Announcement

Collapse
No announcement yet.

தொகுதி வளர்ச்சி நிதியை செலவிடாத எம்.பி.க்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தொகுதி வளர்ச்சி நிதியை செலவிடாத எம்.பி.க்

    புதுடெல்லி, ஜூலை 21-

    கடந்த 15வது மக்களவையில் எம்.பி.க்களாக பதவி வகித்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை முழுமையாக செலவிடவில்லை என தெரியவந்துள்ளது.

    24க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவிகித தொகையை கூட செலவிடவில்லை என கூறப்படுகிறது. அவர்களில் கீர்த்தி ஆசாத், சத்ருகன் சின்கா மற்றும் மத்திய சுற்றுலா துறை மந்திரியான ஸ்ரீ பிராட் நாயக் ஆகியோர் மீண்டும் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மேற்கு வங்க எம்.பி.க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபாய் முறையாக செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டில்லியில் வெற்றி பெற்று எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட சந்தீப் தீக்ஷித், ரமேஷ் குமார் ஆகிய இருவரும் வெறும் 5 கோடி ரூபாயை மட்டுமே செலவிட்டுள்ளனர். முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மந்திரியான கிருஷ்ணா திரத் 8.16 கோடி ரூபாய் பணத்தை செலவிழத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனக்கு ஒதுக்கப்பபட்ட நிதியில் 20 சதவிகித நிதியை மட்டுமே செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Working...
X