Announcement

Collapse
No announcement yet.

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது ந

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • “அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது ந

    இது நடந்து 15 ஆண்டுகள் இருக்கும். போரூரை சேர்ந்த அந்த இளைஞருக்கு எங்கிருந்தோ ஒரு சிறிய ராகவேந்திரர் படம் அவரை தேடி வந்தது. ராகவேந்திரர் ஒரு மகான். மந்த்ராலயத்தில் அவருக்கு மூல பிருந்தாவனம் இருக்கிறது என்கிற விபரத்தை தவிர அவருக்கு ராகவேந்திரரை பற்றி எதுவும் தெரியாது. வீட்டில் பூஜையறையில் அதைவைத்துவிட்டு தன் வேலைகளை கவனிக்கலானார்.
    ஒரு நாள், வாகனத்தில் செல்லும்போது கீழே தவறி விழுந்துவிட அடி கிடி எதுவும் படவில்லை. ஆனால் இடது கையில் கட்டைவிரலுக்கு கீழே உள்ள பகுதி லேசாக வலிக்க ஆரம்பித்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வீங்க ஆரம்பித்துவிட்டது.
    அந்த பகுதியில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு சென்று காட்டியபோது, உள்ளே எலும்பு உடைந்திருக்கிறது என்று உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறிவிட்டார்கள்.


    தன் கையில் இருந்த பணம், வீட்டில் அப்பா அம்மா கொடுத்தது என்று பணத்தை புரட்டி அறுவை சிகிச்சை செய்ய அந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுகிறார்.
    அன்று வியாழக்கிழமை. இவருக்கு பிற்பகல் அறுவை சிகிச்சைக்கு நேரம் குறித்திருந்தார்கள். அறுவை சிகிச்சைக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு மருத்துவமனை ஊழியர் ஒருவர் வந்து இவரது இடது கை முழுக்க ஷேவிங் செய்து முடிகளை அகற்றிவிட்டனர்.
    கீழ்த்தளத்தில் உள்ள பார்மஸியில் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்கிக்கொண்டு இவர் லிப்ட்டில் மீண்டும் ஏறி வருகையில், லிப்ட் ஆப்பரேட்டர் இவரிடம், “தம்பி… நீ இங்கேயிருந்து உடனே போயிடு. ஏன், எதுக்குன்னு கேட்காதே. ஆப்பரேஷனும் வேணாம் ஒன்னும் வேணாம்…உடனே போயிடு” என்று கூறுகிறார்.
    இவருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் அவர் வார்த்தையை தட்ட முடியவில்லை. தன்னை மெஸ்மரிசம் செய்து கட்டளையிட்டதை போன்று அவ்வார்த்தைகள் இருந்தன.
    எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கவில்லை. ஆகையால் ஆப்பரேஷனை ஒரு வாரம் தள்ளிப்போடும்படியும் ஹாஸ்பிடல் தரப்பில் கூறிவிட்டு, மருந்துகளை ரிட்டர்ன் செய்துவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறிவிடுகிறார்.
    அப்புறம் தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது.
    மருந்துகளை ரிட்டர்ன் செய்த பணம் ரூ.1200/- கையில் இருந்தது. அந்தப் பணம் முழுவதையும் ஏனோ ராகவேந்திரருக்கே செலவு செய்ய வேண்டும் என்று அவருக்கு தோன்றியது. உடனே மந்த்ராலயம் செல்ல தீர்மானிக்கிறார்.
    வீட்டுக்கு சென்று ஒரு பையில் துணிமணிகளை எடுத்துக்கொண்டு நேராக போரூர் ஜங்க்ஷன் வந்துவிடுகிறார். மந்த்ராலயம் கிளம்பியாகிவிட்டது. ஆனால், எங்கே போகவேண்டும், எப்படி போகவேண்டும் உள்ளிட்ட எந்த விபரமும் அவருக்கு தெரியாது. நேரம் அப்போது மாலை 7.00 மணியிருக்கும்.
    இவர் தனியாக அந்த பரபரப்பான சந்திப்பில் நின்று கொண்டிருப்பதை ஒரு முதியவர் பார்க்கிறார். இவரிடம் வந்து “என்ன தம்பி? எங்கே போகணும்?” என்று வாஞ்சையுடன் விபரத்தை கேட்க, இவர் “மந்த்ராலயம்” போகணும் என்று கூறுகிறார்.
    “சரி என் கூட வா… நான் உன்னை மந்த்ராலயத்துக்கு ரயிலேற்றி விடுகிறேன்” என்று கூறி, இவரை சென்ட்ரல் அழைத்துச் சென்று, உடனிருந்து டிக்கட் எடுத்துக் கொடுத்து மந்த்ராலயம் ரோடு செல்ல பம்பாய் மெயிலில் ஏற்றி வழியனுப்புகிறார்.
    அந்த முதியவர் யார் என்ன என்கிற விபரம் இவருக்கு எதுவும் தெரியாது.
    செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது. (குறள் : 101)
    என்ற திருக்குறளுக்கு ஏற்ப, அவரை கையெடுத்து கும்பிடுகிறார்.
    மறுநாள் மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர தரிசனம். பக்தி பரவசம் பொங்க, ஆட்கொண்ட அண்ணலை, கருணைக் கடலை கண்ணீர் மல்க கும்பிடுகிறார்.
    மந்த்ராட்சதையை பெற்றுக்கொண்டு வெளியே வருகிறார். நேரே அன்னதான கூடம் சென்று அன்னதானத்தை சாப்பிடுகிறார்.
    மாலை மீண்டும் தரிசித்துவிட்டு கோவிலின் ஒரு ஓரத்தில் இரவு படுத்து தூங்குகிறார்.
    இரவு ஒரு கனவு. ஒரு பெரிய அலை இவரை மூழ்கடிப்பது போல வந்து பிறகு அப்படியே விலகிவிடுகிறது. பின்னணியில் ஒரு குரல் கேட்கிறது. “உனக்கு மட்டும் அறுவை சிகிச்சை நடந்திருந்தால் உன் கையே போயிருக்கும்”.
    காலை எழுந்தவுடன் புரிகிறது. இராகவேந்திரர் தான் தன்னை தடுத்தாட்கொண்டார் என்று. கைகளில் இப்போது வீக்கமும் இல்லை. வலியும் இல்லை.
    நினைத்துப் பாருங்கள். ஆபத்தில் சிக்கவிருந்த பக்தனை காப்பாற்றி, மாறுவேடத்தில் வந்து மந்த்ராலயத்திற்கு டிக்கட் எடுத்து தந்து ரயிலும் ஏற்றிவிட்டிருக்கிறார் குருராஜர். “அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும், அஞ்சேல் மனமே!” என்கிற பாடல் வரிகள் தான் எத்தனை உண்மை.
    அது முதல் ராகவேந்திரரின் தீவிர பக்தராக மாறிவிட்ட இவரது வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். (அடுத்த வாரம் அவை இடம்பெறும்.)
    - See more at: http://rightmantra.com/?p=12664#sthash.gYFpiONE.dpuf
Working...
X