்டதற்கு அரசு விதிகளின் படி சிறப்பு கவனத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார். அரசாங்கத்திற்கு வரி செலுத்துவோரின் பணம் இப்படியாக விரயம் ஆவதற்கு எதிர்கட்சியான பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில் இது அரசின் கொள்கை முடிவு.இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது எனவும் ,இதுபோல் நடப்பது இது முதல் முறைஅல்ல எனவும் தெரிவித்தார்.
இது குறித்து நடிகரும் அமைச்சருமான அம்ரீஷை .தொடர்பு கொள்ள முயன்ற போது அவரிடம் கருத்து எதுவும் கேட்க முடியவில்லை
நடிகர் அம்ரீஷ் சிகிச்சை பெற்ற மருத்துவமனையான மவுண்ட் .எலிசபெத் மருத்துவமனை சிங்கப்பூரில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே புகழ்பெற்ற மருத்துவமனையாகும். மேலும் கடந்த 2011ம் ஆண்டில் உடல் நல குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் இதே மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் ஜனதா தள தலைவருமான குமாரசாமி தன் கட்சிகாரருக்கு எம்.எல்.சி சீட் கொடுப்பதற்கு 40கோடிரூபாய் லஞ்சம் கேட்ட தகவல் மாநில அரசில் பெரும் பிரச்னை அடங்குவதற்குள் தற்போது அமைச்சரின் சிகிச்சை விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Sourceinamalar

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends